அரசியல்

இத்தனை ஆர்ப்பாட்டங்களினூடே இன்னொன்றும் கூட நடந்து விட்டது (ILA)………..

CAA pass பண்றதுக்கு முன்னாடி அமித்ஷா மணிப்பூரில் சில தலைவர்களை சந்திச்சிருக்கிறார்.. மணிப்பூரில் போராட்டங்கள் எதுவும் நடக்க கூடாது என்று கேட்டுக் கொண்டார்.. பதிலாக அவர்கள் ஒரு demand வைத்திருக்கிறார்கள்… குடியுரிமை பெறுகிற பெங்காலி இந்துக்கள் மணிப்பூருக்குள் வரக் கூடாது… அதுக்காக ஐ.எல்.பி (ILP) அமுலப்படுத்த வேண்டும்…
அமித்ஷா அதை ஒப்புக் கொண்டார்.. அதற்கான மசோதாவை கடந்த திங்களன்று Parliament ல பேசி எப்போதும் போல அர்த்த ராத்திரியில் ஜனாதிபதி அதில் கையொப்பமிடவும் செய்திருக்கிறார்… அதை ஆமோதிக்கும் விதமாக செவ்வாய் கிழமை மணிப்பூரில் பொது விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்…

அடுத்து…

CAA bill pass பண்ண பிறகு திரிபுராவில் போராட்டம் துவங்கியதும் அவ்வூர் தலைவர்களை தில்லி அழைத்துள்ளார் அமித்ஷா… they demanded the same.. ILP..
அமித்ஷா ஒப்புக் கொண்டார்.. வந்த வழியே திரும்பச் சென்று விட்டனர்… போராட்டம் வாபஸ்..

அடுத்து…

மேகாலயா… தேவை ILP.. demand agreed…

அசாமில் நடக்கும் போராட்டங்களின் தீ அணைந்தாலும் அதன் சூடு தணியாது… அவர்களுக்கும் ILP கிடைக்கும் வரை.. காஷ்மீரை போல பத்து பேருக்கு ஒரு ராணுவ வீரனை அசாமில் நிறுத்தவும் முன்வர மாட்டார்கள்… அவர்களுக்கும் விரைவில் ILP கிடைக்கும்…

ஒரு Magician தன் பாக்கெட்டிலிருந்து பறவையை எடுப்பது போல கேட்டவருக்கெல்லாம் அமித்ஷா எடுத்துக் கொடுக்கும் இந்த ILP என்பது என்னவென்று தெரிந்து வைப்பது நல்லது… வரும் வருடங்களில் அதிகமாக mention செய்யப்பட போகிற மூன்றெழுத்து வார்த்தை இதுவாக தான் இருக்கும்.. ஒரு வேளை CAA , NRC க்கும் மேலே…

ILP .. Inner line permit.. நமக்கு புரியற மாதிரி சொல்லணும்னா விசா (visa).. உதாரணமாக நாம் இப்போ துபாய் போக வேண்டும் என்றால் நாமளோ நமக்கு வேண்டி வேற யாரோ முதலில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.. நம் துபாய் பயணம் பற்றிய அணைத்து தகவல்களையும் அந்த ஊர் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்… அதை பரிசீலனை செய்து விசா தருவார்கள் அல்லது தர மறுப்பார்கள்..

இதே கதை தான் ILPயும்… மணிப்பூருக்குள் மற்ற எந்த மாநிலத்தவரும் நுழைய வேண்டும் என்றால் மணிப்பூர் அரசுக்கு நாம் மேல் சொன்ன அத்தனையும் செய்து ஒப்புதல் வாங்க வேண்டும்.. மணிப்பூருக்கு ILP கிடைத்த பிறகு முதலில் விசா கிடைத்தது பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்வுக்கு தான்.. அவர் அதை மெருமையாக twitter இல் பதிவும் செய்திருந்திருந்தார்..

இச்சட்டத்தின் படி ஒருவர் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மணிப்பூரில் இருக்கலாம்.. தொழில் செய்யவோ இடம் வாங்கவோ முடியாது… சொன்ன நேரத்துக்குள்ள எல்லையை தாண்டலேன்னா மணிப்பூர் காவல்துறை அவர்களை வெளியேற்றுவார்கள் அல்லது கைது செய்து உள்ளே போடுவார்கள்..

அருணாசல் பிரதேஷ், நாகாலான்ட்,மிசோரம் ஆகிய மாநிலங்களில் 1873 முதல் ILP நிலுவையில் உள்ளது.. அவ்வூர் வளங்களை யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை 1947 க்கு பின் இல்லாமல் செய்ய வல்லபாய் படேல் முயன்றார்… சியாம பிரசாத் முகர்ஜி தலைமையிலான அன்றைய காவிக் கூட்டம் ILP மீறி உள்ளே சென்று கைது செய்யப்பட்டுள்ளனர்.. காஷ்மீரின் 370 போல இதையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது…

ILP அளவுக்கு காஷ்மீரின் 370 இல்லை… காஷ்மீருக்குள் நாம் போக அனுமதி் வேண்டாம்.. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.. வேலை செய்யலாம்… இடம் வாங்க முடியாது.. ILP நிலுவையில் உள்ள மாநிலங்களில் நாம் permit இல்லாமல் உள் நுழைய கூட முடியாது..

