உறியடி 2 தெறியடி . . . . . . . . !

சில பண்டிதர்கள் வந்து ‘சினிமான்னா என்ன தெரியுமா?’ என பாடம் எடுப்பார்கள். திபுதிபுவென ஓடிவிடுங்கள். மக்களை பேசாத எதுவும் கலை இல்லை. மக்களை பேசுகின்ற எதற்கும் வடிவமும் தேவையில்லை. அங்கெல்லாம் மக்கள் தங்களை மறந்து திரைக்குள் செல்லும் அற்புதத்தை உங்களால் பார்க்க முடியும். இன்று நாங்கள் பார்த்தோம். தியேட்டரில் பார்த்த 600 பேருக்கு லாஜிக்குகளின் தேவை இருக்கவில்லை. Infact லாஜிக்கை பற்றிய சிந்தனை வராத அளவுக்கு மிகச்சரியாக இருந்தது.  படம் கொண்டிருந்த முக்கியமான லாஜிக்கில் மக்கள் அனைவரும் […]

சூப்பர் டீலக்ஸ் – திரைக்கதை – தாத்பரியம் . . . . . . . . . . !

மேற்குத் தொடர்ச்சி மலை , பரியேறும் பெருமாளுக்கு பிறகு அப்படி முழுவதுமாய் ஆக்கிரமித்து , மனதின் மூலைகளிலெல்லாம் ரீங்காரமிட்டு எழுத உந்தித் தள்ளிய ஒரு படம்  ‘Super Deluxe ‘ . Its simply a Master Brilliance ! ஒன்றுக் கொன்று நேரடித் தொடர்பில்லாத ஒரு தற்செயல் நிகழ்ச்சி இன்னொரு நிகழ்ச்சியை பாதிப்பதும், அந்த நிகழ்ச்சி மற்றொரு நிகழ்ச்சியை பாதிப்பதும் என இந்த நிகழ்ச்சிகளின் சங்கிலித் தொடர் தான் உலக இயக்கமும் , வரலாறும் .  […]

90ML – Why should boy alone have all the fun…

காதல், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம், அடிதடி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்று குடியை போதிக்கும் தமிழக அரசுக்கு கட்டிங் அடித்து கத்திச் சொல்லும் Adults only படம்தான் 90ML.

பேட்ட – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் . . . . . . . . !

தன்னுடைய ட்ரேட் மார்க் படங்களின் இயகுநர்களிடம் இருந்து விலகிய  ரஜினிகாந்த், பா.ரஞ்சித்தின் கபாலி  மற்றும் காலா படங்களில் நடித்தார். இந்த இரு படங்களும் ரஜினியின் முந்தைய படங்களில் இருந்து விலகி, அவருக்கு புதிய முகத்தை கொடுத்தன.  கபாலியை விடவும் காலா அப்பட்டமான மக்களுக்கான அரசியல் சினிமாவாக வெளியானது. இந்த பின்னணியில் தமிழ் சினிமாவில் சர்கார் திரைப்படத்தின்ன மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சன் பிக்சர்ஸ், ரஜினியுடன் கைகோர்த்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குநரானார். கார்த்திக் சுப்புராஜ் ரஜினி ரசிகராகவே […]

ஷாஜகான் முதல் சர்கார் வரை……………..!

சர்க்கார் திரைப்படம் வெளியான அன்று,  ஒருவேலையாக ஜெர்மனியின் அதிகப் பிரபலமில்லாத ஊரில் தங்கியிருந்தேன். ஊரின் பெயரை இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்குக் காரணம், எனது அடுத்த கட்டுரையின் தலைப்பே அதுதான். அதனால் அதுவரை சொல்லாமல் இருக்கலாம்னு தான் இங்கே குறிப்பிடவில்லை. அந்த ஊரில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கில் சர்(க்)கார் ஒரேயொரு காட்சி போடப்போவதாகத தகவல் காதுக்கு வந்து சேர்ந்தது. சரி, இந்த சாக்கில் அந்த ஊரில் இருக்கும் தமிழ்ப்பேசும் நல்லுலகத்தில் இருந்து யாராவது நண்பர்கள் […]

சர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் .  . . . . . . . . . . . . !

