இலக்கியம்

எதற்காக சிறுவர் நூல்கள் வாங்க வேண்டும்???

“ஒரு பெரிய காடு இருந்திச்சாம். அதுல சிங்கம், புலி, கரடி, ஓநாய், நரி, முயல், யானை அப்படின்னு நிறைய மிருகங்கள் இருந்திச்சாம்….”

என்று நாம் கதை சொல்லத் துவங்கும்போதே, அதனை குழந்தைகள் கற்பனை செய்யத் துவங்கிவிடுவார்கள்.
அதனால், கதைகளின் வழியாக அவர்களின் கற்பனைத்திறனையும் அறிவையும் ஒருசேர வளர்க்கமுடியும். அவர்கள் சிறந்த மனிதர்களாக வளர்வதற்கும் கதைகள் நிச்சயம் உதவியாக இருக்கும்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில், குழந்தைகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கென்றே ஒரு சிறு தொகையையாவது ஒதுக்கிவிடுங்கள்..

யாருக்காக/எதற்காக சிறுவர் நூல்கள் வாங்க வேண்டும்??

  1. உங்களுடைய குழந்தைகளுக்கு வாங்கலாம்.
  2. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு தெரிந்தவர்கள் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, பரிசாக ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.
  3. குழந்தைகள் இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும்போது, சாக்லேட்-பிஸ்கெட் வாங்கிச் செல்வதற்கு பதிலாக, ஒரு புத்தகத்தை கொடுக்கலாம்.
  4. எந்தக் குழந்தையானாலும், நீங்கள் நட்பாக வேண்டுமா? ஒரு கதை சொல்லிப்பாருங்கள். உடனே உங்களோடு விளையாடத் தொடங்கிவிடுவார்கள். அதற்காக சில புத்தகங்கள் வாங்குங்கள்.

ஆக, குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எல்லோரும் வாங்குவதற்கு நிச்சயமாக ஒரு காரணமாவது இருக்கும்….
சில பரிந்துரைகள் இங்கே…

ChildrensBooks

Related Posts