மத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா. போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. […]

மத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)

ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் […]

கிரேக்க நெருக்கடி: விடிவு சாத்தியமா? – 1 – பீட்டர் மார்டின்ஸ்

ஐரோப்பிய அதிகாரமையத்திடமிருந்து கிரேக்கத்தை பணியவைக்கிற ஆணை வெளிவந்து சில வாரங்கள் கடந்துவிட்டன. கிரேக்கத்தின் நிலையினை ஆய்வு செய்துபார்க்கவேண்டியது அவசியம்

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 4

கிரேக்கத்தின் “முறையற்ற/நியாயமற்ற கடன்”: கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வந்தவை தானா? மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா? அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா? அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார்? என்று கடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்க மறுத்திருக்கிறார்கள். தற்போது புதிதாக பதவியேற்றிருக்கிற கிரேக்க அரசுதான், இதில் புதிய முயற்சிகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் […]

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 3

ஈக்வடார் நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கான வரியையும், பரம்பரை பரம்பரையாக ஒரு சிலரிடமே குவிந்திருக்கும் சொத்துக்களுக்கான வரியையும் உயர்த்துவதுதான் அச்சட்டத்தின் நோக்கம். இவ்வரியினால் ஈக்வடாரின் பணக்கார 2% மக்கள்தான் அதிக வரிசெலுத்த நேரிடும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை.<

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 2

அர்ஜெண்டைனா அரசு முதலாளிகளால் கைவிடப்பட்டு பூட்டுபோடப்பட்ட தொழிற்சாலைகளை, தொழிலாளர்களே ஆக்கிரமித்து நடத்தத் துவங்கினர். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாக முடிவெடுத்தனர். எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும், விருப்பப்பட்டால் தொழிலாளர்களே ஏற்று நடத்தலாம் என்று அர்ஜெண்டினா அரசு சட்டமே இயற்றியது.

கிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 1

1821இல் கிரேக்கம் விடுதலை பெற்றதிலிருந்தே கடன் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1980 களில் கடன் அளவு மிகப்பெரிய அளவிற்கு உயரத்துவங்கியது. கடந்த 30-40 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் பின்பற்றிய தவறான வரிக்கொள்கையும் அதற்கு முக்கிய காரணம்.