பிற

இஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)

#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948

deir01948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற கிராமத்தினைசுற்றிவளைத்தது. ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை அங்கேயே சுட்டுக்கொன்றனர் இர்குன் பயங்கரவாதிகள். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அக்கிராமத்தில் இருந்த 144 வீடுகளில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும், இறந்தவர்களின் எண்ணிக்கை 300கும் மேற்பட்டதாக இருக்கும் என்றும் செஞ்சுலுவைச் சங்கம், நியூ யார்க் டைம்ஸ், பிபிசி ஆகியோரின் தரவுகள் தெரிவிக்கின்றன.

உயிரோடு இருந்த மீதமுள்ள ஏராளமான ஆண்களை டிரக்குகளில் ஏற்றிக்கொண்டு மற்ற கிராமத்து மக்களின் கண்முன்னே கொலைசெய்து ஆங்காங்கே வீசி எறிந்தனர். இதன் மூலம் ஜெருசலத்தை சுற்றி வாழ்ந்துவந்த பாலஸ்தீனர்களை பயமுறுத்தி ஊரைவிட்டே காலிசெய்வதுதான் இர்குன் அமைப்பின் நோக்கமாக இருந்தது. அவர்கள் நினைத்தது போலவே நடந்தது. ஜெருசலத்தின் பெரும்பகுதி இஸ்ரேலின் வசம் சென்றதற்கு, டேர் யாசின் படுகொலையும் மிகமுக்கியமான காரணமும் துவக்கமும் ஆகும். ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட டிராக்குகள் பாலஸ்தீனப் பகுதிகள் எங்கும் இர்குன் அமைப்பினரால் அனுப்பப்பட்டன. “உங்களுடைய கிராமத்திலிருந்து நீங்கள் வெளியேறாவிட்டால், டேர் யாசினைப்போல உங்களையும் படுகொலை செய்வோம்” என்று பாலஸ்தீனர்கள் மிரட்டப்பட்டனர்.

1948 ஆம் ஆண்டில் இதே நாளில் (ஏப்ரல் 9) ஒரு இனப்படுகொலையை நடத்திய இர்குன் பயங்கரவாத அமைப்பின் தலைவனான மெனகன் பெகின் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமரானான்.

menegen1“டேர் யாசின் படுகொலையை நடத்தியிருக்காவிட்டால் இன்றைக்கு நாம் பார்க்கிற இஸ்ரேல் என்கிற தேசமே உருவாகியிருக்காது”

என்று மெனகன் பெகின் பெருமைபொங்க சொன்னான். அவனுக்கு 1978இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

Related Posts