‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் – இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.

பெடோரா-Fedora : கட்டற்ற 10-வது ஆண்டில்!

கணினிப் பயன்பாட்டில் ஏகபோகத்தை (monopoly) சமூகப் பங்களிப்பால் உடைத்து அதைவிட மேலான மாற்று ஒன்றை உருவாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது பெடோரா (Fedora). பெடோரா (Fedora) ஒரு GNU லினக்ஸ் (GNU/Linux)  வழங்கல்களாகும். இது ரெட் ஹாட்டினால் (Red Hat) ஆதரவளிக்கப்பட்டு சமூகப் பங்களிப்பினால் (Community Development) மேம்படுத்தப்பட்டதாகும். 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட பெடோரா நேற்று தனது 10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. தனது 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை Fedora 20 (Heisenbug) என்ற  […]

find கட்டளை

கட்டற்ற மென்பொருளின் ஆரம்ப நிலை கற்றலுக்கான ஒரு‍ சிறிய முயற்சி. இது‍ ஆமாச்சு என்பவரால் கணியம் இணைய இதழில் வெளியான கட்டுரை.. GNU find ஒரு திறம் வாய்ந்த கட்டளை வரி பயனமைப்பு (Command Line Utility) ஆகும். இது கோப்புகளையும், அடவைகளையும் (Files and Folders) படிநிலை மரவமைப்பாக (Hierarchical Tree Structure) தேட பயன்படுகிறது. KDE மற்றும் GNOME-களில் உள்ள வரைகலை தேடல்களுக்கு இதுவே பின்னிலை (Back End) ஆகும். எனினும் find தொடக்கத்தில் பயன்படுத்த […]

கட்டற்ற மென்பொருள் – அறிமுகம்

கடந்த மூன்று தசாப்தங்களில் கணினித்துறை பிரமாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த கணினி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உலகையே உளவு பார்த்த கதையை நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் நாம் அதிலுள்ள ஏகபோகம், ஏகபோகத்திற்கு எதிராக-மாற்றாக உள்ள சில கணினி தொழிநுட்பங்கள் மற்றும் தத்துவங்கள் பற்றி  தெரிந்து கொள்வோம்.

கூட்டுழைப்பில் குனு 30 : தமிழ் விக்கிபீடியா 10

கூட்டுழைப்பில் குனு‍ 30 ஆண்டுகள்: 1983 ஆம் ஆண்டு‍ ரிச்சர்டு‍ ஸ்டால்மனால் ஆரம்பிக்கப்பட்ட ஜிஎன்யு/குனு‍ திட்டம் இன்று‍ முப்பதாவது ஆண்டை  கடந்துள்ளது. “I consider that the golden rule requires that if I like a program I must share it with other people who like it” என்ற வாசகத்தோடு‍ ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்று‍ சுமார் 300க்கும் மேற்பட்ட லினக்ஸ் டிஸ்ட்ரோக்களை (Linux Distro: Customized Linux Operating […]

தமிழில் ’மொசில்லா உலாவி’, கூட்டு உழைப்பின் மகத்துவம் …

மொசில்லா உலாவி தமிழில் தன்மொழியாக்கம் செய்யப்பட்டு‍ சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் நோக்கங்கள், பயன்பாடுகள் மற்று‍ம் அதை செயல் வடிவில் கொணர்ந்த நடைமுறைகள் பற்றி தெரிந்து‍ கொள்வது‍ அவசியம். உலாவி என்பது ஒரு கணினி மென்பொருள். இது‍ நாம் அனைவரும் அறிந்ததே. இன்று‍ ஏகபோகம், உற்பத்தியின் மூலம் கிடைக்கும் அதீத லபாம், உற்பத்தியின் சந்தை இவைகளைக் கணக்கில் கொண்டு‍ தான் இன்றைய உலக சந்தை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சொத்து‍ அது‍ அறிவுசார் சொத்தாக இருந்தாலும் சரி வேறெதுவாக […]

எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008 …

சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத பதிவுகள் கூட பலரால் எழுதி வெளி வருவதைக் காண முடிகிறது. நமக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று ரசிக்கும் படியாக இருக்கிறதென்றால், […]