பிற

பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்த நாள்!

நவம்பர் 27, 1820 எங்கல்ஸ் பிறந்த நாள்!

கம்யூனிச ஆசான்களில் ஒருவரான எங்கெல்ஸ் : Friedrich Engels (1820 -1895) இல் பிறந்தார்.

அவர் கம்யூனிச தத்துவார்த்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சின் உயிர்த்தோழர். ஒரு‍ நெசவாலை முதலாளியின் மகனாக ஜெர்மனியில் பிறந்தவர். அதிகம் படிக்க ஆசை இருந்தும் 17 வயதில் அப்பாவின் தொழிலை பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனாலும் சுயமாக கல்வி பயின்று‍ மேதையானார். மார்க்ஸ் இவரை ‘இன்னொரு‍ நான்’ என அழைத்தார்.

எங்கல்ஸ் 20-க்கும் மேற்பட்ட மொழிகளை பயின்றவர். அந்த காலகட்டத்தில் வெளியான அறிவியலின் பல பிரிவுகளை அவர் கரைத்துக் குடித்து‍ இருந்தார். அவர் ராணுவத்திலும் பணியாற்றினார். கம்யூனிச தத்துவம் உருவாக காரணமான முக்கியமான கருத்துக்களை மார்க்சுக்கு‍ அறிமுகப்படுத்தியவராக எங்கல்ஸ் இருந்தார். எங்கல்சின் பண உதவி இல்லாமல் இருந்தால் மார்க்ஸ் பட்டினியால் செத்திருப்பார்.

குடும்பம், தனிச்சொத்து, அரசு‍ ஆகியவற்றின் தோற்றம், இயற்கையின் இயக்கவியல் போன்ற நூல்களை எங்கல்ஸ் எழுதியுள்ளார். மார்க்சி்ன் நூல்களுக்கும் எங்கல்ஸ் உதவி உள்ளார்.

மூலதனம் எனும் நூல் தொகுதியில் முதல் புத்தகத்தை வெளியிட்டு விட்டு‍ மார்க்ஸ் மறைந்து‍விட்டார். மார்க்ஸ் மறைவுக்குப் பிறகு‍ அவரது‍ குறிப்பு நோட்டுகளில் இருந்து‍ மற்ற மூன்று‍ புத்தகங்களையும் எங்கல்ஸ்தான் தொகுத்து‍ வெளியிட்டார். அவர் இல்லாவிட்டால் நமக்கு‍ இப்போது‍ இருக்கிற மாதிரி முழுமையான வடிவில் கம்யூனிச தத்துவம் கிடைத்து‍ இருக்காது.

தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டு‍ 1895, ஆகஸ்ட் 5 இல் எங்கல்ஸ் இறந்தார்.

Related Posts