அரசியல்

“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்!

எல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.

மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன்.

இந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்த வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை பாத்து வந்திருக்கிறேன். இல்லை வளர்ந்திருக்கிறேன். எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாதா வயசுல சாதியால் பல அவமானங்களை சந்தித்திருக்கேன். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளி. என் அம்மா செய்யற வேலைய வச்சே என்னை பிரிச்சு வைக்க ஆரம்பிச்சாங்க.

அம்மா பாக்குற வேலைய சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்த்திருக்கு. அதனால் நான் என் அம்மா செய்யும் வேலையும், என் குடும்பத்த பத்தியும் யார்கிட்டயாவது சொல்லவே தயங்கிறேன். அத அப்படியே தொடரும் என்கிற விசயத்தைதான் இந்த சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடம்.

எல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால் அவங்கள பிடிக்கும்போதெல்லாம் அவங்க பாக்குறவேலை என்ன என்னை இன்னும் கஷ்டப்படுத்தும். அம்மா ஒருநாள் கூட காலை 10 மணி வரை தூங்கி பார்த்ததில்லை; காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க.

அவங்க செய்யுறா அந்த வேலைக்கு வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு போகனும். திரும்ப வேலை முடிந்து சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க. கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை. ஒருநாளைக்கு 1,000 முறை குனிந்து குப்பை அள்ளனும். அந்த வேலையில் இல்லாத வேலையே கிடையாது.

வண்டி தள்ளனும்; கக்கூஸ் கழுவனும், பெரிய லாரில குப்பை அளிட்டு போகனும் என இப்படியே சொல்லிகிட்டு போகலாம். அம்மாவோட வேலையை இந்த மூனு வரில சுறுக்கி சொல்லிட முடியும். ஆனா அவங்க வேலை அப்படி இல்லை.

காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க. அதுக்கும் வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு ஆறு மணிக்கலாம் போகனும்னு தினமும் அவசர அவசரமா போவாங்க.
வேலை முடிஞ்சு சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க.

எப்பவும் அவங்க சொல்றது “எனக்கு உடம்பு வலிக்குது”. “விடும்மா சரி ஆகிரும்னு நானும் சாதாரணமா எடுத்துப்பேன். ஆனா ஒரு நாள் என் அம்மாவை பாக்க வேலை செய்யுற இடத்துக்கு போயிருந்தேன். அங்க போன ஒரு டிராக்டர் நிறையா குப்பை, அதுல என் அம்மா ஏறி நின்னுட்டு குப்பையை வாங்கிட்டுருந்தாங்க. அது என்ன ரொம்பவும் பாதிச்சுச்சு.

அப்புறம் ஒரு நாள் பொது கழிவறையை கழுவிவிட்டு இருந்தாங்க. அப்போ எங்க அம்மாகிட்ட ஒரு சரியான உபகரணம் கூட கிடையாது. இப்படி அவங்க தினமும் கஷ்டப்படுவாங்க. ஏன் இப்படி கஷ்டபடறனு நான் எங்க அம்மாகிட்ட கேட்கிற கேள்விக்கு அவங்க சொல்ற பதில், “விடுடா…என்னால பல குடும்பம் நல்லா இருக்குல… இல்லைனா இத யாரு செய்யுறது.” அதவிட இன்னோரு காரணம் வர்க்க பிரச்சனை.

இந்த ஏழை வர்க்கத்துக்கு இருக்கிற அந்த பொதுவான பொருளாதார பிரச்சனை எங்களுக்கு இருக்கு. அதை சமாளிக்க ஒரு சாதியா ஒதுக்கி எங்கல இதேவேலைய பாக்க வச்சுட்டீங்க.
இதையெல்லாத்தையும் ஒரு பெண்ணா அவங்க சமாளிக்கறது ரொம்பவும் கஷ்டம். ஆனா என் அம்மா சமாளிச்சாங்க.

அந்த மாதிரி கடும் வேதனையில இருந்தப்ப தான் உங்களோடு நாடகம் ஒன்ன பார்த்தேன். அதான் நீங்க ஒரு ஏசி ரூம்பல துப்புறவு பணியாளர்களோட காலை கழுவி, அபிசேகம் செஞ்சு என்னஎன்னோ பண்ணிங்களே. அப்போ ஒரு வித நம்பிக்கை இருந்துச்சு. எங்க அம்மாக்கு நாளையில இருந்து பாதுகாப்பு உபகரணம் கொடுத்துருவீங்கனு. ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த சில நாள் வரை கூட நீடிக்கல.

