அரசியல்

சங்கிக் கும்பலின் பொய்ப் பிரச்சாரங்கள்; வரிப் பணத்தை மாணவர்கள் வீணடிக்கிறார்களா?


 மத்தியில் ஆளும் பாஜக அரசு இரண்டாவது முறையாக மிகப்பெரிய பலத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது இதனையடுத்து மக்கள் விரோத திட்டங்களை அதிதீவிரமாக அமல்படுத்தி வருகிறது அதில் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்த சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதனால் பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் சிறுபான்மையின மக்கள் உட்பட எல்லோரும் போராடத் தொடங்கினர் இப்போராட்டத்தில் 23 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்
ஒரு பகுதியாக டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் மற்றும் இந்துத்துவ கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டனர். இது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது ஜாமியா பல்கலை கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் இடதுசாரி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் தங்களது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் கடுமையாக தெரிவித்து போராடி வந்தனர் இதன் ஒரு பகுதியாக ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம் JNU மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தற்போது ஏபிவிபி இந்துத்துவா கும்பல் பலர் JNU கல்லூரி வளாகத்திற்குள் சென்று 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கடுமையாக தாக்கினார்கள்.

இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் உட்பட அனைவரும் போராட்டம் மற்றும் கடும் எதிர்ப்புகளையம், கண்டனங்களையும் தெரிவித்துவரும் நிலையில் JNU கல்லூரியில் தாக்கப்பட்ட மாணவி ஆயிஷ் கோஷ் அவர்களை டெல்லி போலீஸ் சந்தேக நபர் பட்டியலில் வைத்துள்ளது.

இவ்வாறு ஆளும் பாஜக அரசு மாணவர்களை ஒடுக்கி வருகிறது.அதுமட்டுமில்லாமல் தனியார் தொலைக்காட்சிகள் சமூக வலைதளங்களில் இந்துத்துவா மற்றும் வலதுசாரி அமைப்புகள் மாணவர்கள் மீது பல குற்றங்களை சுமத்தி வருகின்றனர். அதில் அவர்கள் கூறுகையில் மக்களின் மக்கள் வரிப்பணத்தில் பயிலும் கல்லூரி மாணவர்கள் மக்கள் சொத்தை வீணடிக்கிறார்கள் என்ற பல பொய் பிரச்சார விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பிரண்ட் லைன் ஆசிரியர் விஜய் சங்கர் சந்தித்து பேசினோம் அதற்கு அவர் கூறுகையில்

இந்தியாவில் எல்லாரும் வரி காட்டுகிறார்கள் அதில் வருமான வரிகட்டுபவர்கள் இந்திய மக்கள் தொகை கணக்கின் படி 2% ,3% மக்கள் தான் . மேலும் வரி செலுத்துவதை இரண்டு வகையாக பிரிக்கலாம் ஒன்று தனி நபர் வரி ,மற்றோன்று பெருநிறுவன வரி இதனை செலுத்துபவரின் எண்ணிக்கை 1 கோடி பேர் மட்டும் தான் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

மீதமுள்ள 99 கோடி பேர் சேவை வரிகளை கட்டி வருகின்றனர். இந்த வருவாயின் கீழ் தான் அரசாங்கம் செயல் பட்டு வருகிறது.

இந்த வருவாயில் தான் இந்திய கல்வி நிறுவனமான IIT, IIM ,NIT ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் உயர் நிலை கல்வி நிதியாக 50% ஒதுக்கப்படுகிறது. இது அந்நிறுவனத்தில் பயின்று வரும் 3% சதவீத இந்திய மாணவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. மீதமுள்ள 97% சதவீத மாணவர்களுக்கு 40% -42% தான் சென்றைடைகிறது. இதில் 890 பல்கலைகழக கல்லூரிகளும் அடங்கும்.

மேலும் இந்த 50% சதவீத நிதியில் 26% சதவீதம் IIT நிறுவனத்திற்கும் சென்றடைகிறது இதை பயன் பெரும் இந்திய மாணவர்கள் 1.18 % சதவீதம் பேர், NIT நிறுவனத்திற்கு 17% சதவீதம் இந்த நிதியில் பயன் பெரும் மாணவர்கள் 1.3% சதவீத பேர் , மேலும் IIM மற்றும் இதர நிறுவனங்களுக்கு 13% சதவீதம் இந்த நிதியில் பயன் பெறுபவர் .12 % பேர் மட்டுமே .

இவ்வாறு அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் உயர் சாதியினர் மட்டுமே பயில்கிறார்கள். இவர்கள் படிப்பை முடித்ததும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறாரகள். இவர்களுக்கு தான் இந்திய அரசாங்கம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால் 40% -42% சதவீத நிதி பெரும் 97% மாணவர்கள் தான் இந்தியாவில் பனிபுரிகிறார்கள். போலி சீட்களும் உருவாக்கப்படுகிறது.இது போன்ற பல்வேறு பிரச்சனைகளும் மோசடிகளும் ,ஏமாற்று வேலைகளும் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்துத்துவா மற்றும் ஆர்.எஸ்.எஸ் , பாஜக போன்ற கும்பல்கள் மக்களுக்கு எதிரான இந்திய நாட்டிற்கு எதிரான பல்வேறு செயல்களையும் அதிதீவிரமாக செய்து வருவதோடு மாணவர்களை தாக்கியும் போராடும் மாணவர்கள் மீது பொய் பிரச்சாரங்களையும் பல வதந்திகளையும் பரப்பி வருகிறது.

  • தொகுப்பு: வீரமணி.

Related Posts