மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -15

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப்  பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது. 2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்த சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சத ஒதுக்கீட்டிற்கு மேலாக இது அளிக்கப்படுகிறது. 3. முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், […]

உலகமெங்கும் பரவிக்கிடக்கிற இஸ்லாமோஃபோபியா எனும் வெறுப்பரசியல் . . . . . . . . !

“இப்படித்தானடா எங்களுக்கும் இருக்கும்…” என்று ஒரு கமென்ட்.. படிக்கும்போது நியாயமான கமென்ட் போலத்தான் தெரியும். நியூஸிலாந்து துப்பாக்கிச்சூடு வீடியோவில் யாரோ ஒருவர் போட்டிருந்தது. இதுபோல நிறைய பேர் சொன்னார்கள். `அவனுகளுக்கு வேணும்ங்க. சாகட்டும்ங்க’ என்றெல்லாம் நேர்பேச்சில் சொன்னவர்கள் அத்தனை சாதுக்கள். துப்பாக்கியை கண்ணாலும் கண்டிரதாவர்கள். இருந்தும் எங்கிருந்தோ ஒரு வன்மம். ஒரு வெறுப்பு. அந்த `எங்கிருந்தோ’ என்பது எங்கிருந்து வந்தது? துப்பாக்கிச்சூட்டில் செத்துப்போனவர்கள் எல்லோருமே கொடூரமானவர்கள் அல்ல. நம்மைப்போல நேற்று வரை சின்ன சின்ன வாழ்க்கை சவால்களோடு […]

சர்வதேச மகளிர் தினம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு . . . . . . . . . . . . . . !

பெண் விடுதலையும் சமூக விடுதலையின் ஓர் அங்கம் தான். அதனால் சர்வதேச மகளிர் தினமும், சோஷலிச தொழிலாளர் இயக்கமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. மேதினம் மாதிரி, அதுவும் அமெரிக்காவில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின் விளைவாக உருவானது. தொழிற்சாலைகளில் பரிதாபகரமான சூழலுக்குள் வேலை செய்த பெண்களின் குருதியாலும், வியர்வையாலும் உருவானது. 1910 ம் ஆண்டு, டென்மார்க், கோபென்ஹெகன் நகரில் இரண்டாவது சோஷலிசப் பெண்களின் மகாநாடு நடந்தது. பதினேழு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் காலகட்டம் முதலாம் […]

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகள் . . . . . . . . . .!

தேசம் என்கிற போலியான எல்லைக்கோடுகளை உருவாக்கி, அதற்கு உள்ளே வாழும் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், வெறுமனே எல்லைக்கோடுகளைப் பாதுகாப்பதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமே தேசபக்தி என்று நம்பவைத்தது ஏமாற்றுவேலையன்றி வேறில்லை. உலகம் உருவான காலத்திலே தேசம் என்கிற கருத்தியலே இருக்கவில்லை. தேசம் என்கிற வரையறையும் அதன் எல்லைக் கோடுகளும் ஒட்டுமொத்த கருத்தியலும் மிகச்சமீபத்தில் 200-300 ஆண்டுகளாகத்தான் உருவாகியிருக்கின்றன. அதற்கு முன்னர் நாடு என்றால் மன்னர் குடும்பத்தின் அதிகாரம் என்பதாக மட்டும்தானே இருந்தது. குடியுரிமை என்கிற ஒன்றே […]

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதென்ன ஊதிய நிறுத்தம்?

வேலை நிறுத்தம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊதிய நிறுத்தம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வார்த்தையை வைத்தே அது என்னவாக இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள். ஆம், தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் முதலாளி ஸ்ட்ரைக் செய்வது தான் ஊதிய நிறுத்தம். அந்த முதலாளி ஒரு அரசாங்கமாக இருந்து, அந்த தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஐயயோ, அப்படியொரு கொடூர அரசும் நாடும் இருக்க முடியுமா என்றா கேட்கிறீர்கள். ஆம் இருக்கிறது. இது ஏதோ கடந்தகால வரலாறும் அல்ல, […]

அலி வஸீர் – போராட்டமும், தியாகமும்…….!

சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹிரிக்-இ-இன்சாஃப் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் தினத்தன்றே வெடிகுண்டுத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் நடக்குமளவிற்கு தீவிரவாதம் பரவிக்கிடக்கும் பாகிஸ்தானில், இந்தமுறையும் நிலப்பிரபுக்கள், ஊழல்வாத முதலாளிகள், ராணுவ மற்றும் நீதித்துறை கைக்கூலிகள்தான் நிரம்பியிருக்கிறார்கள் என்கிறது களநிலவரம். இருப்பினும், பஸ்துன் தஹாஃபஷ் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடதுசாரி பிரதிநிகள் நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களிடையே […]

யார் இந்த கார்ல் மார்க்ஸ்?

Marx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட மறுபதிப்புகளை கண்டுள்ளது. இன்று பல தமிழர்கள், பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகள் கூட, மார்க்சையும், மார்க்சியத்தையும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். கல்வி நிலையங்கள், ஒன்றில் மார்க்ஸ் பற்றி எதுவும் கற்பிப்பதில்லை அல்லது தவறாக சொல்லிக் கொடுக்கின்றன. இன்று தவறான வழியில் வழி நடத்தப் படும் இளைய தலைமுறையினருக்கு, Marx for Beginners நூல் […]

விடியலை நோக்கிய பயணத்தில் நேப்பாளம்…

இந்தியாவின் அண்டை நாடான நேப்பாளத்தில் தற்போது தேர்தல் நடந்து, அதில் கம்யூனிஸ்டுகள் பெருவாரியான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சியமைக்கும் நிலையை எட்டியிருக்கின்றனர். இதற்கு முன்னரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரதமரும் அதிபரும் இருந்தார்கள் தானே! அப்போதைய நிலையை விடவும் இப்போது என்ன பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிட்டது? அதிலும் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கும் நேப்பாளத்தில் எதுதான் நல்ல கட்சி? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளை வரலாற்றுப்பூர்வமான உண்மைகளோடு நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியதால் […]

எவன்டா இலுமினாட்டி . . . . . . . ?

“உன் பிரச்சனைகளுக்கு நீயோ, இந்த அரசோ, சமூகமோ, உற்பத்திமுறையோ காரணமில்ல. எங்கயோ இருக்கிற கிரகங்களும் நட்சத்திரங்களும் தான் காரணம்” என்று சொல்லி எதற்கும் போராடவிடாமல் காலங்காலமாக ஜோசியக்காரர்கள் நம்மைத் தடுத்தார்களல்லவா… அதேபோன்று, “இன்றைய பிரச்சனைகள் அனைத்துக்கும் எங்கயோ இருக்கிற 13 பேர்தான் காரணம். நீயும் நானும் எதையும் மாற்றிவிட முடியாது. போய் பொழப்பப்பாரு” என்று சொல்பவர்கள்தான் இலுமினாட்டி குறித்து பேசுபவர்கள். அவர்கள் சொல்லும் அந்த 13 பேர்தான் இலுமினாட்டிகளாம். இயற்கையை விளங்கிக்கொள்ளாத காலகட்டத்தில் மழை, வெயில், சூரியன், […]

இலுமினாட்டி என்ற கதையாடல் . . . . . . . . !

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள் அல்லது மதவாதிகள் ஆவர். அப்பாவி மக்களும் ஏமாற்றப் படுகின்றனர். அது ஒன்றும் தற்செயல் அல்ல. 18-ம் நூற்றாண்டில் இருந்து தொடரும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. 20-ம் நூற்றாண்டில் நாஸிகளால் நிறுவனமயப் படுத்தப் பட்டது. முதலாளித்துவ நெருக்கடியால் பாதிக்கப் பட்ட மக்களை சிந்திக்க விடாமல், பழமைவாதக் கருத்துக்களை திணிப்பதற்கு வசதியாக […]