தமிழகத்தின் பசிக்கு, ஒரு துளி சீமெண்ணெய் …

செய்தி: தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட மண்ணெண்ணெய் அளவை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு 55 சதவீதமாக குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழகத்துக்கு மாதத்துக்கு 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. இந்த அளவை மத்திய அரசு திடீரென 29,060 கிலோ லிட்டராக குறைத்து விட்டது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மண்ணெண்ணையை சமையலுக்கு பயன்படுத்து கின்றனர். மத்திய அரசின் முடி வால், 83 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, 65,140 கிலோ லிட்டர் ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

காங்கிரஸ் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லாத விதத்தில், தற்போதைய அரசும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மறுத்து வருகிறது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிங்கு ஆனந்த், தமிழகத்தில் மாநில அரசு வழங்கும் ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை, திருட்டுக்கு ஒப்பாக்கிப் பேசினார். மேலும், கூடுதலாக மண்ணெண்ணெய் தேவை என்றால்‌ ஒரு மாதத்திற்கு மானியம் இல்லாத விலையில் மத்திய அரசிடமிருந்து மண்ணெண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்றும் பதிலளித்தார்.