பாரதி: காலங்களைக் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்

அவர் வாழ்ந்த காலம், அவரது சூழல், அவர் எதிர்கொண்ட சவால்கள்-இவற்றின் பின்புலத்தில் மின்னும் அவரது ஆளுமை மகத்தானது. அதுதான் எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி என்று கேட்கவைப்பது. எல்லா புறச் சூழலின் சோதனைகளையும் விஞ்சி முன்னெழுந்து திரண்டு வருமாறு அதுதான் அடுத்தடுத்த இளைய தலைமுறைக்கு அறைகூவல் விடுத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களுக்குப் போராடத் தூண்டுவது. நம்பிக்கைச் சுடரை அடைகாத்து வைத்திருப்பது.

ஏழை அதிபர்

நகரத்தில் இருந்து விலகி நிற்கும் ஒரு சிறிய கிராமம். அதில் விவசாய நிலத்திற்கு நடுவே கிணறு உள்ள ஒரு ஒற்றை வீடு. அந்த ஒற்றை வீட்டில் வயதான தம்பதியர்.தங்களது மூன்று கால் நாய் மானூலியாவுடன் வசிக்கிறார்கள். அந்த நிலத்தில் பூக்களைவளர்த்து அதை விற்று வரும் வருமானத்தைக் கொண்டு அவர்களது செலவுகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். கற்பனை செய்துபார்த்தால் மிகவும் ரம்மியாக இருக்கிறதா?. அடுத்த வரியை படித்தால் அந்த ரம்மியமான உணர்வு ஆச்சரியமான உணர்வாய்மாறிவிடும்.அது ஒரு நாட்டின் அதிபர் வீடு. […]

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.

உரக்கத்தான் பேசுவோம், இனி!

ஊமை சனங்களை உரக்கப் பேசு‍ என உசுப்பி விட்டவனே! கனத்த தத்துவங்களின் மையப் பொருளை ஒற்றை வசனத்தில் துடிக்கத் துடிக்க ஒலிக்கச் செய்தவனே! தங்களைத் தொலைத்தவர்களை அருகே அழைத்துத் தடவுக் கொடுத்து‍ அவர்கள் உள்ளங்கையில் மை போட்டுத் தங்களைத் தாங்களே மீட்டேடுக்க வைத்த மந்திரக் கலைஞனே! உபரி மதிப்பின் வர்க்கக் கணக்கை உள்ளூர் வீதியில் படம் பிடித்துக் காட்டியவனே! ஔரத் (பெண்), நீ நடத்திய பாலியல் சமத்துவத்தின் அதிரடி‍ பாடம்! காசியாபாத் தொழில்நகரத்துக் காலர் கசங்கிய பாட்டாளிகளின் […]

பிரியமுள்ள பாரத் ரத்னா சச்சின் அவர்களுக்கு…

இந்தியாவின் சுயமான எதிர்கால முன்னேற்றத்தில் அறிவியலுக்கு உள்ள இடத்தைப் புரிந்து கொண்டவர்கள் அனைவரும் ராவ் இந்த விருதைப் பெறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறார்கள். இளம் அறிவியலாளர்கள் இதனால் ஊக்குவிக்கப்படுவார்கள், அது அறிவியல் வளர்ச்சிக்கு மேலும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் அறிவுலகில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்தது !

தமிழ் சமுதாயத்தின் அறிவுலகம் கொண்டாடியிருக்க வேண்டிய, ஆனால் கொண்டாடப்படாத ஒரு பேரறிஞர் மறைந்துவிட்டார். இன்னும் சில மாதங்கள் கடந்திருந்தால் அவருக்கு நூற்றாண்டு கொண்டாடியிருக்கலாம். ஆனால் அகவை 99 நடந்து கொண்டிக்கும்போதே அக்டோபர் 22ம் தேதி அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். அவர் பெயர் என்.சுப்ரமண்யன்! உடுமலைபேட்டையில் தனது இளைய மகன் சுந்தரேசன் வீட்டில் 22ம் தேதி காலை 10 மணியளவில் அவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே நிரந்தரத் துயில் கொண்டுவிட்டார்.