அரசியல்

தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்து; காப்பீடு என்பதும் கட்டணத்துக்கு வரம்பு என்பது கதைக்குதவாத வெறும்பேச்சு!

கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது.

ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை இலக்கத்தை தொட்டு நிற்கிறது.

எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்திய மாநில அரசு உண்மையில் மக்களைத்தான் எதிரிகளாக நடத்துகிறது. ஆய்வுகளை அதிகப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தால் அகிலத்திலேயே நாங்கள்தான் பெஸ்ட் என்று சுயபாராட்டுப் பத்திரமே பதிலாக வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மட்டும் பாதிப்பு 1384, இறப்பு 12, மொத்த இறப்பு 220. இது ஒருபுறமிருக்க நோய்த் தொற்று ஆரம்பித்த காலத்தில் தனியார் ஆய்வகங்களில் நோய்த்தொற்றைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு ஆய்வுக்கு ரூ 4500 என நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் ஏன் இதை இலவசமாக செய்யக் கூடாது என்று கூட கேட்டது.

இப்போது தொற்று பற்றிப் படர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் தனியார் மருத்துவமனைகள் களத்தில் இறங்கிவிட்டன மிகுந்த கொண்டாட்டத்தோடு. ஆய்வு ஒன்றுக்கு ரூ.16000, நாளொன்றுக்கு ரூ.70000, ஆளொன்றுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் என்று கொண்டாடிக்களிக்கின்றனர்.

முதலில், தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை நாளுக்கு ரூ.70000, குறைந்தபட்சம் இரண்டு நாள் கட்டணமாவது செலுத்தினால்தான் அனுமதி என்று எழுதியது. அடுத்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் எழுதி தட்டிக் கேட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது டைம்ஸ் நவ் தமிழ்நாடு டீம் ஸ்டிங் ஆப்பரேசனை நடத்தி அம்பலப்படுத்தியது.

அதன் பிறகு ஐஎம்ஏ ஒரு கட்டண விகிதத்தை பரிந்துரைத்தது. இப்போது தமிழக அரசு சாதா சிகிச்சை, தீவிர சிகிச்சை என பட்டியலிட்டு லட்சங்களில் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது. அனைத்தும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்திற்குள் வரும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

நிற்க. ஒரு பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள், அதிகாரிகள், அரசு ஆகியவற்றின் அணுகுமுறை மனிதாபிமானதுமற்றதும் தேவைக்கு பொறுத்தமற்றதுமான நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

அரசு காப்பீட்டு அட்டை இருந்தால் பலருக்கு திருப்திதான். காப்பீட்டிற்கு அரசு வழங்கும் தொகை தங்கள் வரிப்பணம் என்பதையே பலரும் ‘மறந்துவிடுகிறார்கள்’. கேள்வி என்னவெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நட்டத்திற்கு காப்பீடு செய்யமாட்டார்கள்.

காப்பீடு என்பதால் தனியார் மருத்துவமனைகள் நட்டத்திற்கு மருத்துவம் செய்யமாட்டார்கள். இருவருக்கும் லாபம். ஆனால், அரசுக்கும் மக்களுக்கும் நட்டம். குறுகிய கால நோக்கிலும் தொலைநோக்கிலும் இது மிகப்பெரிய நட்டங்கள்.

காப்பீட்டிற்கு வழங்கும் தொகைகளை அரசு மருத்துவ கட்டமைப்புகளை விரிவிபடுத்த, வலுப்படுத்த, மேம்படுத்த பயன்படுத்தினால் இந்தப் பிரச்சினை எப்போதும் எழப்போவதில்லை. தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளாக காப்பீட்டிற்கு செலவழித்த தொகை எவ்வளவு? 3 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.14 ஆயிரம் கோடி.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கூட்டணியோடு நம் வரிப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் காப்பீட்டிற்கு வராத சிகிச்சை மற்றும் சேவைகள் என பெரும் தொகையை நோயாளிகளிடம் கறந்துவிடுகிறார்கள்.

