பிற

சென்னை மாநகரத்திற்கு வயது 375

சென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

இன்றைய சென்னை மாநகரம், 1639ஆம் ஆண்டில் மதராசா பட்டிணமாக இருந்தபோது, இந்தியாவில் தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும்

6176878997_757bb43118_o

 முயற்சியில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்கள், தாங்கள் நிலையாக காலூன்ற இந்த மதராசா பட்டிணம் என்ற கடலோர கிராமத்தை வாங்கினார்கள்.
இதற்கான பத்திரம் 1639ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியிட்டு எழுதப்பட்டிருந்தாலும், அப்போது வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகி பிரான்சிஸ் டே இந்தியா வந்து சேராததால் அந்த விற்பனை பத்திரம் ஒரு மாத காலத்திற்குப் பிறகே கையெழுத்திடப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரான்சிஸ் டே இந்தியா வந்தபிறகு மதராசா பட்டிணத்திற்குச் சொந்தக்காரர்களான நாயக்கர் ஆட்சியாளர்களின் சந்திரகிரி கோட்டையில் ப‌த்‌திர‌ம் கையெழுத்தானது. எனவே இந்த நாளே சென்னை நகரம் உருவான நாளாகக் கருதப்படுகிறது.
சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாகக் கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
1639ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கிய அந்த இடத்தில்தான் இன்றுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. 1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.
1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரமானது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ஆம் ஆண்டு சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, சென்னை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகாவும், மாநிலத்தின் தலைநகரமாகவும் ஆகியது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடெல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் கட்டப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் (Indian Institute of Technology-இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி), அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் , இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி (National Institute of Fashion Technology-தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ (Asian College of Journalism-ஆசிய இதழியல் கல்லூரி), Madras School of Social Work (மெட்ராஸ் சமூகப்பணி கல்லூரி) போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று.
இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லெய்லாண்ட், ஹூண்டாய், போர்டு, மிட்சுபிஷி, டி.ஐ. சைக்கிள்ஸ், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் இந்திய ராணுவம் தொடர்பான பல நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான அர்ஜுன் இங்கு தயாரிக்கப்படுகிறது.
அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி, கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 80 வகையான மிருகங்கள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வட அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து உண்டு. இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்றாகும். தற்போது சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்திலான பன்னாட்டு முனையமாக மாற்றப்படுள்ளது.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது. வில்லிவாக்கம் அருகே மத்திய அரசுக்கு சொந்தமான இணைப்பு (ரயில்) பெட்டி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வர பயன்படுத்தப்படுகிறது.
8032557462_a973fb8955_c
சென்னை புறநகர் ரயில்வே மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் ஆகியவையாகும். இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிய மெட்ரோ ரயில் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, விஜயவாடா ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையமாகும்.
இப்படி படிப்படியாக 4 நூற்றாண்டு காலமாக வளர்ந்து பெருகி இன்று மெகா மாநகரமாக திகழ்ந்துவரும் சென்னை, ஒரு வரலாற்று நகரமாகவும், முன்னேறிய முதல் நிலை நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இப்படி பல வளர்ச்சியை சென்னை நகரம் பெற்றிருந்தாலும் இன்றுவரை தீராத பிரச்சினையாக உள்ளவை:
1. மாசு மிகுந்த குடிநீர் மற்றும் குடிநீர் பற்றாக்குறை, குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலை.
2. 28 சதம் மக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள்.
3. மாசு மிகுந்த சுற்றுப்புறச் சூழல்
4. போக்குவரத்து நெரிசல்.
5. மாசு மிகுந்த சாலைகள்.
6. அன்றாடம் சாலை விபத்துகள் – உயிர் பலி.
7. முறையாக மழை நீர் வெளியேற வழியில்லாதது.
8. மக்கள் தொகைக்கேற்ப போதுமான அரசின் மருத்துவ வசதி இல்லாதது.
9. முறையாக சாலைகள் பராமரிக்கப்படாதது.
10. மக்கள் தொகைக்கேற்ப சாலைகளை விரிவுபடுத்தாதது.
சென்னை வாசிகளுக்கு நல் வாழ்க்கையை ஏற்படுத்துவதே, இந்தப் பழம்பெரும் நகரத்தின் 375 ஆண்டுக் கொண்டாட்டமாக அமையும். இல்லாவிட்டால், அது குறைகளைக் கொண்டாடுவதாக முடிந்திடும்.

Related Posts