இப்போ உலகம் முழுக்கவும் கொரோனா தொற்று மிக தீவிரமா பரவிட்டு வருது. அதனால இந்தியாவிலும் போன மாசம் மார்ச் 21ல இருந்து ஏப்ரல் 14 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. இதனால் எல்லாம் முடங்கி போச்சு. ஆனால் செவிலியர், மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர் ன்னு சில துறைகள் மட்டும் வேலை செஞ்சு வராங்க.
அதுல என் அம்மா சார்ந்த துறையும் உண்டு. இப்பவும் கூட வழக்கம் போல பஸ் கிடையாதுன்னு அம்மா ரொம்பவும் கஷ்டப்படறாங்க. ஒரு நாள் போய்ட்டு வரணும்னா 100 ரூபா செலவு ஆகுது. இப்படி 21 நாள் போகணும். அதற்கான தொகைய யாரு கொடுப்பா.. அதுவுல்லாமல், இந்த நேரத்தில் கூட அவங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கொடுக்கல. வழக்கம் போல விளம்பரத்துக்காக நீங்க கொடுப்பது போல நூத்துல 3 பேருக்கு கிடைச்சிருக்கு.

சரின்னு இந்த பிரச்சனைக்கு மத்தியில வாங்குற சம்பளம் இந்த மாசமாவது முழுச வந்துரும். வங்கில வாங்குன கடனை எடுத்துக்கமட்டாங்க. அதைதான நிதியமைச்சர் சொன்னாங்க என எதிர்பார்போடு இருந்தப்பதான். நாங்க பெரிய நடுத்துர வர்க்கத்திடம் மட்டும் தான் வாங்க மாட்டோம் உங்கல போல அன்னாடங்காச்சியெல்லாம் வாங்குன கடனுக்கு வட்டி கட்டிதான் ஆகுனும்னு பேங்க காரன் சொல்லாமல் சொல்லி வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏரலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.

இந்த மாசம் சம்பளம் வந்தா அத வச்சு சாப்பாட்டுக்கு பாத்துக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏறலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.

ஆனா அரசு அறிவிச்சது என்ன ? மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா? இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா? அது ரொம்ப வேதனையா இருக்கு
தமிழக அரசு கொடுக்குற 1000 ரூபாய் எத்தனை நாளைக்கு போதும்னு சொல்லுங்க.

நிறைய ஜனங்க தினக்கூலிக்காரங்க… வேலையில்லாம, வீடு இல்லாம இப்படி சோத்துக்கே வழி இல்லாம இருக்காங்க பசியோடயும் பட்டினியோடும்…
நம்ம நாட்டு பிரதமர் இதை கவணிக்காம போன வாரம் கை தட்டவும், இந்த வாரம் விளக்கு ஏத்துவும் சொல்றாரு. எதுக்கு இதெல்லாம்னு எங்க அம்மா வெள்ளந்தியா கேக்கறாங்க; உங்களுக்கு தர மரியாதைனு சொன்னா, தலையில அடிச்சிட்டு சிரிக்கறாங்க.. அவங்களால அதை மட்டும் தான் பண்ண முடியுது… இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க. உங்க வீட்டு குப்பையை அள்ள வரவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கீங்களானு கேட்க முடியுமா?… சொல்லுங்க பாப்போம்….