கார்ப்பரேட் முதலாளி கலாநிதி மாறனின் தயாரிப்பில் , முருகதாஸ் இயக்கத்தில் , விஜய் நடிப்பில் வெளிவந்த படம் சர்கார். இது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஆளும் கட்சியினரால் பேனர் உட்பட கிழிக்கப்படும் எதிர்ப்பினை பெற்றுள்ளது யதார்த்தமா … வியாபார தந்திரமா … விளம்பர யுக்தியா … அதைத் தாண்டிய ஒன்றா … என சிந்திக்க வேண்டியுள்ளது. வாக்களிக்க வந்த நாயகனின் ஓட்டு கள்ள ஓட்டாக மாறியதை முன்னிட்டு அவர் நீதிமன்றத்தை நாடி தேர்தல் முடிவை நிறுத்தி வைத்து […]

இங்கிலாந்துக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகின் மிக முக்கியமான நகரம் வடசென்னை!

சென்னையின் அலங்காரங்களாகத் திகழ்கின்ற பிரிட்டிஷ் கால கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், விளையாட்டு மைதானங்கள், ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட செந்நிறக் கட்டிடங்கள் அனைத்திலும் தலித்துளின் – மீனவர்களின் இரத்தமும் சதையும் கலந்திருக்கிறது.

பூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . ?

என்னடா பெரிய மதுரை… வந்து பாருடா வடசென்னையை… வெற்றிமாறனின் ஆசை நிறைவேறியதா? வடசென்னை பார்த்தபின் தான் செக்கச் சிவந்த வானத்தப் பார்த்தேன். அதுவும் ஒரே நாளில்…. இரண்டு படங்களின் கதையையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி மனதிற்குள் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்… ஏதாச்சும் தோணுதா? சரி வடசென்னைக்கு வருவோம். இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநராக மிக நுட்பமாக உழைக்கிற உழைப்பாளி. அதனால் வடசென்னை படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் வெற்றி மாறன்… அசத்தி இருக்கிறார். அதைப்போலவே நடிகர்கள் பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய […]

ராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . !

முன்டாசுபட்டி படத்தை இயக்கிய திரு.ராம்குமாரின் அடுத்த படம்தான் ராட்ச்சன். முண்டாசுபட்டியில் கதை 80களின் காலகட்டம் காதலை மையமாகக் கொண்டு அப்போதிருந்த இப்பவும் பலரிடம் இருக்கிற  மூடநம்பிக்கைகளை பகடி செய்யும் விதத்தில் நகைச்சுவையாகவும் சுவராஸ்யமாகவும் நல்ல திரைக்கதையோடு ரசிக்கும் விதத்தில் எடுத்திருப்பார். அதற்கு எந்த வகையிலும்  குறைவில்லாத அளவிற்கு பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ராட்ச்சன் திரைப்படமும்… படத்தின் நாயகன் ஏற்கனவே முண்டாசுபட்டியில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு, மாவீரன் கிட்டு, ஜீவா, போன்ற நல்ல  படங்களை தேர்ந்தெடுத்து  […]

96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . !

கே.ராமச்சந்திரன் என்கிற ராம் (37 வயது), ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனாக அறிமுகமாகிறான். நரையின் ரேகைகள் ஓடிய தாடி மீசை. நெடிய ஆகிருதியாக வளர்ந்த உடம்பு. அவன் புகைப்படக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியனும் கூட. இப்படித்தான் அறிமுகமாகிறான். பள்ளி, கல்லூரிப் பருவத்து மாணவ, மாணவியர். அவர்களில் ஒரு மாணவியோடு, அவள் கார் ஓட்ட, இவன் பயணம். வரும் வழியில் தஞ்சாவூர். அவன் அவளிடம் தஞ்சை பற்றிய நினைவுகளை அதி உற்சாகத்தோடும் பரபரப்போடும் பகிர்கிறான். பழைய பேருந்து நிலையம், உணவகங்கள், […]