இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . !

இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர்.  ‘ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர்!’ என்கிற பொதுப் பிம்பத்தில் பலர் இருப்பது வருத்தத்துக்குரி யது. அம்பேத்கர், குடும்பத்தின் பதினான்காவது பிள்ளையாக, தாழ்த் தப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் வெளிச்சம்,சமத்துவத்தின் மீதான நம்பிக்கை, உரையாடலுக்கான ஜனநாயக பண்பு ஆகியவற் றின் மூலம், இந்தியாவின் சமூக வரலாற்றில் மிகத் தனித்துவமான ஒரு இடத்தைப் பெற்றார். அமெரிக்காவில் சாதியமைப்பை பற்றித் தன்னுடைய உயர்கல்வி ஆய்வையும், ஆங்கிலேயரின் மாகாண நிதியமைப்பை பற்றி […]

மீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு? – 9

அயலுறவுக் கொள்கையில் இஸ்ரேலின் தொண்டரடிப் பொடியாக மாறிய மோடி கால இந்தியா இஸ்ரேலின் பலஸ்தீன ஆக்ரமிப்பை மகாத்மா காந்தி கண்டித்தார். நேரு காலம் தொடங்கி இஸ்ரேலுடன் உறவு பேணுவதை இந்தியா தவிர்த்து வந்தது. இஸ்ரேலின் அத்துமீறல்களைக் கண்டிப்பதில் இந்தியா முன்னணியில் இருந்துவந்த நிலையை அரேந்திர மோடி அரசு முற்றிலும் தல்லைகீழாக்கியது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த கையோடு செய்த முதல் வேலைகளில் ஒன்று “இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர்” எனும் மகா பெருமையைத் தட்டிச் சென்றதுதான். […]

பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வு – யோனிப் பூட்டு அறிவுரைகளும்!ஆணாதிக்க சைக்கோக்களும்!!

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துறுப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாக கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே… ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்கு போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை. அறிவுரைகளைக்காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்கு போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்க கூடாது மாதிரியான வக்கிர […]

எது கொண்டாட்டம்?

இன்று வானம் கொண்டாட்டம் முடிவடைந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அடையாறிலிருந்து ஓ.எம்.ஆர் சாலை முழுக்க நடந்துக் கொண்டிருப்பது கொண்டாட்டமா ? இல்லை கலவரமா ? என்னுமளவுக்கு டிராஃபிக் ஒரு அபாய நிலையிலிருந்தது. இரண்டு கார்கள் zig zag என சலம்பிக்கொண்டு உச்ச கட்ட வேகத்தில் சீறிப்பாய்கின்றன ! அந்த கார்களை சேஸ் செய்தவாறே உச்சகட்ட வேகத்தில் 10,15 பைக்குகள். இந்த கார் மற்றும் பைக் ஓட்டுனர்கள் குடித்திருப்பதும் தெரிகிறது. எங்களுக்கு அருகே ஒரு சிறு குடும்பம் […]

சபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . !

பெண்கள் சபரிமையில் நுழைந்து விடும் சூழல் ஏற்பட்ட போது நான் பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறுவோம் என கூறினேன். நான் எவரையும் அழைத்து தகவல் சொல்லும் முன்னரே நமது அமைப்பினர் பெண்களை தடுத்து நிறுத்த துவங்கினர். சில தொலைகாட்சிகளில் அது தலைப்பு செய்தியாக மாறியது. மாநில தலைவர் அறிவித்த அரை மணி நேரத்தில் இளைஞர்கள் இதை ஒரு சவாலாக எற்றுக் கொண்டு அங்கு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க துவங்கினர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

என்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . !

ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைகுத்திய கண்களுடன் பித்துப் பிடித்தவர் போல் அமர்ந்திருக்கிறார் ராஜலட்சுமியின் அம்மா சின்னப்பொண்ணு. வருபவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்கிறார்கள். உடன் நிற்கிறார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்கு பிறகு […]

சபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . !

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட பின்பு தான்  நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதிலும் ஐந்தில் நான்கு […]

மானுட மேன்மையை மீட்டெடுக்கும் ”மண்டோ” திரைப்படம் . . . . . . . . !