இன்னும் சொல்லனும்னா எங்க அம்மா மாதிரி வாழ்க்கையை ஓட்ட வேலை செய்றவங்களை இத்தனை நாள் கண்டுக்காத சமூகம் தன்னோட கழுத்துக்கும் பாதிப்பு வரும்னு தெரிஞ்ச உடனே ரியல் ஹீரோ-னு சொல்லுது. காலை கழுவி விடுது; வீட்டோட பால்கனியில் நின்னு பூவை தூவுறாங்க. எனக்கு புரியல. ஏன் இதெல்லாம் செய்யறீங்க… மரியாதைக்கா?. என்னைக்கும் இல்லாத மரியாதை இன்னைக்கு ஏன்னு எங்க அம்மா கேட்டா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும். கைக்கும், உடலுக்கும் எப்ப பாதுகாப்பு பொருட்கள் வரும்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க;பழகிப் போன எனக்கு அந்த பதில் தெரியல… “. இந்த சமூகத்தின் மீது இருக்கற கோவம் வெறுப்பாகல, அதற்கு காரணம் ஆட்சிதான். ஆட்சி சரியா இருந்தா தானே மக்கள் சரியா இருப்பாங்க. உங்க ஆட்சியில என்ன செஞ்சீங்க, பட்டியல் போடுங்கனு நான் கேட்க வரல… எங்க அம்மாக்கு ஏன் உபகரணம் கொடுக்கலனு கேக்குறேன். அந்த வேல செய்யுற அத்தன பேரோட மகனா கேக்குறேன். ஏன் இன்னும் கொடுக்கல மிஸ்டர் மோடி..“எங்களுக்கு கொரோனா வராதா..” : பிரதமர் மோடிக்கு தூய்மைப் பணியாளரின் மகன் எழுதும் திறந்த மடல்!

எல்லோருக்குமான பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.

மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்களே, என் இதயம் கணத்த வலியோடு, வழியும் நீர்களினால் என் கண்களின் ஈரம் வற்றிவிடும் அளவிறாக தீராவேதனையில் இந்த மடலை எழுதுகின்றேன்.

இந்த வலிக்குக் காரணம் நான் என்னோட சின்ன வயசுல இருந்தே இந்த சமூகத்துல பார்த்த பிரச்சனை; குறிப்பாக இந்த சாதியால் நான் அடைந்தே வேதனை. இப்படியே பல பிரச்சனைகளை பாத்து வந்திருக்கிறேன். இல்லை வளர்ந்திருக்கிறேன். எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாதா வயசுல சாதியால் பல அவமானங்களை சந்தித்திருக்கேன். என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளி. என் அம்மா செய்யற வேலைய வச்சே என்னை பிரிச்சு வைக்க ஆரம்பிச்சாங்க. அம்மா பாக்குற வேலைய சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்த்திருக்கு. அதனால் நான் என் அம்மா செய்யும் வேலையும், என் குடும்பத்த பத்தியும் யார்கிட்டயாவது சொல்லவே தயங்கிறேன். அத அப்படியே தொடரும் என்கிற விசயத்தைதான் இந்த சமூகம் எனக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடம்.

எல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால் அவங்கள் பிடிக்கும்போதெல்லாம் அவங்க பாக்குறவேலை என்ன என்னை இன்னும் கஷ்டப்படும். அம்மா ஒருநாள் கூட காலை 10 மணி வரை தூங்கி பார்த்ததில்லை; காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க. அவங்க செய்யுறா அந்த வேலைக்கு வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு போகனும். திரும்ப வேலை முடிந்து சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க. கிட்டத்தட்ட 12 மணி நேர வேலை. ஒருநாளைக்கு 1000 முறை குனிந்து குப்பை அள்ளனும். அந்த வேலையில் இல்லாத வேலையே கிடையாது.

வண்டி தள்ளனும்; கக்கூஸ் கழுவனும், பெரிய லாரில குப்பை அளிட்டு போகனும் என இப்படியே சொல்லிகிட்டு போகலாம். அம்மாவோட வேலையை இந்த மூனு வரில சுறுக்கி சொல்லிட முடியும். ஆனா அவங்க வேலை அப்படி இல்லை.

எப்பவும் அவங்க நான் சின்ன வயசுல இருந்தே சாதிய பிரச்சனையை பாத்து வந்திருக்கிறேன். அப்போ எல்லாம் எனக்கு அது சாதி தான்னு கூட தெரியாது. என் வீட்டில் என் அம்மா ஒரு துப்புரவு தொழிலாளர். என் அம்மா செய்யற வேலையை சொல்லி என்னை ஏளனமாக இந்த சமூகம் பார்க்குது. இதனால் நான் என் அம்மா செய்யும் வேலையை என் நண்பர்கள் கிட்ட சொல்லக் கூட தயங்கறேன்.

இந்த சமூகம் எனக்கு அறிமுகப்படுத்தின முதல் பாடம் அது.

எல்லா பசங்களுக்கும் அம்மா-னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் அப்படி தான்.ஆனால் அப்படி பிடிப்பதற்கு கூட எனக்கு ஒரு விதமான துன்பமும் உண்டு.
என் அம்மா பாக்குற வேலை அப்படி.

