போர்டோரிகோ – அமெரிக்க காலனியின் நூற்றாண்டுகால வரலாறு – முற்றும்

உலக குடிமக்களாகிய நம் அனைவரின் கோரிக்கைகளான இவற்றை நிறைவேற்றிவிட்டு, அதன் பின்னர் மற்ற நாடுகளின் ஜனநாயகம் குறித்தும் மனிதநேயம் குறித்தும் வாய் திறக்கட்டும் அமெரிக்கா.

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)

தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ) தொடரின் இரண்டாவது  பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ) அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்: பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், போர்டோரிகோவிற்கும் ஒரு வழியினைக் கண்டறிந்தார். போர்டோரிகோவில் துவங்கி இருந்த விடுதலைப் போராட்ட […]

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ)

அமெரிக்க அரசு போர்டோரிகோவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. அமெரிக்க வால்ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள் போர்டோரிகோவின் பொருளாதாரத்தைக் கைப்பற்றின. அமெரிக்கத் தொண்டுநிறுவனங்களும் மிசினரிகளும் போர்டோரிகோவின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஊடுருவி அழித்தன.

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ)

“போர்டோரிகோவின் வரலாற்றிலேயே மிகக்கொடுமையான வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நிலவும் காலம் இப்போதுதான் ” என அமெரிக்க அதிபரின் உள்துறை செயலரான ஹரோல்ட் கூட ஒப்புக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 3

தொடரின் முதல் இரண்டு பகுதிகள் – முதல் பகுதி , இரண்டாம் பகுதி புதிய அதிபர்… புதிய கொள்கைகள்… இப்படியாக, ஆட்சியாளர்களையும் அரசையும் கலைப்பதும் மாற்றுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தாலும், ஹோண்டுரசை வெறும் வாழைப்பழ விலை நிலமாக மட்டுமே வைத்திருந்தன வாழைப்பழ நிறுவனங்களும், அவர்களுக்கு உதவி புரிந்த அமெரிக்க அரசும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோண்டுரசை மாறிமாறி ஆண்டுவருவது “ஹோண்டுரஸ் தேசியக்கட்சி” மற்றும் “ஹோண்டுராஸ் லிபரல் கட்சி” ஆகிய இரண்டே இரண்டு தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான்.அவர்களுக்குள் கொள்கைகளில் […]

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 2

வாழைப்பழ போர்கள்: 1911 இல் ஹோண்டுரசில் 15000 ஏக்கர் நிலத்தினை வாங்கியது சியாமல் நிறுவனம். இருப்பினும், ஹோண்டுரஸில் அப்போது ஆட்சியிலிருந்த ஹோண்டுரஸ் அதிபர் மிகுவேல் அரசோ, யுனைடட் ஃப்ரூட் நிறுவனத்திற்கே ஆதரவாக இருந்தது. இதனை மாற்றி ஹோண்டுரசின் அப்போதைய அரசைக் கவிழ்க்க, ஹோண்டுரசின் முன்னாள் அதிபர் மேனுவேல் பொனிலாவுடனும், இராணுவ ஜெனரலுடனும் கைகோர்த்தார் சியாமல் ஃப்ரூட் நிறுவனத்தின் நிறுவனர் சாம். ஹோண்டுரசில் எந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்தாலும், அது அமெரிக்க கப்பற்படையின் அனுமதியோடும் உதவியோடுமே நடக்கும். இம்முறையும் அவ்வாறே […]

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்)-1

உலகின் கொலைகார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிற நாடு, வடஅமெரிக்காவிற்கு கீழே மத்திய அமெரிக்காவிலிருக்கும் ஹோண்டுரஸ் என்கிற நாடுதான். ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு, 91 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். உலகின் வேறெந்த நாடுகளை விடவும், இவ்விகிதம் மிக அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொலைகார நாடு குறித்து நமக்கு ஏன் எந்த ஊடகங்களும் செய்தி சொல்லவில்லை? மனிதவுரிமை குறித்து பேசித்தள்ளும் மேற்குலக நாடுகள் எவையும் ஹோண்டுரஸ் போன்ற நாடுகளின் நிலை பற்றி கவலைப்படாமலும், நம்மையும் கவலை […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 4)

துணையதிபர் வாலேசின் சீன சுற்றுப் பயணம்: அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுக்கவிருக்கிற ஜனநாயகக் கட்சியின் மாநாடும் நெருங்கியது. ஆனால் ரூசுவெல்டின் நிலையென்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. வாலேசை சீனாவிற்கு அனுப்பி போர்ச்சூழல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கச் சொன்னார் ரூசுவெல்ட். சீனாவில் சன்யாட் சென்னிற்கு பிறகு கட்சியில் குழப்பம் விளைவித்து, தலைமைப் பதவியினை எடுத்துக்கொண்டு, சீனாவை ஆட்சி செய்வதாக அறிவித்துக் கொண்ட சியாங்குடன் 20 ஆண்டுகளாக நட்பில் இருந்தது அமெரிக்கா. சியாங்கின் அமெரிக்க வாழ் […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 3)

அமெரிக்காவிலும் ஸ்டாலின் புகழ்: சோவியத்தின் ஸ்டாலின்க்ராடில் ஜெர்மனியை சரணடைய வைத்த பின்பு, ஸ்டாலினிற்கு உலக அளவில் ஆதரவு பெருகியது. அஃது அமெரிக்காவிலும் எதிரொலித்தது. சோவியத்தைத் தொழில் மயமாக்கியதிலும், புதுமையான யுத்திகளால் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்கியத்திலும் ஸ்டாலினின் பங்கைப் பாராட்டியெழுதின அமெரிக்கப் பத்திரிகைகள்.

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)

1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள். ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டு, கிழக்கே சோவியத் தொடங்கி இந்திய எல்லை வரை உலகின் பாதியை ஜெர்மனியாகவோ ஜெர்மனியின் காலனியாகவோ மாற்ற நினைத்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, ரைன்லாந்து, மேற்கு போலந்து மற்றும் சோவியத்தின் ஸ்டாலின்கிராடு போன்ற பகுதிகளை ஜெர்மனியின் பூர்வீகப் பகுதிகள் என்று உரிமை கோரியது ஜெர்மனி. […]