அரசுப் பணம் விரயம் என்பதோடு நோயாளிகளும் கூடுதலாக அழ வேண்டிய நிர்ப்பந்தம். அரசு இந்த பணம் முழுவதையும் கட்டமைப்பையும் சேவையையும் வலுப்படுத்த பயன்படுத்தியிருந்தால் இதுபோன்ற நெருக்கடியில் கைகொடுத்திருக்கும்.

இப்போது அரசின் கஜானா தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கும் திறந்துவிடுவதைப் போலவே நோயாளிகளின் சேமிப்பும் சொத்துக்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு மடைமாற்றப்படும். வாழ்நாள் சேமிப்புகள் மொத்தத்தையும் சிகிச்சையில் இழந்த குடும்பங்கள் பலவற்றை காட்ட முடியும்.

இப்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் வசதிகளும் முழுப் பயன்பாட்டில் உள்ளன. இனிவரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியும், சிகிக்சையும் மறுக்கப்படும். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு நோயளிகள் படையெடுப்பார்கள்.

எல்லா காலத்திலும் எதை ஊற்றினாலும் உறிஞ்சிக் கொள்ளும் பாலைவனம்தான் தனியாரின் லாப வெறி. நோய்த் தொற்றுக் காலத்தில் குப்புற விழுந்தால் தாய்மடி சுறக்கும் பாலையும் உறிஞ்சத் துடிக்கிறது.

அரசுக் கட்டமைப்பு போதுமானதாக இல்லாதது அரசின் குற்றமே. எனவே, அரசு தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்தி சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை எது தடுக்கிறது? பல லட்சம் மக்களின் உயிரை விடவும் தனியாரின் கொள்ளை லாபம்தான் முக்கியமா?

மருத்துவ சேவை செய்கிறோம் என்றுதானே பல சலுகைகளை தனியார் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பெறுகிறார்கள். அதுவெல்லாம் மருத்துவத்தில் புறக்கணிக்கப்படும் இந்த சாதாரண மக்களின் வரிப்பணம்தானே. காப்பீடுதான் என்றாலும் தனியார் மருத்துவமனைகள் உணவு மற்றும் காப்பீடு அல்லாத சேவைகள் என கணிசமான தொகையை கறக்கவே செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வாய்ப்பில்லாத கூவம் கரையோர குடிசைவாழ் மக்கள் எவரையாவது சிகிச்சைக்காக கார்ப்பரேட் மருத்துவமனைகள் அனுமதிப்பார்களா? கார்ப்பரேட் மருத்துவமனையை விடுங்கள், தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பார்களா? இன்சூரன்ஸ் இருக்கிறது என்று சொன்னாலும், இதுவும் மிக நாசுக்கான ஒதுக்கி வைத்தலே.

எனவே, அரசு தனியார் மருத்துவக் கட்டமைப்புக்களை தற்காலிகமாகக் கையகப்படுத்தி கொரோனா தொற்று சிகிச்சைகளை மேற்கொள்வது ஒன்று மட்டுமே வழி. ஒரு பேரிடர் காலத்தில் இது ஒன்றும் பெரும்பாவம் ஆகிவிடாது. அனைவரும் குரல் எழுப்பினால் ஆகாகதது என்று எதுவும் இருக்க முடியாது.

தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்துவதே பாதுகாப்பு. காப்பீடு என்பதும் கட்டணத்துக்கு வரம்பு என்பது க

கொரோனா இந்தியாவில் குடியேறி காலாண்டு ஓடிவிட்டது. இன்னும் எவ்வளவு காலம் பிடித்தாட்டும் என எவருக்கும் தெரியவில்லை. ஊரடங்கே ஒரே நிவாரணி என அரசுகள் கூவியது பொய்யாகிவிட்டது. ஊரடங்கு அறிவித்து ஒரு வார காலத்தில் தமிழகத்தில் பாதிப்பு 234. இறப்பு ஏதுமில்லை. இப்போது தமிழகத்தில் கடந்த 5 நாட்களும் ஒரு நாள் பாதிப்பே ஆயிரத்தைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் இறப்பே இரட்டை இலக்கத்தை தொட்டு நிற்கிறது.

எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்திய மாநில அரசு உண்மையில் மக்களைத்தான் எதிரிகளாக நடத்துகிறது. ஆய்வுகளை அதிகப்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தால் அகிலத்திலேயே நாங்கள்தான் பெஸ்ட் என்று சுயபாராட்டுப் பத்திரமே பதிலாக வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மட்டும் பாதிப்பு 1384, இறப்பு 12, மொத்த இறப்பு 220. இது ஒருபுறமிருக்க நோய்த் தொற்று ஆரம்பித்த காலத்தில் தனியார் ஆய்வகங்களில் நோய்த்தொற்றைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒரு ஆய்வுக்கு ரூ 4500 என நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் உச்சநீதிமன்றம் ஏன் இதை இலவசமாக செய்யக் கூடாது என்று கூட கேட்டது.

இப்போது தொற்று பற்றிப் படர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான் தனியார் மருத்துவமனைகள் களத்தில் இறங்கிவிட்டன மிகுந்த கொண்டாட்டத்தோடு. ஆய்வு ஒன்றுக்கு ரூ.16000, நாளொன்றுக்கு ரூ.70000, ஆளொன்றுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் என்று கொண்டாடிக் களிக்கின்றனர்.

முதலில், தி இந்து ஆங்கிலப் பத்திரிக்கை நாளுக்கு ரூ.70000, குறைந்தபட்சம் இரண்டு நாள் கட்டணமாவது செலுத்தினால்தான் அனுமதி என்று எழுதியது. அடுத்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம் எழுதி தட்டிக் கேட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது டைம்ஸ் நவ் தமிழ்நாடு டீம் ஸ்டிங் ஆப்பரேசனை நடத்தி அம்பலப்படுத்தியது. அதன் பிறகு ஐஎம்ஏ ஒரு கட்டண விகிதத்தை பரிந்துரைத்தது. இப்போது தமிழக அரசு சாதா சிகிச்சை, தீவிர சிகிச்சை என பட்டியலிட்டு லட்சங்களில் கட்டணங்களை பரிந்துரைத்துள்ளது. அனைத்தும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்திற்குள் வரும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

நிற்க. ஒரு பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள், அதிகாரிகள், அரசு ஆகியவற்றின் அணுகுமுறை மனிதாபிமானதுமற்றதும் தேவைக்கு பொறுத்தமற்றதுமான நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

அரசு காப்பீட்டு அட்டை இருந்தால் பலருக்கு திருப்திதான். காப்பீட்டிற்கு அரசு வழங்கும் தொகை தங்கள் வரிப்பணம் என்பதையே பலரும் ‘மறந்துவிடுகிறார்கள்’. கேள்வி என்னவெனில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நட்டத்திற்கு காப்பீடு செய்யமாட்டார்கள். காப்பீடு என்பதால் தனியார் மருத்துவமனைகள் நட்டத்திற்கு மருத்துவம் செய்யமாட்டார்கள். இருவருக்கும் லாபம். ஆனால், அரசுக்கும் மக்களுக்கும் நட்டம். குறுகிய கால நோக்கிலும் தொலைநோக்கிலும் இது மிகப்பெரிய நட்டங்கள்.

காப்பீட்டிற்கு வழங்கும் தொகைகளை அரசு மருத்துவ கட்டமைப்புகளை விரிவிபடுத்த, வலுப்படுத்த, மேம்படுத்த பயன்படுத்தினால் இந்தப் பிரச்சினை எப்போதும் எழப்போவதில்லை. தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகளாக காப்பீட்டிற்கு செலவழித்த தொகை எவ்வளவு? 3 ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.14 ஆயிரம் கோடி.

இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள், பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கூட்டணியோடு நம் வரிப்பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் காப்பீட்டிற்கு வராத சிகிச்சை மற்றும் சேவைகள் என பெரும் தொகையை நோயாளிகளிடம் கறந்துவிடுகிறார்கள்.

அரசுப் பணம் விரயம் என்பதோடு நோயாளிகளும் கூடுதலாக அழ வேண்டிய நிர்ப்பந்தம். அரசு இந்த பணம் முழுவதையும் கட்டமைப்பையும் சேவையையும் வலுப்படுத்த பயன்படுத்தியிருந்தால் இதுபோன்ற நெருக்கடியில் கைகொடுத்திருக்கும். இப்போது அரசின் கஜானா தனியார் மருத்துவமனைகளுக்கும் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கும் திறந்துவிடுவதைப் போலவே நோயாளிகளின் சேமிப்பும் சொத்துக்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு மடைமாற்றப்படும். வாழ்நாள் சேமிப்புகள் மொத்தத்தையும் சிகிச்சையில் இழந்த குடும்பங்கள் பலவற்றை காட்ட முடியும்.

இப்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளும் வசதிகளும் முழுப் பயன்பாட்டில் உள்ளன. இனிவரும் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியும், சிகிக்சையும் மறுக்கப்படும். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு நோயளிகள் படையெடுப்பார்கள்.

எல்லா காலத்திலும் எதை ஊற்றினாலும் உறிஞ்சிக் கொள்ளும் பாலைவனம்தான் தனியாரின் லாப வெறி. நோய்த் தொற்றுக் காலத்தில் குப்புற விழுந்தால் தாய்மடி சுறக்கும் பாலையும் உறிஞ்சத் துடிக்கிறது.

அரசுக் கட்டமைப்பு போதுமானதாக இல்லாதது அரசின் குற்றமே. எனவே, அரசு தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்தி சிகிச்சைக்குப் பயன்படுத்துவதை எது தடுக்கிறது? பல லட்சம் மக்களின் உயிரை விடவும் தனியாரின் கொள்ளை லாபம்தான் முக்கியமா?

மருத்துவ சேவை செய்கிறோம் என்றுதானே பல சலுகைகளை தனியார் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பெறுகிறார்கள். அதுவெல்லாம் மருத்துவத்தில் புறக்கணிக்கப்படும் இந்த சாதாரண மக்களின் வரிப்பணம்தானே. காப்பீடுதான் என்றாலும் தனியார் மருத்துவமனைகள் உணவு மற்றும் காப்பீடு அல்லாத சேவைகள் என கணிசமான தொகையை கறக்கவே செய்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வாய்ப்பில்லாத கூவம் கரையோர குடிசைவாழ் மக்கள் எவரையாவது சிகிச்சைக்காக கார்ப்பரேட் மருத்துவமனைகள் அனுமதிப்பார்களா? கார்ப்பரேட் மருத்துவமனையை விடுங்கள், தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பார்களா? இன்சூரன்ஸ் இருக்கிறது என்று சொன்னாலும், இதுவும் மிக நாசுக்கான ஒதுக்கி வைத்தலே.

எனவே, அரசு தனியார் மருத்துவக் கட்டமைப்புக்களை தற்காலிகமாகக் கையகப்படுத்தி கொரோனா தொற்று சிகிச்சைகளை மேற்கொள்வது ஒன்று மட்டுமே வழி. ஒரு பேரிடர் காலத்தில் இது ஒன்றும் பெரும்பாவம் ஆகிவிடாது. அனைவரும் குரல் எழுப்பினால் ஆகாகதது என்று எதுவும் இருக்க முடியாது.

தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்துவதே பாதுகாப்பு. காப்பீடு என்பதும் கட்டணத்துக்கு வரம்பு என்பது கதைக்குதவாத வெறும்பேச்சு.

க.கனகராஜ்

Related Posts