விடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…

இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நேப்பாளத்தில் எதுதான் நல்ல கட்சி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரலாற்றுப்பூர்வமான உண்மைகளோடு நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியதால் […]

மோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”

கடந்த மார்ச் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 13ஆவது உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டு ஐரோப்பிய தலைவர்களுடன் பல தீர்மானங்களில் கையெழுத்திட்டார். அதில் 17ஆவது தீர்மானத்தில், நேப்பாளம் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. “நேப்பாளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் விடுபட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கவேண்டிய தேவை இருப்பதை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நேப்பாள மக்களையும் இத்தீர்மானம் […]