காலைல 3 மணிக்கெல்லாம் எந்திருச்சு கிளம்பிடுவாங்க.அதுக்கும் வீட்லருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் அந்த 5 மணி பஸ்ஸை பிடிச்சு வேலைக்கு ஆறு மணிக்கலாம் போகனும்னு தினமும் அவசர அவசரமா போவாங்க.
வேலை முடிஞ்சு சாயந்தரம் 6 மணிக்கு வருவாங்க. வந்து வீட்டுலயும் வேலை பாப்பாங்க.

எப்பவும் அவங்க சொல்றது “எனக்கு உடம்பு வலிக்குது”. “விடும்மா சரி ஆகிரும்னு நானும் சாதாரணமா எடுத்துப்பேன். ஆனா ஒரு நாள் என் அம்மாவை பாக்க வேலை செய்யுற இடத்துக்கு போயிருந்தேன். அங்க போன ஒரு டிராக்டர் நிறையா குப்பை, அதுல என் அம்மா ஏறி நின்னுட்டு குப்பையை வாங்கிட்டுருந்தாங்க. அது என்ன ரொம்பவும் பாதிச்சுச்சு.

அப்புறம் ஒரு நாள் பொது கழிவறையை கழுவிவிட்டு இருந்தாங்க. அப்போ எங்க அம்மாகிட்ட ஒரு சரியான உபகரணம் கூட கிடையாது. இப்படி அவங்க தினமும் கஷ்டப்படுவாங்க. ஏன் இப்படி கஷ்டபடறனு நான் எங்க அம்மாகிட்ட கேட்கிற கேள்விக்கு அவங்க சொல்ற பதில், “விடுடா…என்னால பல குடும்பம் நல்லா இருக்குல… இல்லைனா இத யாரு செய்யுறது.” அதவிட இன்னோரு காரணம் வர்க்க பிரச்சனை.

இந்த ஏழை வர்க்கத்துக்கு இருக்கிற அந்த பொதுவான பொருளாதார பிரச்சனை எங்களுக்கு இருக்கு. அதை சமாளிக்க ஒரு சாதியா ஒதுக்கி எங்கல இதேவேலைய பாக்க வச்சுட்டீங்க.
இதையெல்லாத்தையும் ஒரு பெண்ணா அவங்க சமாளிக்கறது ரொம்பவும் கஷ்டம். ஆனா என் அம்மா சமாளிச்சாங்க.

அந்த மாதிரி கடும் வேதனையில இருந்தப்ப தான் உங்களோடு நாடகம் ஒன்ன பார்த்தேன். அதான் நீங்க ஒரு ஏசி ரூம்பல துப்புறவு பணியாளர்களோட காலை கழுவி, அபிசேகம் செஞ்சு என்னஎன்னோ பண்ணிங்களே. அப்போ ஒரு வித நம்பிக்கை இருந்துச்சு. எங்க அம்மாக்கு நாளையில இருந்து பாதுகாப்பு உபகரணம் கொடுத்துருவீங்கனு. ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த சில நாள் வரை கூட நீடிக்கல.

இப்போ உலகம் முழுக்கவும் கொரோனா தொற்று மிக தீவிரமா பரவிட்டு வருது. அதனால இந்தியாவிலும் போன மாசம் மார்ச் 21ல இருந்து ஏப்ரல் 14 வரைக்கும் ஊரடங்கு உத்தரவு போட்டாங்க. இதனால் எல்லாம் முடங்கி போச்சு. ஆனால் செவிலியர், மருத்துவர், காவலர், தூய்மை பணியாளர் ன்னு சில துறைகள் மட்டும் வேலை செஞ்சு வராங்க.
அதுல என் அம்மா சார்ந்த துறையும் உண்டு. இப்பவும் கூட வழக்கம் போல பஸ் கிடையாதுன்னு அம்மா ரொம்பவும் கஷ்டப்படறாங்க. ஒரு நாள் போய்ட்டு வரணும்னா 100 ரூபா செலவு ஆகுது. இப்படி 21 நாள் போகணும். அதற்கான தொகைய யாரு கொடுப்பா.. அதுவுல்லாமல், இந்த நேரத்தில் கூட அவங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் கொடுக்கல. வழக்கம் போல விளம்பரத்துக்காக நீங்க கொடுப்பது போல நூத்துல 3 பேருக்கு கிடைச்சிருக்கு.

