தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

நட்புக்கு இலக்கணம் மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் …

திருமண நிகழ்ச்சிகளில் நமது பகுத்தறிவுத் தலைவர்கள் உரையாற்றுவார்கள் “நகமும் சதையும் போல“ அல்லது “வள்ளுவனும் வாசுகியும் போல“ என்று. இந்தப் பேச்சில் முகம் சுழிக்கும் ஆன்மீகவாதிகள் எங்கள் ஆன்மீகத்தில் இல்லாத வாழ்வியலா? பாருங்கள், நல்லவர்களை எடுத்துக் கொண்டால் குசேலனையும், கண்ணனையும் கூறலாம் கெட்டவர்களானாலும் துரியோதனையும் கர்ணனையும் கூறலாம் என்பார்கள். மார்க்சிய வட்டாரமானது நட்பு என்பதை ஒரு படி கடந்து அதன் உயர்ந்த கட்டம் தோழமை என்கிறது. அது லட்சியத்துடன் கூடிய நட்பையே தோழமை என்கிறது. லட்சியத்துடன் ஒரு மனிதன் வாழ்வது அவ்வளவு எளிதா? லட்சியத்துடன் வாழ நினைக்கும் மனிதனின் (நாகேஷ்) வாழ்வை சுழல் காற்றில் அகப்படும் குப்பைக் காகிதம் போன்றது என்பார் ‘புன்னகை‘ என்ற படத்தின் மூலமாக இயக்குனர் பாலச்சந்தர். எனினும் தோழமையை கற்பனாவாதம் என்று வாதிடுபவர்கள் உண்டு. அதை நாமும் எளிதில் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் நாம் தோழமையை முக்கிய உறவாக இருக்கும் சமூகத்தில் வாழவில்லை இன்றைய சமூகத்தில் நட்புதான் நிஜம் என்றும் கூறுபவர்களுக்கும் மார்க்சிய வட்டாரத்தில் பதில் இருக்கிறது. அதுதான் மார்க்ஸூம் ஏங்கெல்ஸூம் போல.

ஒரு மனிதன், அதிலும் சிறந்த அறிவாளி, மேதைமையுடையவர் தன் வாழ்நாளில் தன்னுடைய சொந்த வாழ்கைகையை தொலைத்துவிட்டு பாட்டாளி வர்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்; அன்றாட வாழ்க்கைக்காக போராடியவர்; நண்பரிடமிருந்து பணம் வாங்கி அன்றாட வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருந்தார் என்பதை நூலின் அறிமுக முன்னுரையைப் படிக்கும் பொழுது 20ம் பக்கத்தை கடிதத்தை கடந்து செல்கையில் உணர முடிகிறது. நமக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் பள்ளிப் பாடத்தையும் பரீட்சையையும் விட்டால் ஒருவரின் முதல் எழுத்து என்பது அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதமாகத்தான் இருக்கும். அன்புள்ள நண்பனே என்று துவங்கி, இருவரும் கழித்த இனிய பொழுதுகளை அசைபோடும் அந்தக் கடிதம்.

மூலதன நூலை எழுதி முடித்த மார்க்ஸ் ஏங்கெல்ஸூக்கு எழுதிய கடிதத்தில் வரும் வாசகத்தைப் பாருங்கள் “முன்னுரையைத் திருத்தி நேற்று அனுப்பினேன். ஆக இந்தப் பாகம் முடிந்தது. இது சாத்தியமானதற்கு காரணம் நியேதான். தன்னலம் கருதா உனது தியாகம் எனக்கு கிடைத்திராவிட்டால் மூன்று பாகங்களுகளுக்குமான பெரும் பணியை என்னால் ஒரு நாளும் செய்திருக்க முடியாது. நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் ஆரத்தழுவுகிறேன் உன்னை! திருத்திய அச்சுப் படிகள் இரண்டை இத்துடன் இணைத்துள்ளேன். 15 பவுண்ட் பணம் கிடைக்கப் பெற்றேன் நன்றி.“ (பக்கம் 20) ஒரு லட்சிய நட்பின் இலக்கணத்திற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதையாவது கூற முடியுமா? இதைத்தான் மார்க்சிய வட்டாராம் தோழமை என்கிறது. இந்த உணர்வு பூர்வமான கடிதத்தை இலக்கிய ரசனையுள்ளவர்கள் எவராது அவர்து வாழ்வில் தவறவிட முடியுமா?

