அரசியல்

எளிய மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளும் லத்திகளும்….…!!

தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் ப்ளாய்ட் கூறிய பின்பும், டேரிக் சாவின் தொடர்ந்து அவரின் கழுத்தை மிதித்ததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இந்தக் காட்சியின் வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவின் கறுப்பின மக்களைத் தட்டி எழுப்பியது. அமெரிக்க அதிபர் குழிக்குள் பதுங்கும் நிலை உருவானது பிறகு கொலைக்கு காரணமான காவல் அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் போராட்டம் சாதித்தது…

கிட்டத்தட்ட அதற்கு இணையான சம்பவம் தான் நேற்று தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல்நிலையத்தில் நடந்ததும்.
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் இருவரின் உயிரும் இரு காவல் அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு பலியாகியுள்ளது. இங்கே நடைபெற்ற கொலையில் நமக்கு வீடியோ பதிவு ஆதாரம் எதுவுமில்லை அவர்கள் வலியால் எப்படியெல்லாம் துடித்தார்களோ..?? லத்தி அவர்கள் உடலின் மீது எங்கெல்லாம் பாய்ந்ததோ..?
என்பதை நினைத்தாலே கொடுமையாக இருக்கிறது. ஜார்ஜ் ப்ளாய்ட் கொலைக்கு நிகரான திட்டமிட்ட படுகொலை தான் இதுவும்.

கொரானாவை கட்டுப்படுத்த வந்த போர் வீரர்களை போல் காவலர்கள் தங்களை நினைத்துக்கொள்வதும் திடீர் திடீரென அரசு போடும் விதிமுறைகளை கொஞ்சம் மீறினாலே எதிரிகளை போல அப்பாவி மக்களை வேட்டையாடுவதும் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது…
வறுமையில் வாழ்வதைவிட கொரானாவால் இறப்பதே மேல் என மக்கள் நினைக்கும் அளவிற்கு அரசின் நடவடிக்கைகள் இருக்கும் போது 120 நாட்களுக்கு மேல் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தவர்கள் பசியில் இருந்தும் வாங்கிய கடனிலிருந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேறு என்ன வழி இருக்கிறது …?

செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்தால் என்ன ஆபத்து நேர்ந்துவிடும்..?
பெரும் கடைகள் வீதிகளை மீறினாலும் பணம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிறிய கடைகளிடமிருந்து பணம் கிடைக்காது என்பதால் அதிகாரத்திமிரில் மிரட்டுவதும் என்ற பாரபட்சமான அணுகுமுறை தான் தமிழகம் முழுவதும் நடக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு
ஐகோர்ட்டால் தடைசெய்யப்பட்ட நிகழ்வில் விதியை மீறி நடக்க முயன்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் ஒரு காவல் அதிகாரி அண்ணாச்சி அண்ணாச்சி என கெஞ்சுவதும்
உடனே எச்.ராஜா ஐகோர்ட்டாவது மயிராவது என பேசியதும்
காணொளியில் அனைவரும் பார்த்தோம் ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை..
அவரும் சடத்தை மீறினார்…
தன்னைவிட மேல் அதிகாரிகள், பணம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தினர், இதே காவல்துறை அதிகாரிகளை மிகக்கேவலமாக நடத்தினாலும், திட்டினாலும் பொருட்படுத்த மாட்டார்கள் ஆனால் சாதாரண மக்கள் ஒரு கேள்வி கேட்டால் கூட இவர்களால் பொருத்துக்கொள்ள முடிவதில்லை உடனே காவல் நிலையத்தில் கட்டி வைத்து தன் காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதுண்டு.
கஞ்சா, திருட்டு சரக்கு, கொலை, கொள்ளை, என எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் துணைப்போகும் காவல்துறை எளிய மக்கள் மீது தன் முழு பலத்தையும் காட்டி ஒடுக்குகிறது…
இது அனைத்து காவல் அதிகாரிகள் மத்தியிலும் ஆழமாக பதிந்துவிட்ட நடைமுறையாகவே இருக்கிறது….

