பிற

ஹொசே மார்த்தி

கியூபா ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து‍ விடுதலை பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்ததவரு‍ம், கொலம்பசால் தொடங்கி வைக்கப்பட்ட காலனியாதிக்கத்தையும் – அதற்கு எதிராக பொலிவரால் தொடங்கி வைக்கப்பட்ட லத்தீன் அமெரிக்கக் கண்டத்தின் விடுதலைக்கான போராட்டத்திற்கு‍ விதையாக இருந்தவரும், மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் சிந்தனையாளரும், இலத்தீன் அமெரிக்க வரலாற்றில் ஜனநாயகத்தை எடு‍த்தியம்பினவரும், மகத்தான கவிஞரும் எழுத்தாளருமான ஹொசே ஜுலியன் மார்த்தி பெரஸ் ( JOSE JULIAN MARTI PEREZ ) இன் பிறந்த நாள் இன்று‍ (28, ஜனவரி 1853).

அவர் கியூபாவின் ஹவானாவில் MARIANA MARTI NAVARO என்னும் ஸ்பானிய சிப்பாய்க்கு மகனாகப் பிறந்தார். 19, மே 1895 அன்று தனது 42 ஆவது வயதில் விடுதலைப் போரில் அவருக்கு ஏற்பட்ட வீர மரணமானது இலத்தீன் அமெரிக்கவின் புதுயுகத் தொடக்கம் என மதிக்கப்படுகிறது.

மார்த்தியின் நாட்டுப்பற்றும் இலக்கியப் பணியும் இரட்டைப் பிறவிகள். தனது பதினைந்தாவது வயதில், 1868 இல் கியூப சுதந்திரத்துக்கான பத்தாண்டுப் போருக்கு சற்று பின்னர், ஸ்பானிய கொடுங்கோன்மையினை முதன் முதலில் எதிர் கொண்டார். சட்டம், தத்துவம், மற்றும் இலக்கியத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

மார்த்தியின் மேற்கோள்கள்:-

“ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்றும் வெளிச்சமும் தேவையாய் இருப்பது போலவே கவிதையும் தேவைப்படுகிறது”

– மார்த்தி

 “புரட்சிகர கால கட்டத்தில் எல்லாமும் புரட்சித்தீயில் ஆகுதி ஆக வேண்டும் கலை ஆயினும் கூட!”

– மார்த்தி

“எனது கவிதை வளரும்
நானும் வளருவேன்
புற்களுக்கு அடியில்!”

– மார்த்தி

மார்த்தியின் படைப்புகள்:-

ஆண்டு மாதம் படைப்பு தமிழாக்கம்
1869 ஜனவரி Abdala அப்தலா
1869 ஜனவரி 10 de octubre அக்டோபர் 10
1871 El presidio político en Cuba கிபாவின் அரசியல் சிறை
1873 La República Española ante la revolución cubana ஸ்பானிய குடியரசும் கியூப புரட்சியும்
1875 Amor con amor se paga காதலோடு காதலைத் திருப்பிக்கொடு
1882 Ismaelillo ஸ்மயிலிலோ
1882 பிப்ரவரி Ryan vs. Sullivan ரையானும் சல்லிவனும்
1882 பிப்ரவரி Un incendio நெருப்பு
1882 ஜீலை El ajusticiamiento de Guiteau குயீடுவின் மரனதண்டனை
1883 ஜனவரி Batallas de la Paz அமைதி போராட்டம்
1883 மார்ச் Que son graneros humanos
1883 மார்ச் Karl Marx ha muerto கார்ல் மார்க்சு இறந்துவிட்டார்
1883 மார்ச் El Puente de Brooklyn புரூக்ளின் நகரத்து பாலம்
1883 செப்டம்பர் En Coney Island se vacía Nueva York நியூ யோர்க்கின் கொனேத் தீவு காலியாக இருந்தது
1883 டி‍சம்பர் Los políticos de oficio தொழில்முறை அரசியல்வாதிகள்
1883 டி‍சம்பர் Bufalo Bil
1884 ஏப்ரல் Los caminadores நடந்து செல்பவர்கள்
1884 நவம்பர் Norteamericanos வட அமெரிக்கர்கள்
1884 நவம்பர் El juego de pelota de pies கால் பந்தாட்டம்
1885 Amistad funesta நட்பின் சேதம்
1885 ஜனவரி Teatro en Nueva York நியூ யோர்க்கின் திரை அரங்கம்
1885 மார்ச் Una gran rosa de bronce encendida
1885 மார்ச் Los fundadores de la constitución அரசியலமைப்பின் தந்தை
1885 ஜீன் Somos pueblo original நாங்களே உன்மையான குடிகள்
1885 ஆகஸ்டு Los políticos tiene sus púgiles
1886 மே Las revueltas anarquistas de Chicago
1886 செப்டம்பர் La ensenanza கற்பித்தல்
1886 அக்டோபர் La Estatua de la Libertad சுதந்திர தேவி சிலை
1887 ஏப்ரல் El poeta Walt Whitman கவிஞர் வால்ட் வைட்மென்
1887 ஏப்ரல் El Madison Square மாடிசன் சதுக்கம்
1887 நவம்பர் Ejecución de los dirigentes anarquistas de Chicago சிகாகோ அரசின்மைவாதிகளின் மரண தண்டனை
1887 நவம்பர் La gran nevada பெரிய வெண்பனி
1888 மே El ferrocarril elevado உயர்மட்டதொடர்வண்டிப் பாதை
1888 ஆகஸ்டு Verano en Nueva York நியூ யோர்க்கின் கோடை காலம்
1888 நவம்பர் Ojos abiertos, y gargantas secas திறந்த கண்களும், வறண்ட தொண்டையும்
1888 நவம்பர் Amanece y ya es fragor விடியலும் அதன் முழக்கமும்
1889 La edad de oro பொற்காலம்
1889 மே El centenario de George Washington ஜியார்ஜ் வாசிங்டனின் நூற்றாண்டு நினைவு
1889 ஜீலை Bañistas
1889 ஆகஸ்டு Nube Roja சிகப்பு மேகம்
1889 செப்டம்பர் La caza de negros கருப்பர்களின் வேட்டை
1890 நவம்பர் El jardín de las orquídeas மந்தாரைத் தோட்டம்
1891 அக்டோபர் Versos Sencillos எளிய பாடல்
1891 ஜனவரி Nuestra América நமது அமெரிக்கா
1894 ஜனவரி A Cuba கியூபா
1895 Manifiesto de Montecristi மவுண்டே கிரிசுடி கொள்கை பிரகடனம் (தளபதி கோமாசோடு இனைந்து தயாரித்தது)

Related Posts