போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]

அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 3 (போர்ட்டோரிகோ)

தொடரின் முதல் பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 1 (போர்ட்டோரிகோ) தொடரின் இரண்டாவது  பகுதி – அமெரிக்க காலனியின் 100 ஆண்டு வரலாறு – 2 (போர்ட்டோரிகோ) அமெரிக்க அதிபர் ட்ரூமனின் தந்திரம்: பனிப்போருக்கு வித்திட்டு உலகையே இரண்டாகப் பிரித்து, இன்று வரை உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் அமெரிக்காவின் பணியைத் துவக்கி வைத்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ருமன், போர்டோரிகோவிற்கும் ஒரு வழியினைக் கண்டறிந்தார். போர்டோரிகோவில் துவங்கி இருந்த விடுதலைப் போராட்ட […]

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்) – 3

தொடரின் முதல் இரண்டு பகுதிகள் – முதல் பகுதி , இரண்டாம் பகுதி புதிய அதிபர்… புதிய கொள்கைகள்… இப்படியாக, ஆட்சியாளர்களையும் அரசையும் கலைப்பதும் மாற்றுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தாலும், ஹோண்டுரசை வெறும் வாழைப்பழ விலை நிலமாக மட்டுமே வைத்திருந்தன வாழைப்பழ நிறுவனங்களும், அவர்களுக்கு உதவி புரிந்த அமெரிக்க அரசும். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஹோண்டுரசை மாறிமாறி ஆண்டுவருவது “ஹோண்டுரஸ் தேசியக்கட்சி” மற்றும் “ஹோண்டுராஸ் லிபரல் கட்சி” ஆகிய இரண்டே இரண்டு தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான்.அவர்களுக்குள் கொள்கைகளில் […]

மீண்டுவருமா வாழைப்பழதேசம்? (ஹோண்டுரஸ்)-1

உலகின் கொலைகார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிற நாடு, வடஅமெரிக்காவிற்கு கீழே மத்திய அமெரிக்காவிலிருக்கும் ஹோண்டுரஸ் என்கிற நாடுதான். ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு, 91 பேர் கொலை செய்யப்படுகிறார்கள். உலகின் வேறெந்த நாடுகளை விடவும், இவ்விகிதம் மிக அதிகம். அப்படிப்பட்ட ஒரு கொலைகார நாடு குறித்து நமக்கு ஏன் எந்த ஊடகங்களும் செய்தி சொல்லவில்லை? மனிதவுரிமை குறித்து பேசித்தள்ளும் மேற்குலக நாடுகள் எவையும் ஹோண்டுரஸ் போன்ற நாடுகளின் நிலை பற்றி கவலைப்படாமலும், நம்மையும் கவலை […]

சுடுகாட்டு அமைதியும் சிங்கப்பூர் ஒழுங்கும்!

சிங்கப்பூர் சென்று வருபவர்கள் கூறுவதெல்லாம் அங்கு நிலவும் சமூக ஒழுங்கைப் பற்றித்தான். நமது சமூகத்தில் அப்படிப்பட்ட ஒழுங்கு இல்லை என்ற ஆதங்கமும் வெளிப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் அவர்கள் கூறும் ஒழுங்கு இருப்பது மிகவும் பிடிக்கும். யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற உத்தரவாதம் இல்லாத நமது சமூகத்தில் காலையில் நாம் வீட்டைவிட்டு அடியெடுத்து வைத்ததுமே அதைப் பற்றிய கவலை நம்மைப் பற்றிக் கொள்ளும். நாம் முறையாக நெறி தவறாமல் நடந்தாலும் நமக்கு அது போன்று கிடைப்பதில்லையே […]

மண்டேலா-அம்பேத்கர்: ஒடுக்கப்பட்டோரின் குரல்கள்!

இறப்பு என்பது‍ எல்லோருக்கும் ஒன்றுதான் என்றாலும், அவர்கள் இந்த சமூக நலன்களுக்கு‍ எவ்வளவு பங்காற்றியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து‍ ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படும்.

சிங்கப்பூரின் “முன்மாதிரி“ தொழிற்சங்க இயக்கம்-1

எங்கு முன்மாதிரிகளைப் பற்றிய வகுப்பு நடந்தாலும் அதில் சிங்கப்பூர் இடம் பெற்றிருக்கும். அது அரசியலமைப்பு, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி போன்றவைகளுக்கு எப்பொழுதுமே சிங்கப்பூர்தான் உதாரணமாக காட்டப்படும். இந்தப் பின்னணியில் தொழிற்சங்க இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சிங்கப்பூர் தொழிற்சங்க இயக்கம்தான் காட்டப்படுகிறது. குறிப்பாக ஒரு முன்மாதிரி தொழிற்சங்க இயக்கம் என்பது சிங்கப்பூரின் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் போன்று இருக்க வேண்டும் என்பதே தொழிற்சங்க இயக்கத் தலைவர்களுக்கு ஆளும் வர்க்கங்களின் முன்முயற்சியால் நடத்தப்படும் வகுப்புகளில் சொல்லிக் […]

சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 4)

துணையதிபர் வாலேசின் சீன சுற்றுப் பயணம்: அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுக்கவிருக்கிற ஜனநாயகக் கட்சியின் மாநாடும் நெருங்கியது. ஆனால் ரூசுவெல்டின் நிலையென்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. வாலேசை சீனாவிற்கு அனுப்பி போர்ச்சூழல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பிக்கச் சொன்னார் ரூசுவெல்ட். சீனாவில் சன்யாட் சென்னிற்கு பிறகு கட்சியில் குழப்பம் விளைவித்து, தலைமைப் பதவியினை எடுத்துக்கொண்டு, சீனாவை ஆட்சி செய்வதாக அறிவித்துக் கொண்ட சியாங்குடன் 20 ஆண்டுகளாக நட்பில் இருந்தது அமெரிக்கா. சியாங்கின் அமெரிக்க வாழ் […]

உலகத்தின் பத்து சிறிய போர்கள்

போர் எப்போதும் கொடுமையானது தான். ஒவ்வொரு முறை போர் துவங்கும் போது அன்பு அழத்துவங்குகிறது. நாம் நிறைய போர்களைப் பற்றி படித்திருப்போம்.போருக்கான காரணங்கள் பலப் பல இருந்தாலும் எல்லாவற்றையும் பேராசை என்கிற ஒற்றைக் கயிறில் கட்டிவிடலாம். பதிவு செய்யப்பட்ட வரலாறில் இது வரை நடந்த போர்களில் மிககுறுகிய காலத்தில் முடிவுற்ற போர்களைப் பார்ப்போம். இதில் கலகங்கள், சுதந்திரப் போராட்டங்கள், உள் நாட்டு யுத்தங்கள், உலகப்போரில் நடந்த யுத்தங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

வல்லரசுகளுக்கு இராணுவப்பாடம் கற்றுத் தந்த வியட்நாம் வீரத்தளபதி வோ கியென் கியாப்…!

உலகத்திலேயே இராணுவப் பயிற்சி இல்லாமலேயே மாவீரன் நெப்போலியனுக்கு நிகராக படைத் தளபதியாக உயர்ந்தவர்கள் இருவர். ஒருவர் இந்திய தேசியப் படையை அமைத்து இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் நேதாஜி. இன்னொருவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இராணுவத் தளபதி வோ கியேன் கியாப் (Võ Nguyên Giáp). நேதாஜியும், கியாபும் இராணுவப் பயிற்சி இல்லாமலேயே அன்றைய இரு பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் செய்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த […]