இணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி?

நாம் ஒரு கட்டுரை அல்லது ஒரு தளத்தின் பக்கத்தின் லிங்க் (link) ஐ காப்பி செய்து சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஒரு சிக்கலை அனைவரும் எதிர் கொண்டிருப்போம். அது யுஆர்எல் (URL) என்கோடிங் (Encoding) பிரச்சனைதான். கணினியின் கீ போர்டில் தமிழில் தட்டச்சு செய்யும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாகக் கணினி எடுத்துக் கொள்ளும். தமிழில் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் ஆங்கிலமாக இல்லாத காரணத்தினால், தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில மொழி எழுத்துக்களாக மாற்றப்படுகின்றன. […]

மாற்றுவில் எழுத..

WordPress என்பது உலகெங்கும் பல மில்லியன் கணக்கான மக்களால் அழகு ததும்பும் வகையிலும், பார்த்தவுடனே ஈர்க்கத்தக்கதாக வலைத்தளங்களையும் (Websites), வலைப் பூக்களையும் (Blogs) உருவாக்க உதவும் கட்டற்ற மென்பொருள் அமைப்பாகும்.

தையல் இயந்திரம்!

தையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார். படம் தையல் இயந்திரத்தில் நூல் கோத்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் இயங்கு படம். மஞ்சள் நிற நூல் மேற்புறத் தையல், பச்சைநிற நூல் கீழ்ப்புறத் தையல். இவை இரண்டும் முடிச்சு முடிச்சாக இணைந்து பிணைப்பு ஏற்படுகின்றது. […]

எரியும் சமையல் எரிவாயு பிரச்சனை – தேவையான அணுகுமுறை (3)

புதிய தேடல் மற்றும் உரிமக் கொள்கை ஜனநாயகம் என்பதற்கு ‘’மக்களின், மக்களால், மக்களுக்காக’’ (of  the People, by the People, for the people) என்ற ஒரு விளக்கமிருக்கிறது. இதே போன்ற விளக்கத்தை NELP-க்கு கொடுக்கச் சொன்னால் அது “ரிலயன்ஸின், ரிலயன்ஸால், ரிலயன்ஸுக்காக“ என்பதைத் தவிற வேறெதுவாகவும் இருக்க முடியாது. இக்கொள்கை செயல்படுத்தத் துவங்கி ரிலயன்ஸ் ஊழல் நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியால் வெளிக் கொணரப்பட்டு அது நீர்த்துப் போய்விட்டது. ரிலயன்ஸ் நிறுவனம் இந்திய மக்களின் […]

இந்துவின் பேப்பர் க்வ்லிங் கலை!

பேப்பர் க்வில்லிங் என்ற கலை வடிவம் மறுமலர்ச்சிக் காலத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உலகுக்கு அளித்த கொடை என்று கருதப்படுகிறது. எகிப்து தேசத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் இணையதளத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. ஐரோப்பா முழுக்கப் பரவிய இந்தக் கலை, இன்று நம் நாட்டிலும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. டிசம்பர் 24 அன்று மதுரையில் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் மாநாடு முடிந்து வீடு திரும்பிய எனக்குப் பிறந்த நாள் பரிசாக எனது அன்பு மகள் இந்து வழங்கிய […]

பெடோரா-Fedora : கட்டற்ற 10-வது ஆண்டில்!

கணினிப் பயன்பாட்டில் ஏகபோகத்தை (monopoly) சமூகப் பங்களிப்பால் உடைத்து அதைவிட மேலான மாற்று ஒன்றை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது பெடோரா (Fedora). பெடோரா (Fedora) ஒரு GNU லினக்ஸ் (GNU/Linux)  வழங்கல்களாகும். இது ரெட் ஹாட்டினால் (Red Hat) ஆதரவளிக்கப்பட்டு சமூகப் பங்களிப்பினால் (Community Development) மேம்படுத்தப்பட்டதாகும். 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட பெடோரா நேற்று தனது 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. தனது 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை Fedora 20 (Heisenbug) என்ற  […]

வளர்ச்சி , மேம்பாடு , விடுதலை – 1

வளர்ச்சி என்பது என்ன? மேம்பாடு என்பது என்ன? என்பது சமீப காலங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஒரு புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா போன்ற தாராளவாதம் பேசுவோர் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அதிகரிப்புதான் வளர்ச்சி என்கின்றனர். மற்றவை எல்லாம் அதன் விளைவுகளாக பொருளாதாரத்தின் உள்ளார்ந்த விதிகளின்படி தானாகவே நடந்துவிடும் என்கின்றனர். மறுபுறத்தில் மீண்டும் சிறு அளவிலான விவசாயம், வேட்டை, காய் கனிகளை சேகரித்து உண்டு வாழும் ‘இயற்கையை ஒட்டிய’ வாழ்க்கை என்பதைத் தவிர […]

எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 …

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத பதிவுகள் கூட பலரால் எழுதி வெளி வருவதைக் காண முடிகிறது. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும் படியாக இருக்கிறதென்றால், […]

சூரிய ஆற்றலே ஒரே தீர்வா? …

கூடங்குளமும் ஃபுக்குஷிமாவும் சூரிய மின்னுற்பத்தி குறித்த கவனத்தைக் குவித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் வழக்கம்போல மேலெழுந்தவாரியான புகழ் பாடலாகவும் அணு ஆற்றலை தவிர்க்க வியலாது எனும் கருத்தை மறுப்பதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. உண்மையில் சூரிய மின்னுற்பத்தி என்பது அணு மின்னுற்பத்திக்கோ அல்லது படிம எரிபொருள்கள் கொண்டு நடக்கும் அனல் மின்னுற்பத்திக்கோ மாற்றா என்பது சற்று ஊன்றி கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும். சூரிய ஆற்றல் குறித்த சில விவரங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படவில்லை. அதற்கு சில காரணங்கள் […]