மா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்

மாதவையா கிருஷ்ணன் என்ற மா.கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியரான அ.மாதவையாவின் எட்டாவது பிள்ளையாக திருநெல்வேலியில் ஜூன் 30 ஆம் நாள் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையுடன்  நெருக்கமாக இருந்தால் என்னவோ ஊர்சுற்றும் மனப்பான்மையும் இலக்கிய ஆர்வமும் சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. ஏட்டுக்கல்வியில் பெரிதும் நாட்டமில்லாத அவருக்கு தன்னுடைய மயிலாப்பூர் வீட்டைச் சுற்றியிருந்த புதர்காடுகளில் இருந்த வெளிமான், ஓநாய் மற்றும் பறவைகள் மீதே அதிக ஆர்வமிருந்தது. பள்ளி மாணவனாக இருந்தபோதே ஒரு கீரிப்பிள்ளையை செல்லப்பிராணியாக வளர்க்க ஆரம்பித்துவிட்டார். சென்னை […]

பழனியும் பறவைகளும்..

பழனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கொங்கூர் குளத்திற்கு குளிர் காலங்களில் ஏராளமான பறவைகள் வருவது பற்றி அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக கொங்கூர் சென்றேன். பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தாசநாயக்கன்பட்டி என்ற ஊரில் இருந்து 3 கி.மீ மேற்கு நோக்கி சென்றால் கொங்கூர் குளத்தை அடையலாம். குளத்தை நெருங்குவதற்கு முன்பே சாலையின் குறுக்கே கௌதாரிகள் (Grey Francolin) கடந்து சென்றன. பறந்து விரிந்திருந்த குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. பவளக்கால் உள்ளான்களை முதல் முறையாக பார்த்தேன். அவை குளத்தின் கரையில் நீர் குறைவான இடங்களில் நின்று கொண்டிருந்தன.