Home Archive by category இலக்கியம்

இலக்கியம்

இலக்கியம்

டெங் ஷியோ பிங்.. தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்……….. தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி.

1949ல் வெற்றி வாகை சூடிய சீனப் புரட்சியில் தோழர் மாவோவுடன் பங்கேற்றவர். ஏற்ற இறக்கங்களுடன் கூடிய தனது வாழ்வில் எழுபது ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்து, பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சீன மக்கள் குடியரசின் முதல் தலைமுறை, முக்கியத் தலைவர். வயதின் காரணமாக பொறுப்பிலிருந்து Continue Reading
இலக்கியம்

இராம், ஜானு, மோடி மற்றும் 8 மணி …….

இக்கதையின் நாயகியை உங்களிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை. ‘அவள்’ பிறந்து சில நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. ‘அவளுக்கு’ இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. அதனால் இப்போதைக்கு அவளை ‘அவள்’ என்றே வைத்துக்கொள்வோம். ‘அவளுடைய’ அம்மாவின் வயிற்றில் இருந்தவரைக்கும் ‘அவளுக்கென்று’ எந்தப்பெயரும் இருக்கவில்லை. அப்போது ‘அவளுக்கு’ அது தேவைப்பட்டிருக்கவும் இல்லை. அம்மாவின் Continue Reading
இலக்கியம்

முடிவுக்குக் காத்திருக்கும் கதை..

விதையைத் துளைத்து வெளிவரும் துளிரைப் போல ஒரு கதையென்பது தன்னியல்பாக உதிக்க வேண்டும். கதையைச் சொல்வதற்கோ கேட்பதற்கோ பொருத்தமான சூழல் அமைய வேண்டும். சாவகாசமாய் மரநிழலில் அமர்ந்து கதை சொல்லக்கூடிய சூழலில் நான் இப்போது இல்லை. ஆனாலும் இந்தக் கதை அவசரமாகச் சொல்லப்பட வேண்டும். வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு கடிகாரத்தின் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டு Continue Reading
இலக்கியம்

தோழர் இ.எம்.எஸ் – யின் இந்திய போராட்ட வரலாறு

தமிழில்: கி இலக்குவன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: 500 பக்கம்: 944 1.அறிமுகம், 2.வரலாற்று பின்னணி, 3.ஆரம்பகால போராட்டங்களும் தோல்விகளும்,  4.முதலாளித்துவ தேசியத்தின் தோற்றம், 5.இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்ப ஆண்டுகள், 6. தலைவர் சகாப்தம், 7.போர் காலத்தில் தேசியஎழுச்சி, 8.காந்திய சகாப்தம் எழுச்சியும் பின்னடைவும், 9.இயக்கம் எங்கே செல்கிறது? 10.போட்டி மனப்பான்மைகளும் Continue Reading
இலக்கியம்

ஒரு பெயரற்றவனின் குறிப்பிலிருந்து……… 

அன்றைய நாளின் முதல் கதிரொளி அந்தப் பாலத்தின் மீது விழுந்தது. பாலமென்று சொல்வதால் அதை ஏதோ பெரிய மேம்பாலமென்று கருதி விடாதீர்கள். கீழே ஓடுகிற சிற்றோடையைக் கடக்க உதவும் சிறிய பாலம் அது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற அந்தப் பாலத்தை இரண்டாண்டுகளுக்கு முன்புதான் செப்பனிட்டிருந்தார்கள். கொஞ்சம் மராமத்துப் பணிகளைச்செய்து வண்ணமடிக்கப்பட்ட பின்பு அது புதுப்பாலம் Continue Reading
இலக்கியம்

தண்டனை

அன்று மாலை வீட்டுக்கு வந்த பூங்குன்றன்….கை கால் கழுவிக் கொண்டு வந்தவுடன் “அம்மா உங்க ரெண்டு பேர் கிட்டயும் நா கொஞ்சம் பேசணும்… எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று கேட்டவாறே ஹாலுக்கு வந்தான். கண்மணி கல்லூரி பேராசிரியை. அவரது கணவன் செல்வம் பள்ளி ஆசிரியர்.  மகன் பூங்குன்றன் ஐ பி எஸ் முடித்து  காவல் துறை அதிகாரியாக பணி புரிந்து வருகிறான். Continue Reading
இலக்கியம்

நிகழ்தகவு………..

ஒரு மின்னல் வெட்டுவதுபோல தோன்றி மறைந்தது. அந்த மரண வலிக்குப் பயந்தே முழுக்கண்ணைத் திறக்கும் முயற்சியைக் கை விட்டு விட்டேன். ஆனாலும் பார்க்க முடிகிறது. மங்கலாகவேனும் காட்சிப் படிமங்கள் தென்படுகின்றன. எந்த பாகமும் இயங்கவில்லை. பிணம் போலக் கிடக்கிறது உடல்.  உடலை அசைக்கச்சொல்லி மூளை இடுகிற கட்டளையை உடல் பாகங்கள் மறுக்கின்றனவா..?  அல்லது கட்டளையிடக்கூடிய திறனை மூளை இழந்து Continue Reading
இலக்கியம்

வாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..

முகநூலால் எனக்கு படிக்க நேரம் கிடைப்பதில்லை. முகநூல் எனது நேரத்தை கொல்கிறது என்றெல்லாம் எழுதப்படும் புலம்பல்களை பார்க்கமுடிகிறது. ஐந்தாண்டுகளாக நான் தொடர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் இது. எப்போதெல்லாம் புத்தகக்கண்காட்சி முடிகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற பதிவுகள் எழுதப்படும். சிலர் முகநூலை டீஆக்டிவேட் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அடுத்த இரண்டுவாரங்களில் அவர்களே மீண்டும் Continue Reading
இலக்கியம்

முதல் பெண்கள் – நிவேதிதா லூயிஸ்.

‘இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான Continue Reading
இலக்கியம்

கோயில்களைப் பாதுகாப்போம்…யாரிடமிருந்து..?

யார் கைகளில் இந்து ஆலயங்கள்..? என்ற தலைப்பை புத்தகத்தில் கவனிக்கும் போது  இரண்டு அர்த்தங்களை கொண்டதாக பார்க்கிறேன் “யார்” மற்றும் “இந்து” என்ற இரண்டு வார்த்தைகள் மட்டும் மஞ்சள் வண்ணத்தில் சற்று பெரியதாக அச்சடிக்கப்பட்டுள்ளது.. யார் கையில் இந்து ஆலயங்கள்  என்கிற கேள்விக்கும், யார் இந்து என்ற கேள்விக்கும் இப்புத்தகத்தில் பதில் உள்ளதால் அதன் Continue Reading