பிற

யுவான் அல்மெய்டா

கியூபாவில் 1950களில் நடைபெற்ற கியூப புரட்சியின் முக்கியமான ஆரம்ப கட்டத் தலைவர்களில் ஒருவரும், கியூப புரட்சிக்குப் பின்னர் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவரும்,  கியூபாவின் துணை அதிபராக இருந்தவருமான யுவான் அல்மெய்டா பொஸ்க் (Juan Almeida Bosque) அவர்களின் பிறந்த நாள் (பிப்ரவரி 17, 1927 – செப்டம்பர் 11, 2009).

யுவான் அல்மெய்டா பொஸ்க்:-

ஹவானாவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவான் அல்மெய்டா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஹவானாவின் வறுமையான பகுதி ஒன்றில் பிறந்த அல்மெய்டா தனது 11 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு‍ கட்டிடத் தொழிலாளி ஆனார். ஹவானா பல்கலைக்கழகத்தில் 1952 இல் சட்டம் பயின்ற அல்மெய்டா, அங்கு பிடல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டார். அதே ஆண்டில் கியூபப் புரட்சியில் இணைந்து கொண்டார். 1953 பிடல் மற்றும் ராவுல் உடன் இணைந்து சண்டியாகோவில் மொன்காடா தாக்குதலில் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டார். 1955, மே 15 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு மெக்சிக்கோவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் 1956, நவம்பர் 25 இல் சே குவேரா, மற்றும் காஸ்ட்ரோக்களுடன் மொத்தம் 82 பேர்களாக கிரான்மா படகில் கியூபா வந்திறங்கினர். இவர்களில் 16 பேரே உயிர் தப்பினர். ஏனையோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்த தொடச்சியான போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

Related Posts