மத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)

மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மன்னரான மொசாபர் அல்தின் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடைய ஆய்வுப்பணிகளைத் துவங்கினார். எண்ணைவளம் கிடைத்தால், அதில்கிடைக்கும் இலாபத்தில் 16%த்தை பெர்சியாவின் மன்னருக்கு அளித்துவிடவேண்டும் என்று 60 […]

மத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)

இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் மக்களேகூட 50-60 ஆண்டுகளுக்குமுன்னர் பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்துதான் அப்படியான பெயரை வைத்தன. பிரிட்டனிலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் சீனா இருந்தமையால் அது […]

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 2

[அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் துணையோடு, ஏமனில் சவுதி அரேபியா நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஏமனில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஏவுகணைகளை சவுதி அரேபியா வீசியதில், 120க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்… இந்நிலையில் ஏமனின் வரலாற்றை அறிந்துகொள்வது அவசியம்.]   முதல் பகுதி: ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1   தெற்கும்-வடக்கும் இணைக்கப்பட்ட ஏமன்:   அரபுலகத்தில் மிகவும் முற்போக்கான நாடாகத் திகழ்ந்தது […]

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன். இன்று ஏமனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் நடத்திக்கொண்டிருக்கும் திணிக்கப்பட்ட போரின் காரணமாக, இரண்டு கோடி மக்களுக்கும் மேலாக குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். […]