அறிவியல் நிகழ்வுகள்

கூட்டுழைப்பில் குனு 30 : தமிழ் விக்கிபீடியா 10

கூட்டுழைப்பில் குனு‍ 30 ஆண்டுகள்:

1983 ஆம் ஆண்டு‍ ரிச்சர்டு‍ ஸ்டால்மனால் ஆரம்பிக்கப்பட்ட ஜிஎன்யு/குனு‍ திட்டம் இன்று‍ முப்பதாவது ஆண்டை  கடந்துள்ளது.

“I consider that the golden rule requires that if I like a program I must share it with other people who like it” என்ற வாசகத்தோடு‍ ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்று‍ சுமார் 300க்கும் மேற்பட்ட லினக்ஸ் டிஸ்ட்ரோக்களை (Linux Distro: Customized Linux Operating System) கொண்டு‍ மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

[ Celebrate 30 years of GNU! ]

30 ஆண்டுகளுக்கு‍ முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை இன்று‍ உலகம் முழுமையும் பரவி பல கோடி‍ கடைக்கோடி‍ மக்களுக்கும் பயனுறும் வகையில் சென்று‍ கொண்டிருக்கிறது…

அதன் 30 ஆண்டு‍ விழா கொண்டாட்டம் உலகின் பல்வேறு‍ இடங்களில் நடைபெற்றுக் கொண்டிக்கும் இந்த தருவாயில் நாம் அதைப் பற்றி சற்று‍ நினைவு கூர்வோம்.

நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று.. பாஸ் லினக்ஸ் (BOSS GNU/Linux or simply BOSS Linux) இயங்குதளம்.. தமிழக அரசின் இலவச மடிக் கணியில் இந்த இயங்குதளத்தை பார்த்திருப்பீர்கள்.. இந்த தமிழக அரசு‍ மடிக் கணியில் இந்த பாஸ் லினக்ஸ் இணைத்து‍ கொடுக்க வேண்டும் என்று‍ பலகட்ட போராட்டத்திற்கு‍ பின்னரே வந்தது. இந்த பாஸ் லினக்ஸ்சும் குனு‍ லினக்ஸ்சின் ஒரு‍ டிஸ்‌ட்ரோ தான்..

இதன் வரலாற்றை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

தமிழ் விக்கிபீடியா 10 ஆண்டுகள்:

[Tamil_wiki_10th_anniversary]

விக்கிப்பீடியா என்ற வார்த்தையை இன்று‍ அநேகமாக கணினி பயன்படுத்தும் ஒவ்வொருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். சமூகத்தின் கூட்டுழைப்பால் விழைந்த ஒரு‍ கட்டற்ற களஞ்சியம்.. கிட்டத்தட்ட 265 மொழிகளில் 2 மில்லியன் பயனர்களால் தொடந்து‍ பங்களிப்பு செய்யப்பட்டு‍ வருகிறது.

அதன் ஒரு‍ பகுதியான தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைகிறது. அதையொட்டி‍, 2013 செப்டம்பர் 29 அன்று சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது‍ என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..

Related Posts