சரின்னு இந்த பிரச்சனைக்கு மத்தியில வாங்குற சம்பளம் இந்த மாசமாவது முழுச வந்துரும். வங்கில வாங்குன கடனை எடுத்துக்கமட்டாங்க. அதைதான நிதியமைச்சர் சொன்னாங்க என எதிர்பார்போடு இருந்தப்பதான். நாங்க பெரிய நடுத்துர வர்க்கத்திடம் மட்டும் தான் வாங்க மாட்டோம் உங்கல போல அன்னாடங்காச்சியெல்லாம் வாங்குன கடனுக்கு வட்டி கட்டிதான் ஆகுனும்னு பேங்க காரன் சொல்லாமல் சொல்லி வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏரலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.

இந்த மாசம் சம்பளம் வந்தா அத வச்சு சாப்பாட்டுக்கு பாத்துக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா வழக்கம் போல வங்கில கடன் பிடிச்சுட்டாங்க சிறப்பு ஊதியமும் ஏறலைனு பேங்க்ல சொல்றாங்களாம்.

ஆனா அரசு அறிவிச்சது என்ன ? மூணு மாசம் கடன் பிடிக்க மாட்டோம், சிறப்பு ஊதியம், வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது…. ஆனா இது எல்லாமே நடந்திருக்கா? இல்லை. இப்படி காலம் காலமாக நாங்க ஏமாந்துகிட்டயோதான் இருக்கனுமா? அது ரொம்ப வேதனையா இருக்கு
தமிழக அரசு கொடுக்குற 1000 ரூபாய் எத்தனை நாளைக்கு போதும்னு சொல்லுங்க.

நிறைய ஜனங்க தினக்கூலிக்காரங்க… வேலையில்லாம, வீடு இல்லாம இப்படி சோத்துக்கே வழி இல்லாம இருக்காங்க பசியோடயும் பட்டினியோடும்…
நம்ம நாட்டு பிரதமர் இதை கவணிக்காம போன வாரம் கை தட்டவும், இந்த வாரம் விளக்கு ஏத்துவும் சொல்றாரு. எதுக்கு இதெல்லாம்னு எங்க அம்மா வெள்ளந்தியா கேக்கறாங்க; உங்களுக்கு தர மரியாதைனு சொன்னா, தலையில அடிச்சிட்டு சிரிக்கறாங்க.. அவங்களால அதை மட்டும் தான் பண்ண முடியுது… இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க. உங்க வீட்டு குப்பையை அள்ள வரவங்ககிட்ட பாதுகாப்பா இருக்கீங்களானு கேட்க முடியுமா?… சொல்லுங்க பாப்போம்….

இன்னும் சொல்லனும்னா எங்க அம்மா மாதிரி வாழ்க்கையை ஓட்ட வேலை செய்றவங்களை இத்தனை நாள் கண்டுக்காத சமூகம் தன்னோட கழுத்துக்கும் பாதிப்பு வரும்னு தெரிஞ்ச உடனே ரியல் ஹீரோ-னு சொல்லுது. காலை கழுவி விடுது; வீட்டோட பால்கனியில் நின்னு பூவை தூவுறாங்க. எனக்கு புரியல. ஏன் இதெல்லாம் செய்யறீங்க… மரியாதைக்கா?. என்னைக்கும் இல்லாத மரியாதை இன்னைக்கு ஏன்னு எங்க அம்மா கேட்டா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்லட்டும். கைக்கும், உடலுக்கும் எப்ப பாதுகாப்பு பொருட்கள் வரும்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க;பழகிப் போன எனக்கு அந்த பதில் தெரியல… “. இந்த சமூகத்தின் மீது இருக்கற கோவம் வெறுப்பாகல, அதற்கு காரணம் ஆட்சிதான். ஆட்சி சரியா இருந்தா தானே மக்கள் சரியா இருப்பாங்க. உங்க ஆட்சியில என்ன செஞ்சீங்க, பட்டியல் போடுங்கனு நான் கேட்க வரல… எங்க அம்மாக்கு ஏன் உபகரணம் கொடுக்கலனு கேக்குறேன். அந்த வேல செய்யுற அத்தன பேரோட மகனா கேக்குறேன். ஏன் இன்னும் கொடுக்கல மிஸ்டர் மோடி..

Related Posts