அறிவியல்

ஈபெல் கோபுரம்!

சூரிய உதயத்தின் போது‍ ஈபெல் கோபுரத்தின் காட்சி

Eiffel Tower as seen from the Champ de Mars

பாரிசிலுள்ள ஈபெல் கோபுரத்தை ஜுன் 3, 1902 அன்று இரவு 9.20 மணிக்கு மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட படம் மேலே காட்டப்பட்டுள்ளது. ஒரு நகரப் பகுதியில் மின்னல் தாக்குவதைப் பற்றிய மிகப் பழைய படங்களுள் இதுவும் ஒன்று.

ஈபெல் கோபுரத்தைப் பற்றி

இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக்கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக்கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 இல் பெற்றது‍. 1889, மார்ச் 31 ஆம் தேதி தொடக்க விழா நடைபெற்று, மே 6 இல் திறந்துவிடப்பட்டது.

கோபுரத்தின் அடித்தளம் 1887 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிழக்கு மற்றும் தெற்கு கால்கள் நேராகவும் மற்றும் ஒவ்வொரு கால்களும் 6 அடி 6 அங்குலம் உள்ள திண்ணமான சிமிட்டி பலகையில் நிறுத்தப்பட்டது. மற்ற இரு கால்களும், சேனி நதி அருகே இருந்ததால் ஒவ்வொன்றிக்கும் இரண்டு ஆழ் அடித்தளம் தேவைப்பட்டது. அவை அழுதப்பட்ட காற்று கேய்சான்கள் மூலமாக (49 X 20 X 22 அடி ) அமைக்கப்பட்டது. இந்த பலகையானது இரும்பு வேலைப்பாடுகளை (லாடம்) தாங்கக்கூடிய வளைந்த தலை உடைய சுண்ணாம்பு தொகுதியால் அமைக்கப்பட்டது. இந்த லாடாமானது 25 அடி நீளமும் 4 அங்குலம் சுற்றளவும் கூடிய திருகு அச்சாணியால் இரும்பு வேலைப்பாட்டுடன் கோர்க்கப்பட்டது.  1959 இல் தற்போதுள்ள வானொலி அலைவாங்கி அதன் உச்சியில் பொருத்தப்பட்டது.

Source: தமிழ் விக்கிப்பீடியா

Related Posts