ஒரு மாநிலத்திற்கு ILP கொடுக்கும் போது பிற மாநிலங்களின் ஒப்புதலும் பெற வேண்டும்.. அது ஏன். மணிப்பூருக்கு IPL கொண்டு வருவதற்கு ஏன் பிற மாநிலங்களில் ஒப்புதல்… ?? ILP நிலுவையில் உள்ள ஊர் மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் இடம் வாங்கவும் முடியும்… நம்மால் முடியாது…

நடைமுறையில் இந்திய எல்லைகளை திறந்து விடுவதின் மூலம் வடகிழக்கு பகுதியில் கலவரங்கள் வருமென்று அமித்ஷாவுக்கு தெரியும்.. தாங்கள் ஆளும் மாநிலங்களில் CAA செயல்படாது என்று கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் போன்றவர்கள் கூறி விட்டனர்.. இந்திய குடியுரிமை பெற்ற ஒரு பங்களாதேஷியை எல்லையில் தடைய ஒலி மாநில அரசுக்கும் உரிமை இல்லை… அதற்கு ILP அந்தஸ்து பெற்றிருக்க வேண்டும்..

முன்னமே பல மாநிலங்கள். இந்த ILP அந்தஸ்தை கேட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது… 1873 க்கு பிறகு அமித்ஷா தான் இதை செயல்படுத்தியிருக்கிறார்..

பொதுவாகவே பொருளாதார மந்த நிலையின் போதும் தொழிலவசரங்கள் குறையும் போதும் நமக்குள் எழும் முதல் உணர்வு அண்டை மாநில தொழிலாளர் எதிப்பு தான்.. நம் வேலைகளை அவர்கள் தட்டி பறிக்கிறார்கள் என்றொரு செய்தி மக்களிடம் விரைவில் பகிரப்படும்.. பொருளாதார நிலையை சீர் செய்ய முடியாத அரசியல்வாதிகள் இது போன்ற செய்திகளை மக்களிடம் சென்று அடைய வேலை செய்வார்கள். மெக்ஸிக்கோ வுக்கு எதிராக பிரச்சாரம் செய்து தான் ட்ரம்ப் ஜனாதிபதி ஆனார்… போலண்ட் போன்ற நாடுகள் மீது வன்மம் உமிழ்ந்து தான் போரிஸ் ஜான்சன் பிரிட்டிஷ் பிரதமர் ஆனார்..

இந்தியாவின் எல்லா இடங்களிலும் இது போன்ற பிரச்சாரங்கள் இருக்கத்தான் செய்கிறது.. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது… முன்பு சிவசேன,அசம் கண பரிஷித் போன்ற அமைப்பினர் அண்டை மாநில தொழிலாளிகளை தெருவில் அடித்தார்கள் அவர்களது உடமைகளை எரித்தனர்.. இப்போது இதையே சட்ட ரீதியாக செய்ய துவங்கியிருக்கிறார்கள்… தனியார் துறைகளில். 75% ஒதுக்கீடுகளை ஆந்திர மாநிலத்தவருக்கே உறுதி செய்துள்ளது ஆந்திரா அரசு… ராஜஸ்தானில் 80%.. இதை போன்றே மஹாராஷ்டிராவிலும் சிவசேனா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்… கோவா கர்நாடகா னு இன்னும் இருக்கிறது…
ஒரு நாட்டில் எங்கும் வேலை செய்ய கூடிய ஒரு குடிமகனின் உரிமை மீதான தாக்குதல் என்றே கருத வேண்டியாத இருக்கிறது… இந்த சட்டங்கள் எல்லாம் formal sector ல மட்டும் தான் சாத்தியம்.. சின்ன சின்ன hotels,plumbing painting னு இருக்கும் வேலைகளில் ஈடுபடுவதை தடுக்க முடியாது… அதற்கான வழிமுறை தான். ILP..

தங்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பாஜாக ILP வழங்கவும் தான் போகிறார்கள்..

காஷ்மீரில் 370 ஐ நிறுத்தியவுடன் ஒரு நாடாக மாறி விட்டோம் என புளகாங்கிதம் அடைந்தவர்களின் கவனதிற்கு..

பக்கத்து மாநிலதிற்கு போவதற்கே விசா வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு விரைவில் தள்ளப்பட இருக்கிறோம்… அமித்ஷா திறந்து விட்ட பூதம் சிறை திரும்பும் வரை இந்த பீதி ஓய போவதில்லை…..

பாரத் மாதா கீ ஜெய்…

  • காளிமுத்து.

Related Posts