எஞ்சிய சில நல்ல பக்கங்கள்

அம்மாவிற்கு வரவர ஞாபகமறதி அதிகமாகிவிட்டது. மூக்குக் கண்ணாடியை, சுலோக புத்தகத்தை, பீரோ சாவியை எங்கே வைத் தோம் என்பது மாதிரியான மறதி இல்லை. நிகழ்வுகள், மனிதர்கள் குறித்தான நினைவுகளின் மறதி. அம்மாவின் இயல்பே அதுதான் என்றால் நாங்கள் இத்தனை வேதனைப்பட மாட்டோம்.

வன்மத்தின் காட்டுப் பாய்ச்சல் …

ஒருநாள் இரவில், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பிரதான சாலையிலிருந்து வீடு திரும்பும் குறுக்குச் சாலையில் திரும்பும்போதுதான் அந்த ஞாபகம் வந்தது. வீட்டில் கோடை விடுமுறைக்காக அன்றுதான் ஊருக்குச் சென்றிருந்தார்கள். இரவு உணவை வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். மறந்துபோய் வீடு வரை வந்துவிட்டேன். அங்கிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி செல்ல மீண்டும் நான்கு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருந்ததால், அருகிலிருந்த வண்டிக்கடையில் பார்சல் வாங்கிச் செல்லலாமென முடிவு செய்தேன். நான் அந்த வண்டிக்கடைக்குச் சென்றபோது ஒரே ஒருவர் […]

பேரச்சத்தில் வாழும் பெண்களின் வலி …

பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. தினசரிகளில் பெண்கள் வேட்டையாடப்படும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன காலம் இது. காலமும் கைவிட்ட அபலைகளாய் […]

‘பூசனிக்காய்’ அம்பி – புதுமைப்பித்தன்

ம்பியின் தலை வழுக்கை. அதன் மேல்பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி.

சாலை எனும் கரிய நாக்கு …

உங்களது பைக்கில் சாவியை போடும் முன் ஸ்டேண்டை எடுக்க வேண்டும். இதை ஒரு பழக்கமாகக் கொள்வது நல்லது. ஹெல்மெட் தேவையில்லை. உங்களது அப்பா ஒரு விபத்தில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் வார் கழுத்தறுத்து தான் இறந்தார் என்பதை நினைவில் கொள்க.  மெல்ல ஏறி அமருங்கள் சைக்கிளைப் போல் தான் இதுவும் சைக்கிளைப் போல் மாங்கு மாங்கு என்று மிதிக்கத் தேவையில்லை அதனாலேயே இது பயில்வதற்கு கொஞ்சம் கடினமானது. உங்கள் கட்டுப்பாட்டிற்க்குள் எளிதில் வராதது. உங்கள் வலது கட்டை விரலுக்கு கீழே இருக்கும் […]

‘தலித் எழுத்தாளன்’ என்பதும் சாதிய மதிப்பீடுதான் ! – எழுத்தாளர் இமயம்

ஊடகங்கள்-தனிமனித-சமூக வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உங்களுடைய கதைகள் அதிகமாகப் பேசுகின்றன. ஏன்?

தன்மானத்தின் பலிகடா… (சிறுகதை)

செம்மேகங்கள் சூழ்ந்த மாலைப்பொழுதில், கோவை நகரின் பிரதானச் பூங்கா ஒன்றில், மனிதர்கள் யாரும் இல்லாது வனம் போன்று சூழ்ந்திருக்கும் புங்கை மரத்தின் நிழலில், தத்தம் முதுகுகளை இணைத்தவாறு எதிர் எதிரே அமர்ந்திருந்தது அந்த இளம் ஜோடி. கல்யானத்துக்குப் பின்னாடி நாம எங்கேயாதும் போயிடலாம். ஒரே ஒரு குழந்தை போதும், நமக்கினு சின்னதா ஒரு வீடு, நல்ல ஒரு ஜாப்ல ஜாயின் பண்ணிடு சீக்கிரம், அமைதியா, அன்பா நாம ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் சரியா, என்ன சொல்ற […]

மனிதம் மறுக்கும் மொழிகள் ! (சிறுகதை)

தார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது.  ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய வேண்டியிருக்கு’ என பத்மாவின் மனசு புலம்பியது. தோளில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.