அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

பேராசையின் உச்சகட்டம்

மதுரையிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையில் பயணிக்கும் போது, இருமருங்கிலும் பச்சை பசேலன்ற வயல்வெளிகள் கண்ணுக் கினிய காட்சிகளாய் அமைந்த காலம் ஒன்றிருந்தது. வைகை அணை யிலிருந்து கால்வாய் மூலம் பாயும் நீர்வளத்தால் மேலும் வளங் கொழித்தது மேலூர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பல சிறப்புக்களில் ஒன்று, அது தொடர்ச்சியின்றி இருப்பது.  மற்றொன்று அதன் தொன்மை மிக்க வலுவான பாறைகள். கிரானைட் என்றழைக்கப்படும் இப்பாறைகளின் அருமையை கட்டடக் கலை வல்லுநர்கள் நன்கறிவர். இயற்கை அளித்த இந்தக் கொடையை வெட்டி […]

தன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)

இந்த மாதத்துக்கான புள்ளி இதயம் சம்பந்தப்பட்டது. இதயத்திற்கு சக்தியூட்டக்கூடிய இந்தப் புள்ளியின் அமை விடத்தை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். இந்தப்புள்ளி சுண்டுவிரல் நகத்தை ஒட்டி நகத்தின் கீழ்ப்பகுதி விளிம்பில் மோதிர விரல் பக்கமாக அமைந்துள்ளது (படத்தில் காட்டியபடி). இந்தப் புள்ளியை ஆள்காட்டி விரலால் கையை எடுக்காமல் மூன்று நிமிடங்கள் மிதமாக அழுத்திக்கொள்ள வேண்டும். இடது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை வலது ஆள்காட்டி விரலாலும், வலது சுண்டுவிரலில் அமைந்த புள்ளியை இடது ஆள் காட்டி விரலாலும் தொடுசிகிச்சை […]

உணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …

ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்வார். அங்குள்ள சர்வரிடம் புகழேந்திப் புலவர் நள வெண்பாவில் தமயந்தியை வர்ணிப்பதுபோல் ஒரு ஐந்து நிமிடம் உவமானம் உவமேயங்களுடன் ஒரு ஊத்தப்பத்தை வர்ணிப்பார். மழைச்சாரல்போல காரட் வெங்காயம் எல்லாம் தூவிப் பொன்னிறமாக எடுத்து வரச் சொல்வார். அவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருந்த சர்வர் ஒரு கரப்பான்பூச்சியைப் பார்க்கும்போது காட்டும் அளவு கூட சுவாரஸ்யம் காட்டாமல் சாருக்கு ஒரு ஊத்தப்பம்! என்பார். இது போலத்தான் நிஜவாழ்விலும் நாம் படுசுவாரஸ்யமாகப் பொன்னியின் […]

சாதி அரசியலும், அப்பாவித் தமிழர்களும்

பாலூட்டி, சீராட்டி வளர்த்த தம் பெண் ணையே கொல்ல மனம் வருகிறதெனில், இந்தச் சாதிவெறி எந்தள வுக்கு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பது தெளிவாகிறது.

பெண்கள் சாதனை படைக்கும் காலம்…

எட்டு மறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்ற பாரதியின் வாக்கை மெய்ப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாதனைப் பெண்களுக்கு புதிய ஆசிரியன் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஓநாய்க் கிழவிக்கு இரையாவதோ சிறுமி?

(செப்.2 அகில இந்திய வேலைநிறுத்தத்தை ஒட்டி புதிய ஆசிரியன் இதழில் வெளியான கட்டுரை) – எஸ்.வி. வேணுகோபாலன் ஆகஸ்ட் 2002 பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் ஒரு முழு பக்க விளம்பரம் வந்திருந்தது. வெளியிட்டவர்கள், ஐ சி சி – இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு எனப்படும் முதலாளிகள் சங்கம். பிரதமர் வாஜ்பாய் அவர்களே, வேலை வாய்ப்புகளுக்கு எதிரான சட்டங்களை ஒழித்துக் கட்டுங்கள், வேலை வாய்ப்பு களுக்கான பெரிய மதகுகளைத் திறந்துவிட எங்களை அனுமதியுங்கள் என்று பெரிய எழுத்துக்களில் தலைப்பு! […]

அந்த மாணவி எங்கே சென்றாள்..?

ஒரு விதமான அச்சமும் பதட்ட மும் கூடிக்கிடந்த பள்ளி நிலத்திற் குள் மின்னலென மாலை 4 மணிக்கு அந்த மாணவி நுழைந்தாள். நுழைந் தவள் கதறி அழத் துவங்கினாள். இப்படி இனிமேல் செய்ய மாட்டேன் என்று ஓங்கி கதறி அழத் துவங் கினாள்.

உங்களது பாசமும், நேசமும் எங்களுக்கு இல்லையா, சுஷ்மா?

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தன்னுடைய அரசியல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி லலித் மோடி இங்கிலாந்திலிருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு ரகசிய மாக உதவியுள்ளது அம்பலமாகியுள்ளது.