அறிவியல் தொழில்நுட்பம்

பெடோரா-Fedora : கட்டற்ற 10-வது ஆண்டில்!

கணினிப் பயன்பாட்டில் ஏகபோகத்தை (monopoly) சமூகப் பங்களிப்பால் உடைத்து அதைவிட மேலான மாற்று ஒன்றை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது பெடோரா (Fedora).

பெடோரா (Fedora) ஒரு GNU லினக்ஸ் (GNU/Linux)  வழங்கல்களாகும். இது ரெட் ஹாட்டினால் (Red Hat)

ஆதரவளிக்கப்பட்டு சமூகப் பங்களிப்பினால் (Community Development) மேம்படுத்தப்பட்டதாகும்.

2003 இல் ஆரம்பிக்கப்பட்ட பெடோரா நேற்று தனது 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. தனது 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை Fedora 20 (Heisenbug) என்ற  20 ஆவது பதிப்புடன் (Version) துவங்கியுள்ளது.

இதன் வரலாற்றைப் அடுத்த கட்டுரையில் பார்ப்போம். இந்த சமூகப் பங்களிப்பின் 10 ஆவது கொண்டாட்டத்தை நாமும் சேர்ந்து கொண்டாடுவோம்.

Fedora 20 release

Fedora 20 released on December 17, 2013!

 பெடோராவின் அதிகாரப்பூர்வ தளம்

Related Posts