பிற

ஏழை அதிபர்

நகரத்தில் இருந்து விலகி நிற்கும் ஒரு சிறிய கிராமம். அதில் விவசாய நிலத்திற்கு நடுவே கிணறு உள்ள ஒரு ஒற்றை வீடு. அந்த ஒற்றை வீட்டில் வயதான தம்பதியர்.தங்களது மூன்று கால் நாய் மானூலியாவுடன் வசிக்கிறார்கள்.

அந்த நிலத்தில் பூக்களைவளர்த்து அதை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு அவர்களது செலவுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். கற்பனை செய்துபார்த்தால் மிகவும் ரம்மியாக இருக்கிறதா?. அடுத்த வரியை படித்தால் அந்த ரம்மியமான உணர்வு ஆச்சரியமான உணர்வாய்மாறிவிடும்.அது ஒரு நாட்டின் அதிபர் வீடு.

“ஜோஸ் அல்பெர்டோ பெபி முஜிகா  கர்னாடோ” (José Alberto “Pepe” Mujica Cordano)  சுருக்கமாக ஜோஸ் முஜிகா (José Mujica)  தென்னமேரிக்க கண்டத்தின்  வயிற்றுப் பகுதியில்இருக்கும் உருகுவே நாட்டின் அதிபர். உலகிலேயே ஏழை அதிபர் என்று அழைக்கப்படுபவர். தனது அதிபர் சம்பளத்தில் 90% ஏழைக் குழந்தைகளுக்கும் புதிதாய் தொழில் முனைவோருக்கும் கொடுத்து வருகிறார். அதிபருக்குத் தரப்படும் அரசு மாளிகையைவேண்டாம் என்று சொல்லிவிட்டு செனட்டரான தனது மனைவி லூசியா டொபொலன்ஸ்கியுடன் கிராமத்து வீட்டில் வசிக்கிறார். உருகுவே மக்கள் அவரது எளிமையைக் கண்டு வியந்து நிற்கும் அதே வேளையில் கிறுக்குத்தனம் என்றும் சிலர்கிண்டல் அடித்தார்கள்.  அவர்களுக்கு ஜோஸ் முஜிகா சொன்ன பதில்

“உங்களுக்கு நான் ஒரு பைத்தியக்கார  கிழவனைப் போல் தெரியலாம் ஆனால் இது என்னுடைய  சுதந்திரத் தேர்வு. என்னுடையவாழ்வின் பெரும்பாலான பகுதியை நான் இப்படித்தான் கழித்தேன். என்னை ஏழை அதிபர் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்குஅப்படி ஒரு போதும் தோன்றியதில்லை. ஆடம்பரமான வாழ்கைக்காக உழைக்கிறவர்கள் மட்டுமே ஏழைகள். என்னிடம்இருப்பதை வைத்தே என்னால் வாழமுடியும்”

முஜிகா வாழ்க்கை தொடங்கியதே துன்பத்தில் இருந்து தான். முஜிகா சிறுவனாய் இருந்த போது சிறுவிவசாயியான அவரது அப்பாகடனில்  தனது நிலத்தை இழந்தார்.அந்த கவலையிலேயே முஜிகாவின் ஐந்தாவது வயதில் அவர் இறந்து போனார். அம்மாவின் அப்பா வீட்டில் வளரவேண்டிய சூழ்நிலை. ஏழை விவசாயியான அவரால் அவர்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தாத்தாவின் நிலத்தில் வேலை செய்தது போக  மற்றவர்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டி வந்தது. ”ஏன் நாம் ஏழையாகஇருக்கிறோம்?  மற்றவர்கள் அவர்கள் நிலத்தில் மட்டும் உழைக்க நாம் மட்டும் ஏன் இரண்டு நிலங்களிலும் வேலை செய்யவேண்டி இருக்கிறது?. சிறுவன் முஜிகாவிற்குள் நிறைய கேள்விகள் முளைத்தன. மீசை முளைக்கும் வயதில் அந்த கேள்விகள் விருட்சமாக எழுந்தன. அவை அவரை  அரசியல் பக்கம் ஈர்த்தன.

