Home Archive by category அரசியல் (Page 2)

அரசியல்

அரசியல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் சில கேள்விகள்?

மத்திய மோடி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த உடனே முதன்முதலில் தனது இந்துத்துவா கொள்கைகளை கல்வி நிலையங்களில் புகுத்த தொடங்கிவிட்டது. குறிப்பாக மோடி அரசின் இந்த இரண்டாவது ஆட்சி முறையில் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சை நாடு முழுவதும் Continue Reading
அரசியல்

மனிதநேயத்தின் உச்சம் : நூற்றாண்டு கண்ட கம்யூனிசம்

இந்தியா விடுதலை பெற்று, மாநிலங்களின் ஒன்றியமாக குடியரசு உருவாகி எழுபதாண்டுகள் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் நாடு பல துறைகளில் முன்னேறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவை அனைத்தும் பொய்யாய் பழங்கதையாய் போகும் விதத்தில் மத்திய பிஜேபி அரசு நாட்டை பின்னோக்கி இழுத்துக் கொண்டுள்ளது . நாட்டின் விடுதலைப் போரில் பங்கெடுத்து சிறைக் கொடுமைகளை அனுபவித்த அடக்குமுறைகளை சந்தித்த Continue Reading
அரசியல்

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்…….!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத Continue Reading
அரசியல்

தமிழகத்திற்கான மாற்று தேடல் .. ஓர் பார்வை………!

சமூகநீதி, மதஒற்றுமை, தொழில் அமைதி ஆகியவைகளை தனது அடையாளங்களாகக் கொண்ட தமிழகம் ஒப்பீட்டளவில் ஒரு முன்னேறிய மாநிலம் !மதசார்பற்ற நாட்டின் முகம் எதிர் திசையில் மாற்ற திட்டம் தீட்டி செயல்படும் மோடிக்கு சவால் விட்டு வென்றது தமிழகம் ! ஆனால் இன்று அதே மோடியின் காலடியில் மாநில அரசு உள்ளதைக் காணும் போது இதன் அடையாளம் அப்படியே தொடர விடுவர் என உறுதி சொல்ல இயலுமா? 1992ல் ‘இஸ்லாமிய Continue Reading
அரசியல்

NEP 2020 – நம் குழந்தைகளை சமூகப் பாதுகாப்பற்ற வாழ்நிலைக்கு தள்ளப்போகிறதா?

சென்ற ஆண்டு (2019) புதிய கல்விக் கொள்கையின் வரைவை மத்திய அரசு வெளியிட்ட போது எழுந்த விவாதங்கள் பலவற்றில், இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசிவரும் பலரும் குறிப்பிட்டுப் பேசும் விஷயம் skilled labourers எனப்படும் திறன் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாடும், தேவையும் பற்றி தான் . மரவேலை செய்பவர்கள் தொடங்கி, எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், நெசவாளர்கள் என பல துறைகளிலும் இந்த Continue Reading
அரசியல்

சகமனுசிகளின் சமத்துவத் தேடல்கள்…… !

பாகுபாடுகள் மலிந்த இந்திய சமூகத்தில் சமத்துவத்தின் சிறிய கூறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. பெண்களுக்கும் குடும்ப சொத்தில் பங்குள்ளது என்பதை அத்தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மணமான பெண்களும் பிறப்பால் குடும்ப உறுப்பினர்களே என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழக மக்கள் இதை வரவேற்று 1989ம் ஆண்டே இச்சட்டம் இங்கு நிறைவேறியது என்பதை நினைவு கூர்ந்து பதிந்தனர். அதேசமயம் Continue Reading
அரசியல்

சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்?

டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்-5 நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சர்வப்பள்ளி கிராமத்தில் 1888ல் பிறந்து சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக உயர்ந்து பிறகு ஜனாதிபதியானவர். அதோடு 1948ல் இந்தியாவின் பல்கலைக்கழக கல்விக்காக Continue Reading
அரசியல்

சமஸ்கிருதம் தொன்மையான மொழிதான், ஆனால், அனைவரும் ஏன் கற்கவேண்டும்?

இந்திய அரசியமைப்புச் சட்டத்தின்  எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள  முக்கியமான நவீன மொழியான சமஸ்கிருதமானது, லத்தீன், கிரேக்க மொழிகளைக் காட்டிலும் செறிவுமிக்கதாகும். கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக்கலை, உலோகம், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பல துறைகளிலும் ஆழ்ந்த அறிவைக் கொண்டதாகும்.  (சமஸ்கிருத அறிவுமுறை  என்று Continue Reading
அரசியல்

அவதாரபுருஷர்கள் நம்மிடமிருந்துதான் உருவாகுகிறார்கள்……………

அமெரிக்கா 1945 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அன்று ஹிரோஷிமா மீதும் பின்னர் 9ஆம் தேதியன்று நாகசாகிமீது அணுகுண்டு போடுவது என்னும் அமெரிக்க எடுத்த முடிவு பற்றி சோவியத் யூனியனுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை; இது ஸ்டாலினுக்கு உள்ளூர வருத்தத்தையே அளித்தது. மேலே எழுதிய பத்திதான் “சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் மார்ஷல் ஜோசப் ஸ்டாலின்” என்ற புத்தகத்தை Continue Reading
அரசியல்

அந்த ராட்சசக் காளானின் வேர் எங்கே?

‘ஆயிரம் சூரியன்கள் ஒரு சேர உதித்தனவோ?’ – ராபர்ட் ஓப்பன்ஹீமர் (அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி, ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சைப்பற்றி அதிர்ச்சியடைந்து கூறியது) “ராட்சத தீப்பந்து ஒன்று – ஒரு மைல் விட்டம் இருக்கும் – கிளம்பி மேலே மேலே சென்றது. தனது நிறத்தை மாற்றிக்கொண்டே சென்றது.  ஆழ் ஊதாவில் இருந்து ஆரஞ்சுக்கு. இன்னும் விரிந்து…விரிந்து…உயரே உயரே…பல நூறு கோடி வருடங்கள் Continue Reading