பிற

டிசம்பர் 25!

டிசம்பர் 25, 1968

தமிழ்நாடு ஒன்றுபட்ட தஞ்சாவூர் (இன்றைய நாகப்பட்டினம்) மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில், கீழவெண்மணி கிராமத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்த படுகொலை நிகழ்வு நடைபெற்றது‍.  இன்று‍ அந்நிகழ்வின் 45 ஆவது‍ நினைவு தினம் இன்று‍ அனுசரிக்கப்படுகிறது.

இப்படுகொலையில் பலியானவர்களின் பெயர்கள் மற்றும் வயது‍:-

1. சுந்தரம் (45)

10. கருணாநிதி(12) 19. ராஜேந்திரன் (7) 28. பட்டு (46) 37. நடராசன் (6)
2. சரோஜா(12) 11. வாசுகி (5) 20. சுப்பன் (70) 29. சண்முகம் (13) 38. அஞ்சலை (45)
3. மாதாம்பாள்(25) 12. குஞ்சம்பாள் (35) 21. குப்பம்மாள் (35) 30. முருகன் (40) 39. ஆண்டாள் (20)
4. தங்கையன் (5) 13. பூமயில் (16) 22. பாக்கியம் (35) 31. ஆச்சியம்மாள் (30) 40. சீனிவாசன் (40)
5. பாப்பா (35) 14. கருப்பாயி (35) 23. ஜோதி (10) 32. நடராஜன் (10) 41. காவிரி (50)
6. சந்திரா (12) 15. ராஞ்சியம்மாள் (16) 24. ரத்தினம் (35) 33. ஜெயம் (6) 42. வேதவள்ளி (10)
7. ஆசைத் தம்பி (10) 16. தாமோதரன் (1) 25. குருசாமி (15) 34. செல்வி (3) 43. குணசேகரன் (1)
8. வாசுகி (3) 17. ஜெயம் (10) 26. நடராசன் (5) 35. கருப்பாயி (50) 44. ராணி (4)
9. சின்னப்பிள்ளை (28) 18. கனகம்மாள் (25) 27. வீரம்மாள் (25) 36. சேது (26)

இன்றயை தினத்தில் இறந்தவர்கள்

சார்லி சாப்ளின்

டிசம்பர் 25, 1977

சர் சார்லஸ் சாப்ளின் நினைவு நாள் (டிசம்பர் 25, 1977)

சாப்ளினின் பற்றி சிறு‍ குறிப்பு…

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 – டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான “தி கிரேட் டிக்டேடர்” (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம்.

சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக “மாடர்ன் டைம்ஸ்” (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. சாப்ளின் 1922, 1972 ஆகிய இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.

இன்றயை தினத்தில் பிறந்தவர்கள்

டிசம்பர் 25, 1642 – ஆங்கிலக் கணிதவியலாளரும், அறிவியலாளருமான ஐசக் நியூட்டன் பிறந்த தினமாகும்.

டிசம்பர் 25, 1924  – 1996 ஆம் ஆண்டு சில காலமும், 1998 இல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள்.

டிசம்பர் 25, 1949 – 1990 முதல் 1993 வரை பின்னர் 1997 முதல் 1999 வரை ஆகிய இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான் முகமது நவாஸ் ஷெரீப் பிறந்த நாள்.

Related Posts