ஊரடங்கு காலத்தில் கடை மூடவில்லை எனில் விதிமுறை மீறல் என்ற அடிப்படையில் கடைக்கு சீல் வைக்கலாம், எச்சரிக்கை செய்யலாம் அதைவிடுத்து காவல் நிலையத்தில் கட்டி வைத்து 55 வயதான அந்த ஜெயராஜ் என்பவரை அடித்ததும் தந்தைக்காக நியாயம் கேட்ட மகன் பென்னிக்‌ஸை அதேபோல் அடித்து கொலை செய்ததும் எவ்வைவு பெரிய கொடுமை..?
தூத்துக்குடி S.P. வெறும் பணி இடமாற்றம் செய்கிறார்… பிறகு மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்கிறார். இது போதுமானதா..? கொலை வழக்கல்லவா பதிவு செய்து கைது செய்ய வேண்டும்…
கொலைசெய்தவர்களை சிறையில் அடைக்க மக்கள் மறியல் செய்ய வேண்டியிருக்கிறது ,

வணிகர்கள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு செய்ய வேண்டியிருக்கிறது..
சட்ட நடைமுறையை அமுல்படுத்துவதற்கு மக்களே போராட வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.

சமீபத்தில் மறைந்த Mr.Perfect என தன்னை காட்டிக்கொண்ட நடிகர் துக்ளக் சோவின் உறவினரான நடிகை ரம்யாகிருஷ்ணன் தன் வாகனம் முழுவதும் 100 சாராய பாட்டில்களை அடுக்கிக்கொண்டு வந்தார் அவர் மீது எந்த சட்டமும் பாயவில்லை வாகன ஓட்டுநர் மீது மட்டும் வழக்கு போடப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் இந்த அப்பட்டமான பாராபட்சத்தை கூச்சநாச்சமின்றி செய்கிறார்கள் காவல்துறையினர்..

நம் ஜனநாயக அமைப்பின்
காவல்துறை, நீதித்துறை என எந்த இடங்களிலும் உழைக்கும் மக்களுக்கான
நீதி கிடைப்பதில்லை.
சாதி வர்க்கம் பார்த்துதான் நடவடிக்கைகள் இருக்கிறது..
சமீபத்தில் உடுமலைபேட்டை சங்கர் ஆணவப்படுகொலையில் கொலைக்கு காரணமான முக்கிய நபர் விடுதலை என்ற செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.
இதுவரை காவல் மரணங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 10% க்குகூட தண்டனை கிடைக்கவில்லை.

வாச்சாத்தி, பத்மினி போன்ற சில வழக்குகளில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக காவல் அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. நேற்றைய போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டிற்கு பிறகு தான் அரசு செவிசாய்த்துள்ளது
ஆனால் இன்னும் நீதி கிடைக்கவில்லை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இது எத்தகைய துயரம் வாய்ந்தது ஒரே குடும்பத்தில் தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டார்கள் என்பது எளிதாக கடந்து போக வேண்டிய விஷயமா..? எவ்வளவு பெரிய இழப்பு..?

இதே தூத்துக்குடியில் தான் ஸ்டெர்லைட் கம்பெனிக்கு ஆதரவாக இரண்டு வருடங்களுக்கு முன்பு மக்களை சுட்டு வீழ்த்தினார்கள்,
நேற்று லத்தியால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்…
காவல்துறையிடமிருந்து துப்பாக்கிகளும், லத்திகளையும் பிடுங்க வேண்டும் எப்போதும் எளிய மக்களுக்கு எதிராக பாய்வதற்கு எதற்கு அந்த ஆயுதங்கள்…..?? வழக்கை முடிக்க என்கவுண்டர் என்கிற பெயரில் அப்பாவிகளை சுட்டு தள்ளுவது ஒரு புறம் நாடு முழுவதும் நடக்கிறது…
தெரிந்த மரணங்கள் ஒரு பக்கம் மூடி மறைத்த மரணங்கள் இன்னொரு பக்கம் என காவல்நிலையங்கள் மற்றும் சிறைக்கூடங்கள் கொலைக்களங்களாக இருந்திருக்கிறது….

சென்னையில் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷமீல் அகமது, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் எலிசபத் என சமீபகாலமாக நடந்த பல சிறைக் கொலைகளை பட்டியலிடலாம்.
2017ல் 100 மரணங்கள் நடந்தும் ஒருவருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை…
இந்திய அளவில் பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் தான் அதிக லாக்கப் மரணங்கள் நடக்கிறது….

லெனின் காவல் துறையினரை ஆளுங் வர்கத்தின் வன்முறை
கருவி என்பார்.
அந்த வன்முறை கருவியை மக்கள் போராட்டத்தின் மூலமாகத்தான் எதிர்கொள்ள முடியும் நீதியை நிலைநாட்ட முடியும்.

போலிஸ் மந்திரியான முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்னு கடவுளை கைக்காட்டினால் மரணங்கள் தொடரும்…….


போராட்டங்களும் தொடரும்….!

  • மோசஸ் பிரபு

Related Posts