பிற

குஜராத்தில் பிறந்த ஒளியும் இருளும்!

மகான் காந்தி மகான்

கைராட்டையே ஆயுதம்

கதராடையே சோபிதம்

பொக்கை வாய் சிரிப்பு

வெலுத்த உடை மிளிர்ப்பு

சமர்மதி அவர் இருப்பிடம்

சத்தியமே அவர் உயிரிடம்

வந்தே மாதிரம் அவர் முழக்கம்

தேசம் விடியும் வரை அவருக்கில்லை உறக்கம்.

மேற்கண்ட வரிகள் எப்போது எங்கேயோ படித்த நினைவு. அவர் பிறந்த தினத்தில் அசைபோட எழுந்து வருகிறது.

அக்டோபர் 2 போர்பந்தரில் பிறந்த அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தென்னாப்ரிக்க இந்தியர்களுக்கு போராட்டம் நடத்தியவர். மிகவும் எளிமையான மனிதன் அவர். அவருக்கு தேவை அதிக பட்சம் ஆட்டுப் பால், கைநிறைய கடலை, சில கதராடைகள், மேலும் ஒரு பகவத்கீதை பிறகு கொஞ்சம் ஏழைகளின் கண்ணீர்.

இந்த தேசத்தில் எல்லா வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. அல்லது அவர் நினைத்திருந்தால் எல்லா பதவிகளையும் பெற்றிருக்க முடியும். தேசத்தின் உச்சபட்ச பதவிகள் அவருக்காக காத்திருந்தது. இருப்பினும் அவைகளை அவர் துறந்தார் அவரது ஆடைகளைப்போல.

அவருக்கு ஒரு கனவு இருந்தது. அந்த கனவில் இந்த தேசத்தில் எல்லோரும் நிலங்களில் உழைத்தார்கள். வியர்வைக்கு ஊதியம் பெற்றார்கள். நிலங்கள் உயிரோடு இருந்தது. அவைகளில் கட்டிடங்களுக்கு பதில் கதிர்கள் விளைந்தன. கூலி தொழிலாளிகள் மகிழ்வுடன் தூங்கினர். கிராமம் உயிர்ப்புடன் எழுந்து நடந்தது. பாசனம் மக்களுக்காக இருந்தது. மதங்கள் எல்லாம் அவருக்கு ஒன்றாய் இருந்தது. அல்லது எல்லா மதங்களும் அவருக்கு ஒன்றாய் தெரிந்தது.

ஏனெனில் மதங்கள் எல்லாம் அன்பை மட்டுமே அவருக்கு போதித்தன. மதத்தின் பெயரால் கலவரங்கள் நடந்த போது அம்மனிதன் நாடு முழுவதும் அமைதிக்காக நடந்தார். இந்துத்துவத்தின் உண்மை சொரூபம் உணர்ந்தார். மாற்று மதத்தின் உயிர்களே மதவாதிகளின் விருப்பம் என்பதை அறிந்தார். உண்ணா நிலையில் தனது உடலை வருத்திகொண்டு உயிரை உருக்கினர். இந்த மேன்மையை அறியாத அல்லது சகிகாத இந்து மதவெறியன் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினன் நாதுராம் கோட்சே அந்த மகத்தான மனிதன் உயிரை பறித்தான். குஜராத்தில் பிறந்த அந்த ஒளி மறைந்தது.

அந்த மகத்தான மனிதன் பிறந்த மண்ணிலிருந்து கோட்சேவின் வாரிசாக காவி இருள் எழுந்து வருகிறது. தேசத்தின் புதிய ரட்சகனாக ஊடகங்களால் கொண்டாடப்பட்டு. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல ஒரு தேவதூதன் உருவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மாற்று மதத்தை சார்ந்த மக்களின் உதிரத்தை ருசித்து அதில் தன் அரசியலை வளர்த்த நரவேட்டை மோடி தான் நாளைய தேசத்தின் பிரதம வேட்பாளர் என பா.ஜ.க வால் அறிவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் தோன்றிய ஒளியாய் காந்தி இருக்க அங்கு தோன்றிய இருளாய் மோடி இருக்கிறார்.

அன்பால் இந்த தேசத்தை வென்ற காந்தியின் மண்ணில் அழுக்காய் தோன்றிய மோடியை வீழ்த்தாமல் தேசத்தை காக்க முடியாது. காந்தி நினைவை போற்றுவதற்கு ஒரு அர்த்தம் தேவை. நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் நண்பர்களே!

Related Posts