பிற

டிமிட்ரிவ் மெண்டெலிவ்

வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவரும், ரஷ்யாவைச் சேர்ந்த வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான டிமிட்ரி இவனோவிச் மெண்டெலிவ் (Dimitri Mendeleev – பெப்ரவரி 8, 1834 – பெப்ரவரி 2, 1907) பிறந்த நாள்.

1861 இல் நிறமாலைகாட்டி (spectroscope) பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டர். இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 1862 இல் மெண்டெலிவ் சென் பீட்டர்ஸ்பேர்க் அரசு‍ தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியரானார். 1863 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் அரசு‍ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1865 இல் நீருடன் அற்ககோலின் சேர்க்கை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

மெண்டெலிவ் ஆசிரியரான பின்னர் மாணவர்களுக்காக வேதியியலின் தத்துவங்கள்  (1868-1870) என்ற நூலை எழுதினார். வேதியியல் தனிமங்களின் இயல்புகளை வகைப்படுத்தும் போதே அவர் தனது ஆவர்த்தன அட்டவணையை அறிமுகப்படுத்தினார். மார்ச் 6, 1869 இல் மெண்டெலிவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த அட்டவணையை சமர்ப்பித்தார்.

மெண்டெலிவ் அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை வரையறுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

Related Posts