பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு . . . . . . ஆண் குழந்தைகளுக்கு சமத்துவம் சொல்லி வளர்ப்போம் . . . . . . . . . . . !

தென்னை மரங்கள் சூழ்ந்து, பச்சைப் பசேலென அழகு கொஞ்சும் பொள்ளாச்சி என்பது இன்று அச்சமூட்டும் பொல்லாச்சியாக நம் மனதில் அழுத்தமாக அமரும் நிலை உருவாகியுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை மற்றும் அது பற்றிய வீடியோ பகிர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ணிக்கை கிட்டத்தட்ட 200 க்கு மேல் உள்ளதாக செய்திகள் வருகின்றன . முறையாக விசாரணை நடந்தால் தான் சரியான எண்ணிக்கையே தெரிய வரும் . முகநூல் தொடர்பை பயன்படுத்தி நட்பாகி அதன் உள்பெட்டி தகவல் பரிமாற்றம் மூலம் […]

முகிலன் யார் . . . . . . . . . . ?

முகிலன் யார்? என்கிற கேள்வி தமிழ்நாட்டின் கோவையில் வசிக்கும் ஒருவரால் என்னிடம் கேட்கப்பட்டது. காரணம் யார் அல்லது எது? தொலைக்காட்சி மீடியாவா? மீடியாக்களின் புறக்கணிப்பா? அரசியல் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வமின்மையா? பெரும்பான்மை மக்கள் வெறும் வாட்ஸ்அப் பார்வேர்டுகளில் மூழ்கிக் கிடப்பதா? சமூக அக்கறையின்மையா? அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்போக்கின் விளைவா? எல்லாமும்தான். போகட்டும். இனியாவது தெரியட்டும் முகிலன் யார் என்பதை உலகம் அறியட்டும். முகிலன் ஈரோடு பக்கம் சென்னிமலையைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். செங்குந்தர் மேநிலைப் […]

தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக? -பேரா.தொ.ப.

இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் “தேசியத் திருவிழா” போலக் காட்டப்படுகிறது. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத் தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி […]

“என் பெயர் சா.ராஜலட்சுமி”

சேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி. தாளவாய்ப்பட்டியில் இருந்து […]

நக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…

“முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவரும், ஆயுதம் தாங்கிய போலீஸாரின் பாதுகாப்பில் வலம்வரும் கவர்னரும் செய்யும் பணியை சாமான்யர் ஒருவரால் தடுத்துவிட முடியுமா?

”ஒருத்தரும் வரேல” -போர்க்களத்தில் நம் கைவாள் . . . . . . . . . . . . !

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி பல தடைகளையும் மிரட்டல்களையும் காவல்துறை அடக்குமுறைகளையும் வழக்குகளையும் மீறி வெளியிட்டிருக்கும் படம் ”ஒருத்தரும் வரேல”. ஆவணப்படத்தைத் தன் போராட்ட ஆயுதமாக வெளிப்படையாக அறிவித்துச் செயல்படும் இடதுசாரியான தோழர் திவ்யபாரதியின் இப்படம் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க்கதையை ஆவணப்படுத்தாமல் அக்கண்ணீருக்குக்காரணமான குற்றவாளிகளை அடையாளப்படுத்தத் துணிச்சலுடன் முயற்சித்திருக்கிறார். சென்ற ஆண்டு நவம்பர் 30 ஆம்தேதி வீசிய புயல் குறித்து மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை செய்யாதது முதல் குற்றம்.மீனவ மக்கள் கடலில் தத்தளித்த படியும் […]

அடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . !

சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா !. ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது. சோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச் சாலை என  மக்கள் மீது ஏவப்படும் அநீதிக்கு எதிரான அரசியல் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]

சமூகநீதி காத்த கலைஞர் . . . . . . . . . !

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. கருணாநிதி காலமானார். கருணாநிதியின் மறைவு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் மறைவாக மட்டுமே சுருக்கி விடமுடியாதது. அந்த பெயர் தனக்குள் அரைநூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் வீதிகளில் 14 வயதில் சமூக நீதிக்காக ஒலிக்கத் தொடங்கிய கருணாநிதியின் குரல், அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்து ஒலித்தது. கருணாநிதியின் மீது ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை சுமந்து கொண்டிருந்தவர்களை கூட, கலங்கி நிற்கச் செய்துள்ளது அவரோடு நீங்கள் எத்தனை […]

சாதி உணவான சத்துணவு . . . . . . . . !

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள். எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு […]

பேரிடரும் இனி ஆளும் வர்க்கத்தின் அடியாள்தான் . . . . . . . . !

“பெருங்கடல் வேட்டத்து“ – ஒக்கி புயலின் கோரப்பிடியில் சிக்கி அரசின் பாராமுகத்தால் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் துயரங்களை பேசும் ஆவணப்படம். பேரழிப்பை சந்தித்த சமூகத்தின் உள்ளிருந்து கேட்கும் குரல் மட்டுமல்ல, அச்சமூகத்தை சார்ந்தவரின் பதிவு  என்பதும் இந்த படைப்பிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை தருகிறது. மீனவ சமூகத்தின் கடல் குறித்த மரபு அறிவையும், கடல் தொழில் மீதான அவர்களின் உரிமையையும், அரசின் மீதான  கோபத்தையும்  வெளிப்படுத்தும் பாங்கில் அதனை உணரலாம். மீனவ மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து […]