பிற

அக்டோபர் 31 – இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்

இந்திரா காந்தி இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட நாள் (அக்டோபர் 31, 1984).

இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் மூன்றாவது பிரதமருமாவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, பெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா  காந்தி என்று‍ அழைக்கப்பட்டார்.

ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

1984 களில் பஞ்சாபில் சீக்கிய மதத்தினரின் கோரிக்கையான காலிஸ்தான் பிரச்சனை எழுந்தது. சீக்கிய போராட்ட பிரிவினைவாத குழுவைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு‍ இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அரசு‍ ஆவணம் சொல்கிறது.

1975-1977 ஆண்டுகளில் அவசரகால நிலைப் பிரகடனம் அறிவித்தது‍ மற்றும் 1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12 ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திரா காந்தியின் தலைமையிலான நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் ஏற்பட்ட போன்ற முக்கியமான விமர்சனங்கள் உள்ளது.

14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் சீக்கியப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

Related Posts