1867ல் ஜெர்மன் பதிப்பு வெளிவந்தாலும் அதன் ஆங்கிலப் பதிப்பு வருவதற்கு 1886ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கு நடுவில் 1883ம் ஆண்டு மார்க்ஸ் மறைந்தார். ஆங்கிலப் பதிப்புக்கு முன் இரண்டு ஜெர்மன் (1973, 1883) பதிப்புகளும் ஒரு பிரஞ்சுப் பதிப்பும் (1875), ஒரு ரஷ்யப் பதிப்பும் (1872) வெளிவந்து விட்டது. தமிழ்ப் பதிப்பு (1998) வருவதற்கு 130 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆங்கில வழி மொழியாக்கத்திற்கான ஏங்கெல்ஸின் முன்னுரையுடன் துவங்குகிறது மூலதன நூல் தொகுதி 1. ஆங்கிலப் பதிப்பிற்கான மொழி பெயர்ப்புப் பணியைச் செய்தவர் மார்க்சின் நண்பர் சாமுவேல் மூர். இவருக்கு உதவியவர் மார்க்சின் புதல்வி அவெலிங். ஆங்கில பதிப்பை கொணருவதற்கு முழுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் ஏங்கெல்ஸ். ஆங்கிலப் பதிப்பிற்கான முன்னுரையில் ஏங்கெல்ஸ் கூறுகிறார்.

தாஸ் கேப்பிட்டல கண்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விவிலியம் என்று போற்றப்படுகிறது. இந்த நூல் கண்டுள்ள முடிவுகள் ஜெர்மனியிலும் ஸ்விட்சர்லாந்திலும் மட்டுமின்றி பிரான்சிலும் ஹாலந்திலும் பெல்ஜியத்திலும் அமெரிக்காவிலும் ஏன், இத்தாலியிலும் ஸ்பெயினிலும் கூட நாளும் பரவி மேலும் மேலும் மாபெரும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அடிப்டைக் கோட்பாடுகளாகிக் கொண்டிருக்கின்றன என்பதையும், எங்கு பார்த்தாலும் தொழிலாளி வர்க்கம் தனது நிலைமையினுடையவும். அபிலாஷைகளுடையவும் மிகப் பொருத்தமான தெரிவிப்பை இந்த முடிவுகளில் மேலும் மேலும் அடையாளங் கண்டு கொள்கிறது என்பதையும் அந்த இயக்கத்துடன் பரிச்சயமுள்ள எவரும் மறுக்கமாட்டார். இங்கிலாந்திலும், தொழிலாளி வர்க்கத்தின் அணிகளில் பரவுவதை விட குறைவின்றி “பண்பாடுள்ள“ மாந்தர்தம் அணிகளிலும் பரவிவரும் சோஷலிச இயக்கத்தின் மீது இந்தத் தருணத்திலும் கூட மார்க்சின் த்த்துவங்கள் சக்தி வாய்ந்த தாக்கம் உண்டாக்குகின்றன

(பக்கம் 22)

ஏங்கல்ஸ் கூறிய “பண்பாடுள்ள“ மாந்தர் என்பவர்கள் என்னைப் போன்று பெருமையாக “ஸ்டாஃப்“ என்று கூறிக் கொள்ளும் கூலி அடிமைகளைத்தான் என்று நினைக்கிறேன்.

Related Posts