அரிசி இலவசம், தண்ணீர் பத்து ரூபாய்… எது சாதனை?

தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டால் கூட தரத்தயங்கும் மனநிலைக்கு தமிழக மக்களை மாற்றியதும் அதிமுக அரசின் பெருஞ்சாதனையென்றே நிச்சயம் கூறலாம். பேருந்திலொ அல்லது ஏதேனும் பயணங்களிலொ தண்ணீர் இல்லையென்றால், யாருக்கும் இப்போதெல்லாம் அருகில் இருப்பவரிடம் கேட்கத்தோன்றுவதில்லை. அப்படியே கேட்டாலும் சிலர் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களோ எனக்கு இன்னைக்கு புல்லா வேணும், சும்மா வாயை நனைச்சிட்டு கொடுத்துருங்க என்று சொல்லிக்கொடுக்கும் நிலை பலருக்கு. சும்மா சும்மா தண்ணிய குடிச்சிக்கிட்டே இருக்காதே, பாட்டில காலி பண்ணிடாதே, தவிச்சதுன்னா ஒரு மடக்கு குடிச்சுக்கோ என குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் நிலை.

யோகா, இரக்ஷா பந்தன், அடுத்து..?

உலகெங்கும் யோகா நடந்த புகைப்படங்களையும், யோகா குறித்த மையங்களையும் வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள். யோகா யாருக்கானது என்றும், ஏன் என்றும் உங்களுக்குப் புரியும்.

மேகியை விசமாக்கியது எது? – என். சிவகுரு

குழந்தைகள் மத்தியில் பிரபலமான முட்டை வடிவிலான கிண்டர் ஜாய் (KINDER JOY) எனும் சாக்லேட் போன்ற பண்டம் (ரூ 30) உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்.