அரசியல்

ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக இந்தியப்பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. கடந்த 23 வருடங்களில் ஒரு பிரமிக்க்த்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புலி தனது இரையைப் பிடிக்கும்போது எந்த அளவு வலுவாக பிடிக்குமோ, அதைப்போல் இந்திய முதலாளித்துவம் இந்திய சமூகத்தை மிக வலுவாகப்பிடித்துள்ளது.

இந்தப் பிடி 23 வருடங்களில் எப்படி இவ்வளவு வலுவானதானதென்பது தனியாக ஆய்வு செய்யப்படவேண்டிய விஷயம். ஆனால் அதை விட மிக முக்கிய விஷயம் 2014 மே மாத்த்திற்குப் பிறகு இந்தியா எந்த பாதையை தேர்ந்து எடுக்க போகிறது என்பது தான். நாம் கவலையோடும் அக்கறையொடும் பார்க்க வேண்டிய நமது வருங்காலம் நம் கையில் உள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஓட்டுப்போட்டு நம் தலைவிதியை சற்று மாற்றிக்கொள்ளலாம் என்ற குறைந்தபட்ச நம்பிக்கை கூட வரப்போகிற் தேர்தலில் இல்லை. அப்ப்டி ஓட்டுப்போட்டு நாம் விரும்புகிற கூட்டணி அமைகிறது என்று வைத்துக்கொண்டாலும், கூட்டணிகள் மாறாது என்பதற்கு எந்த உத்த்ரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மக்கள் கோபவேசமாக போடும் ஒட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்போது, ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால் இன்றோ ஆட்சி மாற்ற்ம் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. எதுவும் மக்கள் கையில் இல்லை. தேர்தல் என்பதே ஒரு கட்டாய நாடகமாக மாறிவருகிற அபாயம் கண்கூடாக தெரிகிற்து. அந்த நாடகம் கூட கேளிக்கை நாடகமாக ஆக்கப்படும் நிலைமை இன்று உள்ளது.

கடந்த 5 வருடங்களில் பாராளுமன்றத்தின் சீரழிவோடு, முதலாளித்துவம் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்துள்ளது. அதனால் தான் தேர்தலும் கேளிக்கை நாடகமாக மாறும் அபாயம் இருக்கிறது.

அப்படியென்றால், 2014 எந்த அரசியல் பாதையில் செல்ல சாத்தியமாக உள்ளது? கடந்த பத்து வருட பொருளாதார அரசியல் சமூகப்போக்குகளைப் பார்க்கும் போது ஃபாஸிஸப் பாதையில் இந்தியா செல்லும்  வாய்ப்புகள் நிறைய உள்ளது.

அது என்ன ஃபாஸிஸ பாதை? ஆராய்வோம்.

ஃபாஸிஸம் என்ற விஷ விருட்சத்தின் விதைகள் கடந்த 5 வருடங்களாக வெகு வேகமாக தூவப்பட்டுவிட்டன. அதன் வேர்கள் நாடு முழுவதும் தோன்ற ஆரம்பித்துவிட்டன. சில இடஙகளில் செடிகளாகவும், சில இடங்களில் மரங்களாகவும் தென்படவும் ஆரம்பித்துவிட்டன. ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த பூதம் கிளம்பியுள்ளது. இத்தீய சக்தியை எதிர்த்து போராட அதன் அம்சங்களை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இந்தியாவில் பொருளாதாரக் கொள்கைகளால் விளைந்துள்ள பன்முக மாற்றங்கள் தன்மைகளை நாம் அக்கு வேர் ஆணீவேராக ஆராய வேண்டும்.

இந்தியாவின் ஏகாதிபத்தியத் தொடர்புகள்

உலகமயமாக்கல் என்பது ஏதோ ஒரு புது சொற்றொடராக இன்று அறிவுஜீவிகள் மத்தியில் பேசப்படுகிறது. முதலாளித்துவம் என்றாலே சந்தைப்பொருளாதாரம். சந்தை என்றாலே நாடுகளின் எல்லைகளை கடப்பது என்பது பொது விதி. பல்வேறு நாடுகள் கொண்ட உலகத்தில் ஒரு சில நாடுகள் உலகச்சந்தையை பங்கு போட்டுக்கொண்டு ஏகாதிபத்தியமாக உருமாறிப்போனது. 20ம் நூற்றாண்டின் புதிய அம்சம். ஏகாதிபத்தியத்தின் பொது விதி லாபம், லாபம் மட்டுமே. உலகிலுள்ள 90% சந்தையை அது தனதாக்கிக்கொள்ள எப்படிப்பட்ட ஆயுத்த்தையும் கையிலெடுப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. சமாதானம், ச்ச்சரவு, போர் இவை போக, தான் ஆக்கிரமித்துள்ள் சந்தை நாடுகளிலும் சரி, தனக்கு வளைந்து கொடுக்காத சந்தை நாடுகளிலும் சரி அங்குள்ள் ஜன்நாயக முற்போக்கு சக்திகளுக்கு எதிராக சதி வேலைகளையும் செய்யும். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலைகளை முடக்கவும், அவற்றை ஒழித்தொழிக்கவும் எல்லாவிதமான தில்லுமுல்லுகளையும் செய்யும்.