‘என்னுடைய கதைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் இந்த சமூகமும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது என்றே பொருள். ஏற்கனவே நிர்வாணமாக திரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் ஆடைகளை கழற்ற நான் யார்?’ நந்திதா தாஸ் எழுத்து இயக்கத்தில் மண்டோவின் வாழ்க்கை திரைக்கு வந்திருக்கிறது. மண்டோவின் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு கதையை நெய்திருக்கிறார்கள். வெறுமனே அவரின் வாழ்க்கை பக்கங்களை மட்டும் தொட்டுச் செல்லாமல், மண்டோவின் கதைகளும், கதாபாத்திரங்களும் திரையில் தோன்றி பிரமிக்க வைக்கிறார்கள். ‘ஏன் எல்லாவற்றையும் […]

செஞ்சோற்று கடன் கழித்தார் கிரண்பேடி . . . . . . . . . . !

மக்களாட்சியின் உயிர்துடிப்பு ஜனநாயகம் மீண்டும் ஒரு முறை படுகொலை செய்யப்பட்டது. பாஜக தனது அதிகாரத்தின் வழியாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயக மீட்பு போராட்டத்தில் காங்கிரஸ் பின்வாங்கி தனது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும், காங்கிரஸும் தங்களது அதிகாரத்தை, இருப்பை தக்க வைத்துக் கொண்டன.  ஜனநாயக அடித்தளம் கொண்ட புதுச்சேரி மக்களின் உணர்வுகள் அலட்சியம் செய்யப்படுகிறது. அதிகார அத்துமீறலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் மக்கள் உரிய நேரத்தில் […]

பால்புதுமையினர் வெளிப்பாடும் சமூக எண்ணமும் . . . . . . . . . . . . !

