21 ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று உள்ளதா ?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 170 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரிஸ் கம்யூன் உருவாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் அவல நிலைமையில் இருந்து முதன் முதலில் மனிதனுக்கு விடுதலை தந்த 20 ஆம் நூற்றாண்டு கண்ட மாபெரும் விஞ்ஞான நிகழ்வுகளுள் ஒன்றான ரஷ்ய புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. இதன் தாக்கத்தில் பின்னர் உண்டான சீன, வியட்னாம், கியூப புரட்சி ஆகியன முடிந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. யாவற்றிற்கும் மேலாக […]

சாகுற நாள் தெரிஞ்சா … வாழும் நாள் என்னவாகும்!? (டிசிஎஸ் வேலை நீக்கமும், தொழிலாளர் நிலையும்)

“வெல்டிங்கோ பிட்டரோ படிச்சா, அம்பத்தூர் எஸ்டேட்ல உடனே வேலையாம். தெரியுமா?” “இப்பல்லாம் பாலிடெக்னிக் இல்லாட்டி வேலை கிடைக்காதுப்பா” “பி.காம் மட்டும் பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்ட, அப்பறம் உன் லெவலே வேற” “டைப் ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட் முடிச்சிட்டியா? வெவரம் தெரியாத பயலா இருக்கியே” கம்ப்யூட்டர் கோர்ஸ் படிப்பா.. அதுபடிச்சா வேலை கிடைக்குமாமே” “இப்பல்லாம் ஜாவாவுக்கு தான் மவுசு.” “இஞ்சினியரிங் படிக்கணும். அதுவும் கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுக்கணும். தெரியுதா? விட்றாத..” “இஞ்சினியரிங்க்ல கம்ப்யூட்டர் கோர்ஸ் வேண்டாம். எலெக்ட்ரானிக்ஸ் எடு. ஏன்னா, அப்பதான் […]

நான் தான் ஜனநாயகம் பேசுகிறேன்….

என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கொண்டாடுவதன் மூலம் உங்களுக்காக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே இந்தியாவில்தான் நான் மிகச் சிறந்தவளாக இருக்கிறேன் என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் 55 கோடி பேர் என்னை மகிமைப்படுத்துவதற்காக இம்முறைதான் உங்கள் பங்களிப்பைச் செலுத்தினீர்கள் என்று பத்திரிகைகள் எல்லாம் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கின்றன.

‘ஐடி’ புரொபெசனல் எனும் நவீன அடிமைகள்! (மேதின சிறப்பு பதிவு)

ஒரு பக்கம் ஐடி தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தகைய நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதுடன், வெளியிலிருந்து விமர்சிப்போரும் அவர்களோடு கைகோர்க்க வேண்டும். உழைப்பாளர் தினத்தில் – இந்தியாவையும், இந்திய மக்களையும் நேசிப்பவர்கள் முன்னிருக்கும் முக்கியக் கடமையும் அதுவாகும்.

மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல்

இந்த திறந்த மடலை வாசித்து ஆதரவு தெரிவிக்க விரும்புபவர்கள், பின்னூட்டத்தில் தங்கள் விபரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். இந்திய பிரஸ் கவுன்சில் என்னும் அமைப்பு 1978 பிரஸ் கவுன்சில் சட்டம் “ஊடக சுதந்திரத்தை காப்பாற்றும் பொருட்டும், ஊடகங்களில் தரத்தை உயர்த்துவதற்காகவும் பிரஸ் கவுன்சில் உருவாக்கப்பட்டது.” என்று அறிவிக்கின்றது தொழிலாளர்கள் பேரணி குறித்த செய்தியை ஊடகங்கள் புறக்கணித்தது தொடர்பாக மார்க்கண்டேய கட்ஜூவுக்கு திறந்த மடல் 13.12.13 ம் தேதியிட்ட தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூ […]

இரணியனின் இறுதி நாட்கள்!

பிதா சுதன் தன் பரிசுத்த ஆவியின் பேராலே எங்களின் பாவங்களை எல்லாம் மன்னித்தெம்மை ரட்சித்து அருள்வீராக – என  ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் கிருத்துவத்திடம் மண்டியிட்டு கிடந்த அந்நாட்களில் இருளில் இருந்து புறப்பட்ட செங்கதிராய் 1818 மே 05 அன்று பேராசான் மார்க்ஸ் பிறந்தார். அதுவரை இது தான் நம் கெதியென தம்மை சுரண்டி கொழிக்கும் முதலாளித்துவத்திடம் வேறுவழியின்றி சமரசம் செய்து கொண்ட ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தை தலைநிமிர செய்து, இதற்கு முன்பான அனைத்தையும் புரட்டிபோட்டு, தலைகீழாகக்  கிடந்த மனித […]

படிக்கக் கூடாத கடிதம்-2!

முதல் பகுதி இங்கே பிரீதம்! இப்போது ஒரு வேளை உனக்கு தெரிந்திருக்கக் கூடும். சிறுநீர் கழிக்கவும், மலம் கழிக்கவும் கூட நிர்வாகம் அனுமதித்த எண்ணிக்கைக்கு மேல் கழிப்பறைக்கு செல்ல முடியாது. எத்தனை முறை என்பது மட்டுமில்லை, எவ்வளவு நேரம் என்பது கூட வரையறுக்கப்பட்டிருக்கிறது. சாப்பாட்டுக் கூட மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டிக்கிறது. சாப்பாட்டு நேரம் ஆனவுடன் தட்டுக்களை ஏந்திக் கொண்டு நீண்ட வரிசையில் நாங்கள் நின்றிருக்கிறோம். சில நேரங்களில் சாப்பாட்டை வாங்குவதற்கு கூட 15 நிமிடம் ஆகியிருக்கும். […]

சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-2

இதன் முதல் பகுதி – சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1 நாட்டின் ஒரே தொழிற்சங்கமாக இருப்பதால் சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியத்தை தீர்மானிப்பதில் இவர்களுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது. சிங்கப்பூர் தொழிலாளர்களின் உண்மை ஊதியமானது மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளை விட குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒரு அமைப்பின் புள்ளிவிபரத்தை மட்டும் வைத்து முடிவெடுக்காமல் மேலும் சில அமைப்புகளின் புள்ளிவிபரங்களைப் பார்த்தால்தான் ஒரளவுக்கு இந்த விஷயம் பிடிபடும். இந்த விஷயத்தில் எனக்கு கிடைத்த சில […]