English அரசியல்

இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி – 100……

சோவியத் புரட்சிக்கு பின் ஆசியாவில் உருவான முதல் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெருமையை கொண்டுள்ளது இந்தோனேசியன் கம்யூனிஸ்ட் கட்சி. 1920 மே மாதம் 23 தேதி உருவான இக்கட்சி உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக விளங்கியது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் முறையே முதல் இரண்டு இடங்களில் இருந்து வந்தது.

அக்டோபர் புரட்சியிலிருந்து ஊக்கம் பெற்று டச் சோசலிஸ்டுகளும் இந்தோனேசிய மக்களும் டச் காலனிய அரசுக்கெதிராக அணி திரண்டனர். இவர்களின் தலைமையில் சோவியத் மாதிரியில் இந்தோனேசியாவின் பல தீவுகளில் soldiers and sailors Soviets உருவாக்கப்பட்டது.

சோசலிச குழுக்களாக மட்டும் இருந்த இவர்கள் போல்ஷெவிக் புரட்சிக்கு பின்னரான மாற்றங்களினால் 1920ல் கம்யூனிஸ்ட் கட்சியாக மாறி கம்யூனிஸ்ட் ஐக்கியத்தில் பங்கு பெறவும் செய்தனர்.

1920 களின் தொடக்கத்தில் Soviet Republic of Indonesia உருவாக்கும் பொருட்டு தொழிலாளர் சங்கம் உருவாக்க வேண்டியதின் தேவையை உணர்ந்து செயல்பட துவங்கினார்கள். இது டச் அரசை அச்சமூட்டியது. சதி திட்டங்கள் மூலமாக கட்சியின் செயல்பாடுகளை முன்னமே அறிந்து அதை இரும்பு கரம் கொண்டு அடக்கியது டச் அரசு. 1926 ல் புரட்சியின் முதல் முயற்சி தோல்வியடைந்து கட்சி தோழர்கள் அனைவரும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளானார்கள்.

1945 ல் இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வியடைந்த பின் உலக அரசியலில் இந்தோனேசியா கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலுபெற்று டச் அரசுக்கெதிரான விடுதலை போரில் முக்கியமான பங்கு வகித்தது. டச் காலனியத்திற்கு எதிரான போராட்டத்தில் 1948ல் இந்தோனேசியாவின் இடது- வலதுசாரி இயக்கங்களிடையே நடந்த கடுமையான மோதல்கள் கட்சியை மீண்டும் தலைமறைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலுக்கு தள்ளியது.

ஆனால் 1952ல் புதிய தலைமையின் கீழ் கட்சி மீண்டு வந்து தங்கள் இருப்பை பகிரங்கமாக பிரகடனம் செய்தது. 1965 ம் ஆண்டு 35 லட்சம் உறுப்பினர்களையும் கோடிக் கணக்கான ஆதரவாளர்களையும் கொண்டுள்ள மிக பெரிய அரசியல் சக்தியாக உருவானது. உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது.

அன்றைய இந்தோனேசியா ஜனாதிபதி சுகார்னோ ஏகாதிபத்திய சக்திகளுடன் உண்டான முரண் காரணமாக சோசலிச குழுக்களும் அரசும் சமாதான உடன்படிக்கையில் ஏற்பட்டது. அதன் பின்னர் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்து வந்தார்.
சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவின் ஆதரவுடன் ஏகாதிபத்திய எதிர்ப்பை ஆதரிப்பதோடு மட்டுமின்றி வெளியுறவு கொள்கைகளில் மாற்றமும் கொண்டு வந்தது.கம்யூனிஸ்ட் கட்சிகளின் மக்கள் செல்வாக்கும் பலமும் அமெரிக்க போன்ற நாடுகள் பெரும் எரிச்சலூட்டியுது.

அந்நாட்டின் ராணுவத்தில் கூட இடது வலது அணிகள் உருவானது. அதிகாரமிக்க வலதுசாரி அதிகாரிகளை நீக்க வேண்டும் என்கிற இலட்சியத்தோடு 1965 ல் ஒரு கலவரம் உருவாகி தோல்வியடைந்தது. கம்யூனிஸ்டுகளை ஒழித்து கட்ட
இந்த சூழலை பயன்படுத்த வலதுசாரிகள் திட்டம் தீட்டி சுகார்னோவின் ஆட்சியை கவிழ்த்தது. வலதுசாரி அணியின் தலைவர் சுஹார்த்தோ அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போன்ற நாடுகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினான்.

