என்னைத் தெரியுமா?

டாக்டர் ஜி. ராமானுஜம் கல்யாண வீடுகளில் பந்திக்கு முந்தும் அவசரம் எல்லோரையும்விட  மருத்துவர்களுக்கு இருக்கும். ஏனென்றால் பெரும்பாலும் ஒருவரது வாயில் தெர்மாமீட்டரை வைத்துவிட்டுத்தான் கல்யாண வீட்டிற்கு வந்திருப்பார்கள். அவசரமாகப் போய் அதை எடுக்க வேண்டியிருக்கும். அந்த அவசரத்திலும் மண்டபத்தையே மருத்துவமனையாகப் பாவித்து “இந்த நடுமுதுகுல நாலு நாளா ஒரு நமைச்சல்” என்று மருத்துவ ஆலோசனை நடத்துவார்கள் சிலர். அவர்களைக்கூட விட்டுவிடலாம். ஆனால் என்னைத் தெரிகிறதா என்று கேட்டபடி ஒரு கொலைவெறியுடன் ஒரு கும்பல் வரும் பாருங்கள். கூலிப்படையினர் […]

சிதையும் மனம்

 ம. மணிமாறன் தகித்துச் சூரியன் மேலெழும்புவதற்கு முன் எழுந்து அவரவர் பணிகளில் இறங்கிடவே யாவரும் விரும்புகிறோம். இந்த விருப்பம் நிரந்தரமானதல்ல. சுறுசுறுப்பாக இயங்குவதைப் போலவேதான் உடலும் மனமும் ஓய்விற்கும் கூட ஆசைப்படுகின்றன. நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை என்பதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மாமிசம் வாங்குவதற்காக கறிக்கடைக்குச் செல்கிற ஒவ் வொரு நாளும் நான் நினைத்துக் கொள்கிறேன். கவிஞர் கந்தர்வனின் கவிதை வரிகள் காலாதி காலமும் நின்று நிலைக்கும் வரம் பெற்றவை என நினைக்கும் போதே கண்கள் […]

வினாவுதலும் பங்கேற்புக் கற்றலும்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. – அறிவியல் மனப்பான்மைக்கு அடிப்படையை வள்ளுவர் வகுத்துத் தந் துள்ளார். இக் குறட்பாக்கள் தமிழ் வகுப்போடு நின்று விடுகின்றன. தமிழ் வகுப்புகளில்கூட பிற பாடப்பகுதிகளில் இக்கூற்றைக் கொண்டு ஆய்வு நடப்ப தில்லை. அறிவியல், வரலாறு வகுப்புகளில் ஆசிரியர் கூறுவதையும், பாட நூலில் உள்ளதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்கின்ற மனப்பான்மை நம் கல்விமுறையில் வளர்க்கப்பட்டுள்ளது. நிறைய கேள்விகளைக் கேட்கும் […]

டெல்லி தேர்தல் முடிவு உணர்த்தும் பாடங்கள்

டெல்லி சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமான வெற்றியைப் பெற்று, பாஜகவுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது. “இந்த வெற்றி எனக்கு அச்சத்தை அளிக்கிறது. இது நமக்கு ஆணவத்தைத் தந்துவிடக் கூடாது” என்று அர்விந்த் கேஜ்ரி வால் கூறியுள்ளது அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தி வரக்கூடிய வைரமொழி. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் அதற்குப் பிறகு நடந்த சில மாநிலத் தேர்தல் முடிவுகளும் நரேந்திர மோடி – அமித் ஷா ஜோடிக்கு ஆணவத்தை அளித்திருந்தன. […]

காரணங்களைக் கண்டறியாமல் தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது

தமிழகத்தில் அண்மைக் காலத்தில் சுமார் 1000 அரசுப் பள்ளி கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இருந்த 300 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அப் பள்ளிகளில் 1,20,000 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000 ஆகக் குறைந்துவிட்டது. சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அம் முடிவு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்தினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் […]

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

உயிர்மூச்சாக மாறட்டும்

பொதுவாகவே தமிழர்களுக்கு திருவிழாக்களில் நாட்டம் அதிகம். மாதந்தோறும் திருவிழா, ஊர்தோறும் திருவிழா என்று கால, இட இடைவெளிகளின்றி திருவிழாக்கள் கொண்டாடப் படுகின்றன. பெரும்பாலும் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் சார்ந்த திருவிழாக்கள்தான். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால் போ°டர் அல்லது அழைப்பிதழ் அடித்து அழைக்காமலேயே லட்சக்கணக்கில் மக்கள் கூடுவது அவர்கள் ரத்தத்திலேயே ஊறிப்போன விஷயம். ஆனால், சமீபகாலமாக புத்தகங்களுக்கென்று தமிழகத்தின் பல நகரங்களிலும் திருவிழா எடுக்கப்படுவது தமிழகப் புத்தகப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம். பெருமாள் […]