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த புரட்சி தென் அமெரிக்க கண்டம் முழுவதும் பற்றி படரஆரம்பித்தது. உருகுவேயில் பல இளைஞர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு கொரில்லா போராளிகளானார்கள். அவர்களில் முஜிகாவும் ஒருவர். அந்த போராட்ட வாழ்வில் அவர் ஆறு முறை  குண்டடி வாங்கியுள்ளார்.  மரணத்தில் இருந்துமீண்டு வந்து அதே வீச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். போராட்டக்காரர்கள் உருகுவேயின் தலைநகர் அருகில் உள்ள பாண்டாநகரத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது 1971 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட முஜிகா  ஆண்டுகள் பதினான்கு ஆண்டுகள்  சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்தவாறு ஜனநாயகத்தை அடைய போராடும் டுபாமராஸ் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கினார். 1985 ஆம் ஆண்டு உருகுவேயில்ஜனநாயகம் திரும்பியது. ஜோஸ் முஜிகோவும் விடுதலை ஆனார்.

ஜனநாயகத்தை பலப்படுத்தும் விதமாக உருகுவேயின் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும்ஒன்றிணைந்தன. அதன் சார்பாக முஜிகோ போட்டியிட்டார். செனட்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிளப்பிய விவாதங்கள்பல மாற்றங்களை கொண்டு வந்தன. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று விவசாய துறை அமைச்சர் ஆனார். விவசாயிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தார். உற்பத்தி அதிகரித்தது. ஜோஸ்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெருகியது. அடுத்து அதிபர் தேர்தலில் நின்றார் 48 சதவிதங்கள் பெற்றுபெரும் வெற்றி. அதன் பிறகு அவர் செய்தது எல்லாம் மக்களுக்காக மக்களுக்காக மக்களுக்காக மட்டுமே.

அனைத்து குழந்தைகளுக்கு கல்வியும் கணினியும் இலவசம் என்பதில் இருந்து ஆரம்பித்தது அவரது திட்டங்கள். தொலைத்தொடர்பு துறையில் இருந்து எரிசக்தி வரை முக்கியமானவற்றை எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருக்கும் இந்தியாவே அமெரிக்காவின் கலாச்சாரத்தால் தாக்குண்டு இருக்கும் போதுபக்கத்தில் இருக்கும் உருகுவேயை தன் கலாச்சாரத்தில் இருந்து நழுவவிடாமல் பார்த்துக் கொண்டார். ஊழல் என்பதே கிட்ட தட்டஇல்லை எனும் நிலைக்கு கொண்டுவந்தார். இடதுசாரித் தலைவர்கள் என்றாலே நிராகரிக்கும் அமெரிக்க பத்திரிகைகள் கூடஇவரையும் இவரது எளிமையையும் வாழ்த்தின.

ஆனால் இவர் மேலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. கடைசியாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் பெரும்சர்ச்சைகளைக்  கிளப்பியுள்ளன. தன்பால் சேர்க்கையாளர்களை அனுமதித்தது. கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று கூறியது. இதை எல்லாம் விட பெரிய தவறாக கருதப்படுவது போதைப் பொருளை அரசு விற்கும் என்றது தான். அதற்கு அவர்

இளைஞர்கள் போதைப் பொருள் விற்பவர்களிடம்  கிட்ட தட்ட  அடிமைகளாகவே ஆகிவிட்டனர்.அந்த விற்பனையாளர்கள்பணத்திற்காக விற்பதில்லை மாறாக குற்றச் செயல் செய்யச் சொல்லி அதை செய்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர்.அதனால் தான் அரசே அதை விற்கும் நிலைக்கு வந்துள்ளது. முதலில் இளைஞர்களை அந்த விற்பனையாளர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழை அதிபர்

நகரத்தில் இருந்து விலகி நிற்கும் ஒரு சிறிய கிராமம். அதில் விவசாய நிலத்திற்கு நடுவே கிணறு உள்ள ஒரு ஒற்றை வீடு. அந்த ஒற்றை வீட்டில் வயதான தம்பதியர்.தங்களது மூன்று கால் நாய் மானூலியாவுடன் வசிக்கிறார்கள். அந்த நிலத்தில் பூக்களைவளர்த்து அதை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு அவர்களது செலவுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். கற்பனை செய்துபார்த்தால் மிகவும் ரம்மியாக இருக்கிறதா?. அடுத்த வரியை படித்தால் அந்த ரம்மியமான உணர்வு ஆச்சரியமான உணர்வாய்மாறிவிடும்.அது ஒரு நாட்டின் அதிபர் வீடு.

