அரசியல்

சட்ட மன்ற தேர்தல்களில் கிரிமினல்கள்

Crime_P_icon
தற்போது (2013) ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், டெல்லி, ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுக் கொண்டுள்ள, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , குறித்த விபரங்கள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது .

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 733 வேட்பாளர்களில் 111 வேட்பாளர்கள் , கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது . இந்த 111 வேட்பாளர்களில் 62 வேட்பாளர்கள், கொலை, பாலியல் பலாத்காரம், கட த்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த 199 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்களும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 199 வேட்பாளர்களில் 31 வேட்பாளர்களும், பி.எஸ்.பி கட்சியை சேர்ந்த 190 வேட்பாளர்களில் 26 வேட்பாளர்களும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

ராஜஸ்தானில் போட்டியிடும் 733 வேட்பாளர்களில் 346 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வேந்திர சிங் 118.96 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆவார் . பிஜேபியைச் சேர்ந்த பிரேம் சிங் 87.70 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆவார். மூன்றாவது இடத்தையும் காங்கிரஸ் கட்சியே பிடித்துள்ளது. இக்கட்சியை சேர்ந்த அஞ்சன உதயலால் சொத்து மதிப்பு 65.55 கோடியாகும். இவர்கள் மூவருக்கும் கோடிக் கணக்கான ரூபாய் செலுத்தவேண்டிய பொறுப்பும் உள்ளது .

மத்திய பிரதேஷில் காங்கிரஸ், பிஜே பி, பி.எஸ்.பி ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த 686 வேட்பாளர்களில் 683 வேட்பாளர்கள் குறித்து பரிசீளிக்கப்பட்டது . இதில் 206 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன . 120 வேட்பாளர்கள் மீது கொலை., கொலை செய்ய முயற்சி , கடத்தல், உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் , காங்கிரஸ் – 15, பிஜேபி- 37, பி.எஸ்.பி – 33 ஆவர்.

டெல்லி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும், 796 வேட்பாளர்களில் 129 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் . 93 வேட்பாளர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்கள் . 68 பி ஜே பி வேட்பாளர்களில் 31 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன . காங்கிரசின் 70 வேட்பாளர்களில் 15 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. பி எஸ் பி கட்சியின் 68 வேட்பாளர்களில் 31 வேட்பாளர்களும், புதிதாக முளைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் 70 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்களும் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் ஆவர். சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் 64 வேட்பாளர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

டெல்லி தேர்தலில், சிரோன்மணி அகாலிதள் கட்சியை சேர்ந்த மஞ்சிந்தர் சிங் ரஜெளரி கார்டன் தொகுதில் போட்டியிடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு 235.51 கோடியாகும். இரண்டாவது இடம் காங்கிரஸ் கட்சிக்கு இதன் மோடி நகர் வேட்பாளரான சுஷில் குப்தா 14.44 கோடிக்கு சொந்தக்காரர் ஆவார். இதே கட்சியை சேர்ந்த டெல்லி கான்ட் தொகுதி வேட்பாளரான அசோக் குமார் ஜெயின் 143.69 கோடிக்கு சொந்தகாரர். பி.ஜே.பி கட்சியை சேர்ந்த சத் பிரகாஷ் ரான பிஜிவசன் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 2008 தேர்தலில் சொத்து மதிப்பு 6.38 கோடியாகும். தற்போது மதிப்பு 111.89 கோடியாகும் . அதே போல் காங்கிரஸ் கட்சியின் பாதர்பூர் வேட்பாளர் ராம் சிங் நேதாஜி யின் சொத்து மதிப்பு 2008 ல் 8.44 கோடி தற்போது 58.71 கோடியாகும்.

ஹிமாச்சல் பிரதேஷ் மாநில தேர்தலில் போட்டியிடும் 445 வேட்பாளர்களில் 69 வேட்ப்ளர்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 வேட்பாளர்களும், பி ஜே பி கட்சியை சேர்ந்த 7 வேட்பாளர்களும் பி எஸ் பி கட்சியை சேர்ந்த 8 வேட்பாளர்களும் மற்ற கட்சியை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

Related Posts