கம்யூனிசத்தை ஒழிக்க கம்யூனிஸ்டுகளை ஒழிக்க வேண்டும் என்கிற சிந்தனையை கொண்டவனாக இருந்தான் சுஹார்த்தோ. அதிகாரத்தை கைப்பற்றிய பின் கொடூரமான முறையில் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப் பட்டனர். 30 September Movement ன் திட்டப்படி கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார்கள் என்று அமெரிக்க உளவுத் துறையான CIA வுடன் கூட்டு சேர்ந்து சுஹார்த்தோ அரசு மக்களிடையே பிரச்சாரம் செய்தது. கம்யூனிஸ்டுகளை உன்மூலனம் செய்யாவிட்டால் அவர்கள் நாட்டை கைப்பற்றி நாட்டு வளங்கள் எல்லாம் சீனாவிற்கு தாரைவார்த்து கொடுத்து விடுவார்கள் என்றும் பொய் பிரச்சாரம் செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளை கொல்வதற்கு தயாராக உள்ள அத்தனை குழுக்களையும் அரசு உதவிகள் செய்து ஊக்குவித்தது. சுமாத்ரா, பாலி, கிழக்கு ஜாவா பகுதிகளில் தான் அதிகப்படியான கூட்டக் கொலைகள் நடந்தது. கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்க சுஹார்த்தோ அரசு அங்கே உள்ள இந்துக்களின் உதவியையும் நாடினான். 1966 ம் ஆண்டுவாக்கில் 5 லட்சம் கம்யூனிஸ்டுகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். உலகின் பெரிய கம்யூனிஸ எதிர்ப்பு இயக்கமாக செயல்படும் அமெரிக்க உளவுத் துறை சிஐஏ இந்த கொலைகளுக்கு துணை போனது மட்டுமல்லாது இருபதாம் நூற்றாண்டின் மோசமான அழித்தொழிப்பு நடவடிக்கை இது என்று அறிக்கை விட்டது தான் மிக கொடுமையான விசலட்சம்
ஜக்கார்த்தவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ராபர்ட் மார்ட்டின் 1990 ல் வெளியிட்ட அறிக்கையில் இந்தோனேசியாவில் நடந்த கூட்ட கொலைகளை பற்றி மேலும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

” கொலை செய்யப்பட வேண்டிய ஐயாயிரத்திற்க்கும் மேற்பட்ட முக்கிய இடதுசாரி தலைவர்களின் விவரங்களை நாங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களுக்கு முதலிலேயே கொடுத்திருந்தோம். 20 லட்சத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள், 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்” என்று அவர் கூறியதிலிருந்து அங்கே நடந்த மனித குருதியின் அளவையும் கம்யூனிஸ்டுகள் மீதான வல்லரசு நாடுகளின் வெறுப்பையும் ஒரு சேர உணர முடியும். “கொலை செய்யப்படுபவரகள் கம்யூனிஸ்டுகளாக இருப்பின் யாருக்கும் எவ்விதமான புகாரும் இருக்கவில்லை. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.” என கூறுகிறார் அமெரிக்க புலனாய்வு துறையின் இந்தோனேசியாவ தலைவர் ஹோவார்டு.

மேலும் இந்த கூட்ட கொலைகளை பற்றி உலகிற்கு வெளிக்காட்டும் Act of Killing என்கிற ஆவணப்படத்தில் அந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட ஒருவர் சொல்கிறார், ” பெண் தோழர்களை கொல்வதற்கு முன் அவர்கள் மார்பகங்களை அறுத்து விடுவோம். பெண்களின் மார்பகங்களுக்குள் தேனீ கூடுகளில் உள்ளது போல நிறைய துளைகள் இருப்பதை காணலாம்.” கொலை செய்யும் அவர்களின் மனநிலை என்னவாக இருந்துள்ளது என்பதை எடுத்து காட்ட இதற்கு மேல் வேறு என்ன விளக்கம் வேண்டும். கம்யூனிஸ்டுகளை கொன்று அவர்கள் இரத்தத்தை குடித்ததை பெருமையாக கருதுபவர்களும் உண்டு.
இடதுசாரி தோழர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அவர்கள் நாத்திகர்கள் என்று பரவலாக பிரச்சாரம் செய்ததும் இவ்வளவு பெரிய கொலைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் தங்கள் நாட்டு மக்களாகிய கம்யூனிஸ்டுகளை வெறுக்க கற்றுக் கொடுத்தது அமெரிக்காவின் சூழ்ச்சி என்றும் அந்த ஆவணப்படம் விளக்குகிறது.

1966 ல் அரசால் தடை செய்யப்பட்டு உலகின் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி சிஐஏ வின் துணையோடு நடந்த அழித்தொழிப்புக்கு பின் முற்றிலுமாக அப்புறபடுத்தபட்டது.

இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 100 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

You can kill a man, you may kill the mass
but remember you can never kill the ideas.

  • காளி முத்து.

Related Posts