சுயநல கவிதை

– உலகம் உருளுதடா -மனிதன் உள்ளமும் உருளுதடா ! பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன் மனம் உருண்டோடுதடா ! மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால் சுயநலமா செயல்படுகிறானடா! கல்வியை இலாபமாக்கிறானடா – மனித அறிவின் வளர்ச்சியை பாழாக்குகின்றானடா ! மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா – சகமனிதன் உயிரரை காவுவாங்குகிறானடா! வளங்களை சூறையாடுகின்றனடா -அவன் பெரும் முதலாளியாக்குகின்றனடா! நாட்டை நிர்முலமாக்குகின்றனடா-அந்நிய முதலாளிகளின் கைகூலியாகி! வேடிக்கை பார்க்குதடா -சுயநலமாய் சகமத்தியத்தர கூட்டமடா ! தெருமுனையில் தீயடா -சகநடுத்தர வீட்டையும் எரிக்குமடா ! உணர்ந்துக்கொள்ள மறுக்குதடா […]

கோவில் விபத்துக்கள் முழங்கும் எச்சரிக்கை மணி. . . !

கேரள மாநிலம் கொல்லம் பரவூர் கோவிலில் நடந்த மிகப்பெரும் வெடி விபத்து அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது..107 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்…சுமார் 400 பேர் நெருப்புக் காயங்களுடன்  திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்…..சமீப காலமாக வழிபாட்டுத்தலங்களில் இது போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன….அதிலும் கேரளாவில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது…கோவில்களில் யானைகள் மிரண்டு அல்லது வெறிபிடித்து மக்களின் மேல் பாய்வது இதுபோன்ற தீ விபத்துக்கள் என விபத்துக்கள் மூலம் […]

சங்கராச்சாரியாருக்கு உதவிய திப்பு சுல்தான் …

இன்று பெரிய மத மோதல்கள் இல்லாமல் அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் ஒரு மதப்பகைமைச் சூழலை உருவாக்க இராமகோபாலன் முயற்சிப்பதை தமிழக அரசும் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.

விக்கி மாரத்தான் 2015

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். நேரம், தேதி சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேரத்திற்கு ஏற்ப). […]

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்கு ‘சரிநிகர்’ கண்டனம்!

ஒரு ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து மதவாத அமைப்பினரை சரிநிகர் வன்மையாகக் கண்டிக்கிறது. தங்கள் தரப்பு வாதங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு மாறாக, இப்படி வன்முறையின் மூலமாகவும் மத்திய ஆட்சியில் தங்களுக்கு சாதகமானவர்கள் இருக்கிற அதிகார வலிமையின் மூலமாகவும் ஆரோக்கியமான விவாதங்களை முடக்குவது என்பதே அவர்களது கருத்தியல் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மக்கள், குறிப்பாக பெண்கள் புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளவிடாமல் தடுக்கிற ஆதிக்க மனோபாவமே இது.

பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து – அதிர்ச்சித் தகவல்கள்

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது […]

சனிப்பெயர்ச்சிக்கு அறிவியல் முகமூடி தரிக்கும் தினமலர் ! – அம்பலக் கட்டுரை …

இந்த பிரபஞ்சம் உருவானதற்கும், கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல பொருள்களுக்கும் காரணம் பெரு வெடிப்பு (Big bang) என்று பல அறிவியலாலர்களால் தற்சமயம் நம்மிடம் உள்ள அறிவியல் பூர்வமான தரவுகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!

2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.

இஷ்ரத் ஜஹன் படுகொலை: நீதிக்கான போராட்டம் தொடர்கிறது!

இஷ்ரத் ஜஹன் போலி என்கவுண்டர் வழக்கில் புலனாய்வுத் துறை இயக்குனர் ராஜேந்திர குமார் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதானது நீதிக்கான நெடும்பயணத்தில் மற்றொரு மைல்கல். குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு அடுத்த ஐந்தாண்டுகளில் 120 என்கவுண்டர்கள் நடைபெற்றன. இதில் 47 போலி என்கவுண்டர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விசாரணையும் வழக்கும் நடைபெற்று வருகிறது. அவற்றில் முக்கியமானது இஷ்ரத் ஜஹன் போலி என்கவுண்டர் வழக்கு. 19 வயதான இஷ்ரத் ஜஹன் ஒரு தீவிரவாதியென்றும் அவர் மற்ற […]