96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . !

கே.ராமச்சந்திரன் என்கிற ராம் (37 வயது), ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனாக அறிமுகமாகிறான். நரையின் ரேகைகள் ஓடிய தாடி மீசை. நெடிய ஆகிருதியாக வளர்ந்த உடம்பு. அவன் புகைப்படக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியனும் கூட. இப்படித்தான் அறிமுகமாகிறான். பள்ளி, கல்லூரிப் பருவத்து மாணவ, மாணவியர். அவர்களில் ஒரு மாணவியோடு, அவள் கார் ஓட்ட, இவன் பயணம். வரும் வழியில் தஞ்சாவூர். அவன் அவளிடம் தஞ்சை பற்றிய நினைவுகளை அதி உற்சாகத்தோடும் பரபரப்போடும் பகிர்கிறான். பழைய பேருந்து நிலையம், உணவகங்கள், […]

பரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . !

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் & சில்ட்ரன் ஆஃப் ஹெவன் . . . . . . . . . . . . !

1999 ஆம் ஆண்டில் சிறந்த அயல்நாட்டு மொழித்திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப்பட்டியலில் கடைசி ஐந்து படங்களாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்தன இரண்டு படங்கள். அதில் ஒரு படம், ஆஸ்கர் விருதையே வென்ற படம். அவை இத்தாலியப் படமான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் மற்றும் ஈரானியப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஆகும். அப்படங்களைப் பற்றிய விமர்சனம் எல்லாம் எழுதவேண்டுமென்றால் பல பாகங்களாகவோ பல நூல்களாகவோ எழுதலாம். அதனால் அதைச்செய்யப்போவதில்லை இப்போது. அவற்றில் எனக்கு பிடித்த இருகாட்சிகளை மட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்று தோன்றியது. முதல் […]

“அவள்” குறும்படம் . . . . . . . . இருவேறு கோணத்தில் ஒரு பார்வை . . . . . . . !

முதல் கோணம்: ஒரு பாலியல் தொழிலாளியின் எளிய விருப்பத்தை காட்டுகிற குறும்படம், “அவள்”! தோழர் அருண் பகத் இயக்கியுள்ளார். பாலியல் தொழில் உள்ளிட்ட பொதுச் சமூகத்தில் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி சில வாரங்களுக்கு முன் பரவலாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் உறவு வைத்ததாக சில திரையுலக பிரபலங்களின் பெயர்களை நடிகை ஸ்ரீஜா வெளியிட்டிருந்தார். அச்சமயத்தில், ‘என் உடல், என் உரிமை’ என்கிற ரீதியிலும் அவர் பேசி இருந்தார். […]

‘மேற்கு தொடர்ச்சி மலை’ எனும் தவற விடக்கூடாத வாழ்வுப்பிரதி . . . . . . . . . . . !

ஒரு கலைப்படைப்பு என்பது காலத்தின் பதிவு. கவிதை, சிறுகதை, சினிமா, ஓவியம் என எந்தக் கலைப்படைப்பும் காலத்தை நிறுத்தி பிரதியெடுத்தலே. மேற்கு தொடர்ச்சி மலை, தேனி தேக்கடி மூணாற்றின் கடந்த எண்பதுகளுக்கு பின்னான காலப்பதிவு. ஒரு துண்டு நிலம். வரலாறு நெடுக நிலமற்ற உழைக்கும் மக்களின் கனவு இதை நோக்கியே இருந்திருக்கிறது. வாழ்வாதராமாக நிலத்தை அடைய கனவு காணும் உழைக்கும், சுரண்டப்படும் மக்களுக்கும் – நிலத்தை அதிகாரமாக தலைமுறை தலைமுறையாக கையில் வைத்திருக்கும் ஆண்டைகளுக்கும் ஊடாகத்தான் வரலாறு […]

டிக் டிக் டிக் . . . . . . . . . . !

இயற்கையும் அறிவியலும் எப்போதுமே எனக்குப் பிடித்தவை என்பதால், அறிவியல் புனைகதை மற்றும் பேன்டஸி படங்களை காண்பதில் ஒரு அலாதி ப்ரியம் எப்போதுமே உண்டு. மார்ஷியன், இன்டர்ஸ்டெல்லர், அரைவல் இன்னும் சில படங்கள் இந்தப் பட்டியலில் உண்டு. இன்டர்ஸ்டெல்லர் பார்த்தபின்பு தான் கிராவிட்டி பார்த்தேன் என்பதால் கிராவிட்டி எனக்கு ஒப்பீட்டளவில் இன்டர்ஸ்டெல்லரை விட பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் வரிசைப்படி கிராவிட்டியை முதலில் பார்த்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்… என உப தலைப்போடு விளம்பரம் […]

காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் பா.இரஞ்சித் எதிர்ப்பென்பது அவரின் அரசியல் அணுகுமுறை மீதான முரண்பாடுக்கப்பால் ஏதோ ஒரு வெறுப்பரசியலாக மாறி வருகிறது. தவறானவர்கள் சினிமாவில் வளர்ந்து அல்லது சினிமாவைப் பயன்படுத்தி […]

நடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . !

நடிகையர் திலகம் திரைப்படம் பல் வேறு திறமைகள் கொண்ட ஒரு பெண் கலைஞர் உச்சத்திற்குப் போனதும், பின்பு அந்த வாழ்வு கெட்டு வீழ்ந்ததுமான கதை. இந்தப் படம் பெண் தயாரிப்பாளர்கள் தயாரித்த படம். என் தலைமுறைக்கே அவர் வீழ்ந்ததும், அவர் மரணத்தின்போது உழைக்கும் பெண்கள் விழுந்து கதறி அழுததும் குழந்தைப் பருவ நினைவாக நினைவில் இருக்கும்.., பத்திரிகைகள் அவர் குடியால் மட்டும் இறந்தார் என மாய்ந்து மாய்ந்து எழுதியது அந்த வயதிலேயே எனக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. சாவித்திரி […]

பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . !

பான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth)              -Directed by Guillermo del Toro போர் தொடர்பான திரைப்படங்கள், பெரும்பாலும் உறக்கமற்ற இரவுகளிலே நம்மைக் கொண்டு செல்லும். அப்படியானதொரு, நிறம் மங்கியிருந்த விடியல் பொழுதொன்றை தான் ஒஃபிலியாவும்(Ofelia) எனக்கு வழங்கியிருந்தாள். வன்முறைகள் எவ்வளவு நிகழ்ந்தாலும், சலனப்படாத கலைஞர்கள்(!) பலரைக் காண்கிறோம். நந்தினி, ஹாசினி போன்ற சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டு கொல்லப்பட்டாலும், அனிதாக்கள் மரணித்தாலும், மலக்குழிகளில் இறக்கி மக்களைக் கொன்றாலும், எவ்வித சலனமும் இல்லாமல், கைகள் நிரம்ப […]