இந்திய முதலாளித்துவம் 1991 வரை ஒரு பாசாங்கு வேலை காட்டியது. சோஷலிச முகாமிலும் அணிசேரா நாடுகளுடனும் தன்னை இணைத்துக்கொண்டே ஏகாதிபத்தியத்துடன் சல்லாபித்தது. 1991ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின்னர் வேஷத்தை முற்றிலும் கலைத்துக்கொண்டு, அதுவரை பின்கதவை திற்ந்து உற்வு கொண்டிருந்த இந்திய முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்துக்கு வாசல் கதவை திறந்து வைத்த்து. இந்த 23 வருடங்களில் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சந்தைப்பொருளாதாரம் என்று என்னென்னவோ கூறிக்கொண்டு, ஏகாதிபத்தியத்துக்கு தங்குதடையின்றி இந்தியச்சந்தையை திறந்துவிட்ட்து. இந்திய்ப்பொருளாதார சட்டப்புத்தகஙகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றப்பட்ட்து. இந்திய பெருமுதலாளித்துவம் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய மக்களை சுரண்டும் புதிய வடிவத்திற்கு ஏற்ப இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

ஏகாதிபத்தியத்துடனான இந்த கூட்டு இந்திய மக்களை ஏகாதிபத்தியத்திடம் அனேகமாக அடகுவைத்த நிலைமைக்குத் தள்ளிவிட்ட்து. இந்தியப்பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது மட்டுமன்றி அரசியல் ஆதிக்கம், கலாச்சாரத்தாக்கம், பெரும்பான்மை சமுகத்தின் ஓர்முகத்தன்மை என ஏகாதிபத்தியத்தின் கை எல்லா இடங்களிலும் நீண்டுள்ளது. மக்களூக்கு சொந்தமான நீர், தாதுப்பொருட்கள், நிலவளங்கள், அலைக்கற்றை அனைத்தும் இந்திய முதலாளித்துவம்- ஏகாதிபத்தியம் கூட்டுக்கொள்ளை இந்திய மக்களை நிர்வாணமாக ஆக்கியுள்ளது. பெருமுதலாளிகள் வரிச்சலுகை, திரும்பக் கொடுக்காத வங்கிக்கடன் எல்லாம் பழைய கதை. பொதுத்துறை நிறுவன்ங்கள் சத்தம் காட்டாமல் அவர்களுக்கு தாரை வர்ர்க்கப்படுவதும் அவர்கள் அதை பன்னாட்டு மூலதனத்துடன் பங்கு போட்டுக்கொள்வதும் புதுக்கதை. ஊக வணிகத்தின் மூலம் வியாபாரம் செய்யாமலேயே பெருந்சொத்தை கொள்ளைஅடித்து, விலைவாசியை ஒன்றுக்கு பத்துமடஙகாக உய்ர்த்தி அதன் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் இந்த கூட்டணி ஒரு உச்சக்கட்ட்த்தை 2014ல் தொட்டிருக்கிறது.

தகவல் தொலைதொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி யூக வணிகத்துக்கு அடிகோலி பஙுகுச்சந்தை, கிரிக்கெட், சினிமா, நிலம் ஆகிய அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மூலதன்ம் செய்து மீண்டும் மீண்டும் சொத்துக்குவியல் ஒரு அபாயகரமான எல்லையில் நிற்கிறது. தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுக்கும் முதலாளிக்கு கிரிக்கெட் வீர்ருக்கு கோடிக்கண்க்கில் பணம் கொடுத்து வாங்க முடிகிறது. சட்டமும் எந்த கூச்ச நாச்சமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 100 முதலாளிகளின் வரலாறு காணாத சொத்துக்குவியல் ஏகாதிபத்தியத்துடன் உள்ள கூட்டை மேலும் வலுப்படுத்த உதவும்.

தகவல் தொலைதொடர்புத்துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சி யூக வணிகத்துக்கு அடிகோலி பஙுகுச்சந்தை, கிரிக்கெட், சினிமா, நிலம் ஆகிய அனைத்திலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மூலதன்ம் செய்து மீண்டும் மீண்டும் சொத்துக்குவியல் ஒரு அபாயகரமான எல்லையில் நிற்கிறது. தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுக்கும் முதலாளிக்கு கிரிக்கெட் வீர்ருக்கு கோடிக்கண்க்கில் பணம் கொடுத்து வாங்க முடிகிறது. சட்டமும் எந்த கூச்ச நாச்சமின்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். 100 முதலாளிகளின் வரலாறு காணாத சொத்துக்குவியல் ஏகாதிபத்தியத்துடன் உள்ள கூட்டை மேலும் வலுப்படுத்த உதவும்.

2014 மே மாத்த்திற்கு பிறகு அரசியல் தளத்தில் ஃபாஸிஸ முகம் முதல் முதலாக மிக வெளிப்படையாகத் தெரியும். கொஞச நஞ்ச ஜனநாயக வேஷமும் கலைக்கப்படும். அதற்கான முஸ்தீபுகள் அனைத்தும் ஊடகங்கள் மூலம் அற்ங்கேறிக்கொண்டிருக்கின்றன. பெரும்பான்மை ஒர்முகத்தன்மை ஃபாஸிஸத்தின் அச்சாக மாறும்.

Related Posts