“ஜோஸ் அல்பெர்டோ பெபி முஜிகா  கர்னாடோ”  சுருக்கமாக ஜோஸ் முஜிகா  தென்னமேரிக்க கண்டத்தின்  வயிற்றுப் பகுதியில்இருக்கும் உருகுவே நாட்டின் அதிபர். உலகிலேயே ஏழை அதிபர் என்று அழைக்கப்படுபவர். தனது அதிபர் சம்பளத்தில் 90% ஏழைக்குழந்தைகளுக்கும் புதிதாய் தொழில் முனைவோருக்கும் கொடுத்து வருகிறார். அதிபருக்குத் தரப்படும் அரசு மாளிகையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு செனட்டரான தனது மனைவி லூசியா டொபொலன்ஸ்கியுடன் கிராமத்து வீட்டில் வசிக்கிறார். உருகுவே மக்கள் அவரது எளிமையைக் கண்டு வியந்து நிற்கும் அதே வேளையில் கிறுக்குத்தனம் என்றும் சிலர்கிண்டல் அடித்தார்கள். அவர்களுக்கு ஜோஸ் முஜிகா சொன்ன பதில்

“உங்களுக்கு நான் ஒரு பைத்தியக்கார  கிழவனைப் போல் தெரியலாம் ஆனால் இது என்னுடைய  சுதந்திரத் தேர்வு. என்னுடையவாழ்வின் பெரும்பாலான பகுதியை நான் இப்படித்தான் கழித்தேன். என்னை ஏழை அதிபர் என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி ஒரு போதும் தோன்றியதில்லை. ஆடம்பரமான வாழ்கைக்காக உழைக்கிறவர்கள் மட்டுமே ஏழைகள். என்னிடம்இருப்பதை வைத்தே என்னால் வாழ முடியும்”

முஜிகா வாழ்க்கை தொடங்கியதே துன்பத்தில் இருந்து தான். முஜிகா சிறுவனாய் இருந்த போது சிறுவிவசாயியான அவரது அப்பாகடனில்  தனது நிலத்தை இழந்தார். அந்த கவலையிலேயே முஜிகாவின் ஐந்தாவது வயதில் அவர் இறந்து போனார். அம்மாவின் அப்பா வீட்டில் வளரவேண்டிய சூழ்நிலை. ஏழை விவசாயியான அவரால் அவர்களை பார்த்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தாத்தாவின் நிலத்தில் வேலை செய்தது போக  மற்றவர்கள் நிலத்திலும் வேலை செய்ய வேண்டி வந்தது. ”ஏன் நாம் ஏழையாகஇருக்கிறோம்?  மற்றவர்கள் அவர்கள் நிலத்தில் மட்டும் உழைக்க நாம் மட்டும் ஏன் இரண்டு நிலங்களிலும் வேலை செய்யவேண்டி இருக்கிறது?. சிறுவன் முஜிகாவிற்குள் நிறைய கேள்விகள் முளைத்தன. மீசை முளைக்கும் வயதில் அந்த கேள்விகள் விருட்சமாக எழுந்தன. அவை அவரை  அரசியல் பக்கம் ஈர்த்தன.

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த புரட்சி தென் அமெரிக்க கண்டம் முழுவதும் பற்றி படரஆரம்பித்தது. உருகுவேயில் பல இளைஞர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு கொரில்லா போராளிகளானார்கள். அவர்களில் முஜிகாவும் ஒருவர். அந்த போராட்ட வாழ்வில் அவர் ஆறு முறை  குண்டடி வாங்கியுள்ளார்.  மரணத்தில் இருந்து மீண்டுவந்து அதே வீச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். போராட்டக்காரர்கள் உருகுவேயின் தலைநகர் அருகில் உள்ள பாண்டா நகரத்தை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது 1971 ஆம் ஆண்டுகைது செய்யப்பட்ட முஜிகா  ஆண்டுகள் பதினான்கு ஆண்டுகள்  சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்தவாறு ஜனநாயகத்தை அடைய போராடும் டுபாமராஸ் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கினார். 1985 ஆம் ஆண்டு உருகுவேயில் ஜனநாயகம் திரும்பியது. ஜோஸ் முஜிகோவும் விடுதலை ஆனார்.

