ஒரு கத சொல்லட்டுமா சார்…

வேதா: சார் ஒரு கத சொல்லட்டுமா விக்ரம் சார்? விக்ரம்: என்னடா பெரிய கதை… அரசியல் ஒரு சாக்கட… அதனால மூக்கை பொத்திக்கிட்டு போகனும். அதான? வேதா: அதில்ல விக்ரம் சார்… கதையக் கேளு சார்…. ———————————– ஒரு நாட்டில் தங்களுடைய ராஜா அதிகமாக ஏமாற்றுவதை உணர்ந்த மக்கள், ஒன்றுசேர்ந்து அந்த ராஜாவை அடித்துவிரட்டினர். அந்த நாட்டுக்கு புது ராஜா வந்தார். அப்புதிய ராஜா, ஊரெங்கும் காய்களோ பழமோ தராத அழகான அலங்கார மரங்கள் நடும் திட்டத்தை […]

அதிகாலைப் பேரியக்கம் …

வட இந்தியாவை நோக்கி நெடுஞ்சாலைகளின் வழியாக ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன். செல்லும் வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்தது ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டின் கடைசி மாடி. அன்று அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து போனது. எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். தடுப்புச் சுவரில் சாய்ந்து நெடுநேரம் அப்படியே நின்றிருந்தேன். கண்முன்னே அந்தப் பெரு நகரம், புள்ளிபுள்ளியாக விளக்கொளியைச் சிதறடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு மசூதியிலிருந்து பாங்கு ஓதும் சத்தம் என் காதுகளை வந்தடைந்தது. காலைப் பனியின் […]

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது […]

ஸ்பைடர் பையன் – 1

                                                          இன்று காலையில் இருந்து தான்,அவனது மூக்கிலிருந்து,வலை வருவது நின்றிருந்தது.கடந்த இரவில் கட்டிலில் படுத்துக் கொண்டே,கைக்கெட்டாத தூரத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த மொபைலை எடுக்க கையை நீட்டினான்.சிலந்தி வலையானது அவன் கையிலும்,மூக்கிலும்(சளியைப் போல),கொஞ்சம் கண்ணிலிருந்தும் வந்தது.மொபைலும் கைக்கு வந்தது.தனக்குக் […]