கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். […]

இஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)

#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948 1948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற கிராமத்தினைசுற்றிவளைத்தது. ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை அங்கேயே சுட்டுக்கொன்றனர் இர்குன் பயங்கரவாதிகள். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அக்கிராமத்தில் இருந்த […]

இளையராஜாவின் புதிய ரசிகை … (அனுபவப் பதிவு)

என் ஐம்பதை நெருங்கும் வயதில் வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இசைஞானியை அறியாமல் அவ்வளவு அறியாமை நிறைந்த மனுஷியா நான்! இல்லை! ஆமாம்! இரண்டுமே என் பதில்களாக உள்ளன.

ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !…

தயங்கி தயங்கி அந்த அறைக்குள் நுழையும் சிறுவன் அண்ணனுக்கு தெரியாமல் அவருடைய ஆர்மோனியப் பெட்டியை தொட்டுப் பார்க்கிறான். இந்த விஷயம் அண்ணனுக்கு தெரிந்தால் ”அடி பின்னிடுவார்” என்பது அவனுக்கும் தெரியும். இருந்தும் அந்த இசைக்கருவி மீது அப்படி ஒரு தீராத காதல். அண்ணன் நையாண்டி கச்சேரி நடத்தச் செல்லும் இடத்திற்கெல்லாம் உடன் செல்கிறான். கொஞ்சம் மெல்லிய பெண் குரல் என்பதால் பெண் வேஷத்திற்கு பின்னணி பாடகனாக அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.

மாமேதைக்காக மாமேதையின் உறை

1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனம் பி.பி.சி “கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்?” என உலகம் முழுவதும் நடத்திய கருத்திக் கணிப்பில், அதிக பெரும்பான்மையானோர் அளித்த பதிலின் அடிப்படையில் “கார்ல் மார்க்ஸ்” என தனது முடிவை வெளியிட்டது. மனித குல வரலாற்றில் தத்துவம், அரசியல், பொருளாதாரம், சமூகம், அறிவியல், பெண்ணியம், கலை, இலக்கியம், பண்பாடு என அனைத்து தளங்களிலும் மாபெரும் மாற்றத்தை நிகழ்த்தி உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொளுக்கும் முதலாளித்துவத்தை […]

ஜோசப் ஸ்டாலின் நினைவு நாள்

செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை, சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்து‍ லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் – ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கிய ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் (5 மார்ச், 1953)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

நாகரீக உலகில் ஒன்று திரண்டு போராடும் தொழிலாளி வர்க்கத்துக்கு உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் திகழும், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ (Working Men of all Countries, Unite!) என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தோடு‍, நவீன வரலாற்றைத் தத்துவார்த்த முறையில் விவரிக்கும், உலகை மாற்றியமைத்த முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நாள்.

சிங்காரவேலர்

எளியோரை வலியோர் சுரண்டுவதிலிருந்து‍ விடுதலை, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர்கள் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவைக் கண்ட ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள்.

யுவான் அல்மெய்டா

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவரும், கியூபாவின் துணை அதிபராக இருந்தவருமான யுவான் அல்மெய்டா பொஸ்க் பிறந்த நாள்.