மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 20

நல்லவேளை எல்லோரும் பயந்ததுபோல ஒரு இந்திய – பாக் போர் உருவாகவில்லை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு போர் உருவாகலாம் என மூன்ற மாதங்கள் முன்புஅமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது போல் ஆகாமல் 40 இந்திய வீரர்களைப் பலி கொன்அ  புல்வாமா பயங்கரவாதத் தாக்குலை ஒட்டிப் போர் ஏதும் நல்லவேளையாக நடந்து விடவில்லை.  இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற மெல்லிய நம்பிக்கை பலருக்கும் இருந்ததற்குக்  காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 19

“உலகமயத்தை (Globalization) காப்பாற்றியே தீர்வோம்” – மோடி ஆவேசம் உலகமயச் செயற்பாடுகளை ஆதரிப்பவர்கள் மத்தியில் Protectionism என்பது மிகவும் அசிங்கமான  ஒரு கெட்டவார்த்தை. “பாதுகாப்பு வாதம்” அல்லது “பாதுகாப்பு நிலைபாடு” எனப் பொருள்படும் இந்தச் சொல் குறிப்பது வேறொன்றுமில்லை. தன் நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படும் என்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் நுழையாமல் தன் நாட்டுக் கதவுகளை மூடிப் பாதுகாப்பு அளிப்பதுதான் protectionism. திறந்த சந்தை என்பதன் ஊடாக வெளிநாட்டுப் பெரு நிறுவனங்கள் இங்கே நுழையும்போது உள்நாட்டுப் பாரம்பரியத் தொழில்கள் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -18

மல்லையா வச்ச வெடி- வாராக் கடன்களால் சிதைக்கப்பட்ட பொருளாதாரம் : ஒரு சூப்பர் க்ரைம் ஸ்டோரி. யாராவது சினிமா தயாரிக்கலாம்! மிகப் பெரிய அளவில் வாராக் கடன்கள் முதலியவற்றால் இந்தியப் பொருளாதாரம் சீரழியக் காரணமாக இருந்தது. மோடியின் ஆட்சி. 9,000 கோடி ரூபாய் கடனுக்கு நாமம் போட்டுத் தப்பித்துச் சென்ற விஜய் மல்லையா 2010ல் பா.ஜ.க ஆதரவுடன் கர்நாடகத்திலிருந்து மாநிலங்களுக்கு அவைக்குத் தேர்வு செய்யப்பட்ட MP என்பதை மனதில் கொண்டு இதை வாசியுங்கள். மார்ச் 03, 2016 […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 17

5,8 வகுப்புகளில் அரசுத் தேர்வு : அடித்தளச் சமூகக் குழந்தைகளை ஓரங்கட்டும் சதி – காங்கிரஸ் ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் (2009) கல்வியாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஓரம்சம் (பிரிவு 16) இனி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகள் மற்றும் ‘பாஸ்’, ‘ஃபெயில்’ முறை இருக்காது என்பதுதான். இதன்படி எட்டாம் வகுப்புவரை, அதாவது 14 வயதுவரை, ஒரு மாணவரை தேர்வில் தோற்றார் எனச் சொல்லி அதே வகுப்பில் உட்கார வைக்கக் கூடாது. பா.ஜ.க அரசு ஆட்சியில் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 16

13 புள்ளி ரோஸ்டர் முறை என்பதன் மூலம் மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் கவிழ்க்க முயலும் மோடி அரசு  எல்லா மட்டங்களிலும் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் சின் கொள்கை இந்தக் கருத்தை இப்போது அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்ளிப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டார்கள் எனச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். சென்ற பிஹார் மாநிலத் தேர்தலின் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசியதை அனைவரும் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? -15

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப்  பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது. 2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்த சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சத ஒதுக்கீட்டிற்கு மேலாக இது அளிக்கப்படுகிறது. 3. முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 14

“FRDI மசோதா : நாடு மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை நோக்கித் தள்ளப்படுகிறது” – பேரா. பிரபாத் பட்நாயக் நம்பிக்கைகளை நாசமாக்குகிறது பா.ஜ.க அரசு..இனி நோட்டுகளாக மட்டுமல்ல, வைப்புகளாகச் சேமித்தாலும் ஆபத்துதான்.. இனி தங்கம் அல்லது நிலத்தில் பணத்தை முடக்குவது என்பதுதான் சேமிப்பிற்கு ஒரே தீர்வா? இனி இரும்புப் பெட்டி அல்லது சுருக்குப் பைதான் ஒரே வழியா? FRDI மசோதா என்பது இந்தியப் பொருளாதாரம் தொடர்பான இன்னொரு நிறுவனத்தின் மீது மறுபடி சரி செய்ய இயலாத இன்னொரு […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 13

கருத்து மாறுபடும் அறிவுஜீவிகளைக் கொடும் சட்டங்களின் கீழ் கைது செய்வதைக் கண்டித்த  அறிஞர்களும் நீதி அரசரும் புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படைகளுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று  தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 12

பொருளாதாரத் துறையில்  மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை. பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும்  இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார். தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? 11

நீதிபதி லோயாவின் கதை முடிக்கப்பட்ட கதை முதலில் முன்கதைச் சுருக்கம்: ஷொராபுதீன் ஷேக், அவரது உதவியாளர் துள்சிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்டரில் கொல்லப்படுகின்றனர். (2005 நவம்பர் 25). ஷொராபுதீனின் மனைவி கவ்சர் பீவியின் உடல் பின்னர் கண்டெடுக்கப் படுகிறது. ஷொராபுதீன் கொல்லப்பட்ட நான்கைந்து நாட்களுக்குப் பின் அவர் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார் எனப் பின்னர் செய்திகள் வருகின்றன. இது போலி என்கவுன்டர் எனப் பின்னர் அறியவந்தபோது அதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா எனக் குற்றச்சாட்டு எழுகிறது. அது […]