சமீபகாலங்களில் தங்களது பாலீர்ப்பு அல்லதுபாலினத்தை வெளிப்படுத்துவது பற்றியஉரையாடல்கள் LGBTQ+ மக்கள் மற்றும் பொதுச்சமூக மக்கள் மத்தியில் அதிக அளவில்ஏற்பட்டுள்ளது. தனது பாலினத்தையோ அல்லது பாலீர்ப்பையோ வெளிப்படையாய் சொல்லிவாழும் LGBTQ+ மக்கள் மட்டுமே மனசாட்சிக்குகட்டுப்பட்டு, அதற்கு துரோகம் இழைக்காமல்வாழ்பவர்கள் எனும் கருத்துக்களை சில LGBTQ+ சமூக மக்களும், பொதுச்சமூகத்தில் சிலரும்கொண்டிருக்கின்றனர். அவ்வாறான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முதலில் பாலினம்/பாலீர்ப்பு என்பது ஒருமனிதனுடைய தனிப்பட்ட விஷயம், அதனைவெளியில் தெரியப்படுத்த வேண்டுமாவேண்டாமா என முடிவு செய்ய வேண்டியதுஅத்தனிமனிதன்தான். ”நீ மறைவையில்(க்லோசெட் closet) இருக்கிறாய். அதனால் உன்மனத்திற்கு நீ துரோகம் இழைக்கின்றாய் “ எனக்கூறுவது தவறு. மக்கள் கூட்டுச்சமூகமாக வாழும்ஒரு இடத்தில், தனி மனிதன் தன் முடிவுகளைஅச்சமூகத்தினைக் கருத்தில் கொண்டே எடுக்கவேண்டியுள்ளது. மனத்தின் சாட்சி என்பதுஅம்மனிதன் வாழும் சமூகத்தின்விதிகளின்படியே அமைகிறது. அவ்வகையில்பார்த்தால் இந்தியாவில் பால்புதுமையினர்வேற்றுகிரகவாசிகளாகவும், சமூகத்தைக்கெடுக்க வந்தவர்களாகவும்பார்க்கப்படுகின்றனர். ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைசேர்ந்தவர் எப்படி தனது சாதியை பிறர்அறியக்கூடாது என்ற நிலைக்குஉள்ளாக்கப்படுகிறாரோ அதுபோன்ற நிலைக்கேபால்புதுமையினரும் தள்ளப்படுகின்றனர். ஒருவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல்இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதில் அவரது / அவரைச் சார்ந்தவர்களின்விழிப்புணர்வு மற்றும் சமூக பொருளாதாரநிலைமையும் அடங்கும். ஓர்பாலீர்ப்பு உள்ளஒருவரின் வெளிவரும் பயணம் தன்னைப்பற்றிஅறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்வதில்இருந்தே தொடங்குகிறது. இவ்வறிமுகம் ஊடகம்மூலகமாவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோஇருக்கும். அவை என்றுமே நேர்மறையாகஇருந்ததே இல்லை. முக்கியமாக தமிழ்த்திரையுலகம்ஓர்பாலீர்ப்பை ஒருகேலிக்கூத்தாகவே மாற்றி வைத்துள்ளது. இந்தியக் குடும்பங்களில்/பள்ளிகளில்பாலுறவைப்பற்றியோ,பாலினத்தைப்பற்றியோவிவாதிக்கப்படுவதில்லை. எட்டாம் வகுப்பு முதல்ஆண், பெண் உறுப்புகள் பற்றிய பாடங்கள்உயிரியலில் எனக்கு வந்திருக்கிறது ஆனால் ஒருமுறை கூட ஆசிரியர் அப்பாடங்களை நடத்தியதேஇல்லை. அப்படி இருந்தும் திருமணம் தான்வாழ்க்கை என இச்சமூகம் கூறுகிறது. ஒருகுழந்தைக்குப் பாலுறவைப்பற்றிய முதல்அறிமுகம் அதன் பள்ளி நண்பர்களிடமிருந்தேகிடைக்கிறது. அவ்வறிமுகம் எதிர்பாலினத்தைப்பற்றியதாகவே இருக்கும். அவ்வாறு இருக்கையில் ஓர்பாலீர்ப்பு உள்ள ஒருகுழந்தை அதை ஒரு கட்டம் என்றோ / தனக்குவந்த நோய் என்றோ நினைக்கும், தானும்ஒருநாள் தன் நண்பர்களைப்போல எதிர்பாலினத்தவர் மீது காதல் / ஆசை கொள்வோம்என நினைக்கும். இவை எல்லாவற்றையும் மீறிஒருவர் தன்னை ஏற்றுக்கொண்டாலும் தன்னைச்சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றஅச்சம் இருக்கும். பாலினம் சார்ந்த எந்தவிஷயத்தையுமே என்றுமே விவாதித்திடாத தன்பெற்றோரிடம் இதை எப்படிக் கூறுவது என்றதயக்கமும், அவர்கள் தன்னைகைவிட்டுவிடுவார்கள்  என்ற அச்சமும்தலைதூக்கும். தன்பாலீர்ப்பு உள்ளவர்க்கும்சரசாரி மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் மற்றபிரச்சனைகளும் இருக்கும் என்பதையும் நாம்நினைவில்கொள்ள வேண்டும். தன்னைப்பற்றிபெற்றோரிடம் கூறினாலும் அவர்கள் தங்கள்பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள கால அவகாசம்தேவைப்படும். ஒருவர் தனைப்பற்றி தன்பெற்றோரிடத்தில் கூறினாலும் மற்றவர்களுக்குஏன் கூற வேண்டும் என்று கூட நினைக்கலாம். இச்சமூகத்தின் நம்பிக்கை மற்றும் அதன்விழிப்புணர்வின்மையாலேயே நாங்கள்எங்களைப்பற்றி இவ்வுலகத்திற்குஅறிவித்துக்கொள்ளும் நிலைமைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இங்கே நாங்களும்வாழ்கின்றோம் என்பதை வெளிக்காட்டஎங்களுக்கு தேவை தைரியமே தவிரகுற்றவுணர்ச்சி அல்ல. அதே சமயம்மறைவையில் வாழ்பவர்கள்தைரியமில்லாதவர்களா என்றால் இல்லை, அவரவர் அவர்களுக்கு சாதகமான நேரத்திற்காககாத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அப்படிஒரு நேரம் வராமல் கூட போகலாம். என்னைப்பொறுத்தவரையில் வெளிப்படையாய்வாழாவிட்டாலும் தான் விரும்பிய நபரோடுவாழும் உறுதியுடைய அனைவருமே தங்கள்மனதிற்கு துரோகம் இழைக்காதவர்களே. – கொன்றை வேந்தன்