பஞ்ச கவ்ய மருந்துகள், அறிவியல் அவமானம் …

மோடி அரசு ஒரு பக்கம் மக்களை பணமதிப்பை குறைத்து வாட்டி வதைக்கின்றது. மறு பக்கம் சத்தமில்லாமல் பல்வேறு சித்து வேலைகளை ,இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு பதவியில் இருக்கும் காலத்தை முழுமையாக பயன் படுத்துகிறது . விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை முடக்குவது, அதன் பெருமைகளை சிறுமைப்படுத்துவது, அதை வேத காலத்தோடு ஒப்பிடுவது, புராணங்களிலேயே இது போன்றவை சொல்லப்பட்டுள்ளது என பொய் பிரச்சாரம் செய்வது என மோடி முதல் காவிக்கூட்டத்தின் அனைவரும் பேசி வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளிலேயே […]

தடுப்பூசி வதந்திகளும் தவிர்க்கப்பட வேண்டிய அரசியலும் . . . . . . . !

பொன்னுக்கு வீங்கி (MUMPS), தட்டம்மை (MEASLES), ரூபெல்லா ஆகிய மூன்றும் வைரஸ் கிருமிகளால் சிறு குழந்தைகளை பாதிக்கும் நோய்களாகும். குறிப்பாக ரூபெல்லா கருவிலேயே பாதிக்கும் நோயாகும்.   பொதுவாக இந்த நோய்கள் பாதித்தால் அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் அதற்குண்டான எதிர்ப்பு சக்தி நோயாளிகளிடமிருந்து ஏற்படும். ஆனால் எதிர்ப்பு சக்தியே (IMMUNITY) இல்லாத நோயாளிகளுக்கு அந்த நோயால் அதிகம் பாதிப்பு ஏற்படும். பொன்னுக்கு வீங்கி நோயால் நமது கன்னத்தில் இருபக்கமும் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். நரம்புகள் பாதிக்கப்படும். […]

கேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . !

ஒரு வாரத்திற்கு முன்பாக உலக கபாடி இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி  இந்தியா உலக சாம்பியன் ஆனது. ஆனால் அதே நாளில் இன்னொரு பதவியேற்பும் நடந்தது ….பதவியேற்புக்கும், கோப்பையை வென்றதற்கும் சம்பந்தம் இல்லை..ஆனால் ஒன்று நாட்டிற்கு தலைநிமிர்வு..மற்றொன்று தலைகுனிவு..நாட்டுக்கு மட்டுமல்ல.. உலகுக்கே..ஏன்? உலக அளவில் மருத்துவர்களுக்கான அமைப்பு உலக மருத்துவ கழகம். இதில் உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான மருத்துவர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். 112 நாடுகளை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள், இதில் அங்கம்.. இந்த உயரிய அமைப்பின் தலைவராக […]

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.

இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டன….அதையொட்டி மருத்துவர்களும் மருந்துகளை அரசு மருத்துவமனை அல்லாத […]

தன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)

இந்த மாதத்துக்கான புள்ளி இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்திற்கு சக்தியூட்டக்கூடிய இந்தப் புள்ளியின் அமை விடத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்தப்புள்ளி சுண்டுவிரல் நகத்தை ஒட்டி நகத்தின் கீழ்ப்பகுதி விளிம்பில் மோதிர விரல் பக்கமாக அமைந்துள்ளது (படத்தில் காட்டியபடி). இந்தப் புள்ளியை ஆள்காட்டி விரலால் கையை எடுக்காமல் மூன்று நிமிடங்கள் மிதமாக அழுத்திக்கொள்ள வேண்டும். இடது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை வலது ஆள்காட்டி விரலாலும், வலது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை இடது ஆள் காட்டி விரலாலும் தொடுசிகிச்சை […]

நெஞ்சைக் கரைக்கும் ஆற்றல் எபோலா ஆபத்து…?

வறட்சி நிவாரணம் வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கேட்கிறார்கள். அந்த செலவைத் தவிர்க்க, அம்மா ஆட்சியில் வறட்சி எப்படி இருக்கும் என்று கேட்டுவிட்டால் அம்மாவைக் குளிர்வித்தது மாதிரியும் ஆயிற்று, செலவி லிருந்து தப்பித்தது மாதிரியும் ஆயிற்று என்று அவர்கள் போடும் கணக்குதான் இப்படிப் பேச வைக்கிறது.

விபத்துகளில்தான் எத்தனை வகை?

மேடையில் விளக்குகளுக்காக இணைக்கப்பட்டிருந்த ஒயரில் இருந்து ரகுகுமார் பிடித்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மயங்கிக் கிடந்த ரகுகுமாரை டாக்டர் பரி சோதித்தபோது, அவர் உயிரிழந் திருப்பது தெரியவந்தது. பெரிய பாளையத்தம்மன் கோயில் நிர் வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆபத்திலிருக்கும் ஆன்டிமைக்ரோபியல்ஸ் !

(படத்தில்: பரவலாகக் காணப்படும் Staphylococcus Aureus பாக்டீரியா) இடம்: மருந்துக்கடை “அஞ்சு நாளுக்கு எல்லாம் மாத்திரை வேணாங்க. ஒரு மூணு நாளைக்கு குடுங்க போதும்.” இடம்: வீடு “அதான் ரெண்டு நாள்-லயே சளி, காய்ச்சல் சரியாப் போச்சு இல்ல. அப்புறம் ஏன் வீணா மருந்த ஒடம்புல சேக்கணும். நிப்பாட்டிடு போதும்.” நமக்கு நன்கு பரிச்சயமான சூழல்கள் மேற்சொன்னவை. நாமே பலமுறை இது போல செய்திருப்போம். ஆனால் இது போல செய்கைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன தெரியுமா? […]

ஏன் யோகாசனம் செய்ய வேண்டும்?

சித்தர்கள் நோய்கள் வராமலும் வந்த நோய்களை குணப்படுத்திக் கொள்ளவும் எளிய வழிமுறைகளை உருவாக்கி கொடுத்துள்ளார்கள். இந்த யோகாசன பயிற்சிகளை தினசாரி வாழ்வில் செய்து வந்தால் நாம் நோய்களில் இருந்து விடுபட முடியும். யோகத்தின் பலன்கள்:- யோகாசனம், உடல் உறுப்புகளை நன்றாக இயங்கவைக்கிறது. சுரப்பிகளின் இயக்கத்தை சீரமைக்கிறது. இதயத்தையும், இரத்த ஊட்ட நாளங்களையும் ஊக்குவிக்கிறது, இதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் காப்பாற்றி அவைகளை நிவர்த்தி செய்கிறது. சோம்பலினை முற்றிலும் போக்கி புத்துணர்ச்சியளிக்கிறது. உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. […]

மதத்தால் மரித்த மருத்துவச்சி

அறுவை சிகிச்சை மட்டும் இல்லை என்றால் இன்று நம்முடைய பிரியத்திற்குரிய பலர் நம்மோடு இருந்திருக்க மாட்டார்கள். இறப்பைத் தள்ளிப்போட மட்டுமல்ல சிசேரியன் மூலம் பிறப்பை தீர்மானிக்கும் சக்தியும் அறுவை சிகிச்சைக்கு உண்டு. அறுவை சிகிச்சை என்பது ஒரு தனி வைத்திய முறை. அதை எந்த வைத்தியமுறையுடனும் இணைத்து சிகிச்சையளிக்க முடியும். நமது நாட்டில் கூட சுஷ்ருதா என்கிற மருத்துவர், ஆயுர்வேதத்தோடு இணைத்து மூளை அறுவை சிகிச்சை  செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.