ஜனநாயகத்தை பலப்படுத்தும் விதமாக உருகுவேயின் அனைத்து ஜனநாயக கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்தன. அதன் சார்பாக முஜிகோ போட்டியிட்டார். செனட்டுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கிளப்பிய விவாதங்கள்பல மாற்றங்களை கொண்டுவந்தன. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று விவசாய துறை அமைச்சர் ஆனார். விவசாயிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்தார். உற்பத்தி அதிகரித்தது. ஜோஸ்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெருகியது. அடுத்து அதிபர் தேர்தலில் நின்றார் 48 சதவிதங்கள் பெற்று பெரும் வெற்றி. அதன் பிறகு அவர் செய்தது எல்லாம் மக்களுக்காக மக்களுக்காக மக்களுக்காக மட்டுமே.

அனைத்து குழந்தைகளுக்கு கல்வியும் கணினியும் இலவசம் என்பதில் இருந்து ஆரம்பித்தது அவரது திட்டங்கள். தொலைத்தொடர்பு துறையில் இருந்து எரிசக்தி வரை முக்கியமானவற்றை எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். பல ஆயிரம் மைல்கள் தள்ளி இருக்கும் இந்தியாவே அமெரிக்காவின் கலாச்சாரத்தால் தாக்குண்டு இருக்கும் போதுபக்கத்தில் இருக்கும் உருகுவேயை தன் கலாச்சாரத்தில் இருந்து நழுவவிடாமல் பார்த்துக் கொண்டார். ஊழல் என்பதே கிட்ட தட்டஇல்லை எனும் நிலைக்கு கொண்டு வந்தார். இடதுசாரித் தலைவர்கள் என்றாலே நிராகரிக்கும் அமெரிக்க பத்திரிகைகள் கூட இவரையும் இவரது எளிமையையும் வாழ்த்தின.

ஆனால் இவர் மேலும் விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. கடைசியாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் பெரும் சர்ச்சைகளைக்  கிளப்பியுள்ளன.  தன்பால் சேர்க்கையாளர்களை அனுமதித்தது. கருக்கலைப்பு குற்றம் அல்ல என்று கூறியது. இதை எல்லாம் விட பெரிய தவறாக கருதப்படுவது போதைப் பொருளை அரசு விற்கும் என்றது தான். அதற்கு அவர்

“இளைஞர்கள் போதைப் பொருள் விற்பவர்களிடம்  கிட்ட தட்ட  அடிமைகளாகவே ஆகிவிட்டனர். அந்த விற்பனையாளர்கள் பணத்திற்காக விற்பதில்லை மாறாக குற்றச் செயல் செய்யச் சொல்லி அதை செய்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர்.அதனால் தான் அரசே அதை விற்கும் நிலைக்கு வந்துள்ளது. முதலில் இளைஞர்களை அந்த விற்பனையாளர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். போதை பொருட்களில் இருந்து காப்பாற்றுவது மிக எளிது” என்று கூறினார்.

ஆனால் அதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த எதிர்ப்புகள் பற்றி எல்லாம் அவர் கவலைப் படவில்லை 2015 ஆம் ஆண்டோடு அவரது பதவிக்காலம் முடிகிறது. பதவிக் காலம் முடிந்தவுடன் முப்பத்தில் இருந்து நாற்பது குழந்தைகளை தத்து எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

”அவர்களுக்குவிவசாயத்தையும் வாழ்க்கையையும் கற்றுத்தரப் போகிறேன். எனது கடைசி காலங்களை அவர்களுடனே கழிப்பேன்” என்றஅவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் ஜோஸ், நேரடி அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

“உலகத்திற்கு எப்பொதுமே புரட்சி தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். புரட்சி என்பது துப்பாக்கிகளும் வன்முறைகளும்அல்ல.புரட்சி என்பது உங்கள் சிந்தனையை மாற்றுவது. கன்பூசியசமும் கிறிஸ்துவமும் கூட புரட்சி தான்” என்கிற அவரது புகழ்பெற்ற வாசகம்  அவரைப் பற்றி அறிந்த ஒவ்வொரு  இளைஞனையும் மாற்றத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.

Related Posts